அகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்

தஞ்சையில் இருக்கும் அகத்திய சித்தர் அருட்குடிலில் நாளை (20-08-2017) ஜீவநாடி ஜோதிட, ஆன்மீக சத்சங்கம் நடக்க உள்ளது. காலை 8.30 மணிக்கு மேல் நிகழ்வுகள் துவங்கும். காலை உணவு, தேநீர், மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

ஆன்மீகம் குறித்த, ஜீவநாடி ஜோதிடம் குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். ஆன்மீக, ஜோதிட ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்க.

இது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப அறிவுரைகள், பலன்கள், வழிமுறைகள் கிடைக்கும்.

அனுமதி இலவசம்.

முகவரி :
Siddhar Arut Kudil
No.8,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7

செல்லும் வழி :

தஞ்சை புதிய, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இவ்விடத்திற்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கியும் அருட் குடிலுக்குச் செல்லலாம்.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி, பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

மேலும் தொடர்புக்கு : திரு. கணேசன் – மொபைல் எண் : 9443421627

***

பேச்சாளரும் சிங்கமும்

ஒரு பேச்சாளர் காட்டு வழியாப் போயிட்டிருந்தார். அப்போ ஒரு சிங்கத்துக் கிட்ட மாட்டிக்கிட்டார். சிங்கம் அவரைத் தின்னப் போறதாச் சொல்லி மிரட்டிச்சு. அவரும் பதறிப் போய், “ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காக ரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிடுமே”ன்னு சொல்லிப் புலம்பினார்.

உடனே சிங்கம், ”ஓ.. நீ பேச்சாளரா? அப்படின்னா உன் பேச்சால என்னை மயக்கு பார்க்கலாம்” அப்படின்னது.

அவர் உடனே, “பெரியோர்களோ, தாய்மார்களே, சிங்கங்களே, கரடிகளே”ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் பேசினார்.

கேட்டுக்கிட்டே இருந்த சிங்கம் திடீர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்திருச்சி.

பேச்சாளர் ”அப்பாடா தப்பிச்சோம்”னு சொல்லிக் கிட்டே ஓடிப்போனார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் எழுந்திருச்ச சிங்கம், “அப்பாடா… நல்ல வேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன். இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னிருப்பான்”னு சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.

ஒரு பேச்சு எப்படி இருக்கக் கூடாதுங்கறதுக்கு இந்தச் சின்னக் கதை ஓர் உதாரணம்.

கதையைச் சொன்னவர் : பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.