நல்ல குழந்தைகள் பிறக்க…

பல ஆண்டுகளாக குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக பல புண்ணியத் தலம் சென்றும் குழந்தைப்பேறு தாமதமாக உள்ளவர்கள் இந்தப் பதிகத்தைப் பக்தியோடு பாராயணம் செய்ய நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு செய்து வர நற்பலனுண்டாம்.

இதுபற்றி பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம்.” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

வேற்குழவி வேட்கை

வீடியோ லிங்க :

http://www.youtube.com/watch?v=ZRY1U8Mdobw

******

ரமணாஞ்சலி

இன்று பகவான் ரமண மஹர்ஷியின் 63வது ஆராதனை குருபூஜை விழா. அவர் அருள் நம் எல்லோர் மீதும் பொழிவதாக!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

பகவான் ரமணர்
பகவான் ரமணர்

ரமணாஞ்சலி

பாடல் : அரவிந்த்

அடித்தாலும் அணைத்தாலும்
உனையன்றித் துணையேது ரமணா
நீயே என்றும் அடைக்கலம்
நினதருளே எனக்கு துணைக்கரம்

அடித்தாலும் அணைத்தாலும்
உனையன்றித் துணையேது ரமணா
நீயே என்றும் அடைக்கலம்
நினதருளே எனக்கு துணைக்கரம்

அருள்விழியாய் எம்மை நோக்குவாய்
பாவங்கள் அனைத்தும் போக்குவாய்
அருள்விழியாய் எம்மை நோக்குவாய்
பாவங்கள் அனைத்தும் போக்குவாய்

குருவுருவாய் நின்று அருளுவாய்
குருவுருவாய் நின்று அருளுவாய்
குறைகள் எல்லாம் அறவே விலக்குவாய்

                                                                                                    (அடித்தாலும்….)

மனமென்னும் மாயோனை மாய்த்திடுவாய்
மனமற்ற மனமடைய வழி தருவாய்
மனமென்னும் மாயோனை மாய்த்திடுவாய்
மனமற்ற மனமடைய வழி தருவாய்

தூயவனாய் என்னை ஆக்கிடுவாய் – என்றும்
தூயவனாய் என்னை ஆக்கிடுவாய்
நான் யார் என்று காட்டிடுவாய் – எனக்கு
நான் யார் என்று காட்டிடுவாய்

                                                                                                    (அடித்தாலும்….)

நின் அருள்சோதி தனை அடைய
வரம் தருவாய் – நின் அருள்சோதி
தனை அடைய வரம் தருவாய்
நீயாக என்னை நீ மாற்றிடுவாய்

                                                                                                        (அடித்தாலும்….)

ramanan

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

*************