நம்ப முடியாத அதிசயங்கள் – மின்னூல்

வணக்கம்

எல்லாரும் நலம் தானே!

ரொம்ப நாளாச்சு இங்கு பதிவுகள் இட்டு.

இந்த வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்னூலாகியுள்ளன.

namba

அதை இந்தச் சுட்டியிலிருந்து பதிவிறக்கிப் படிக்கலாம்.

இந்தக் கட்டுரைகளை எழுதியபோது பின்னூட்டமளித்து ஊக்கமளித்த நண்பர்கள் பா. முருகையன், புதுகை அப்துல்லா, சுமன், தோழி, திண்டுக்கல் தனபாலன் மற்றும் பலருக்கும் மிக்க நன்றி.

இதனை நீங்கள் படிக்கலாம். பகிரலாம். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம். ஆனால் அனுமதி இல்லாமல் அச்சாக்கவோ, பிரதி எடுக்கவோ, காபி- பேஸ்ட் செய்து நூலாக வெளியிடுதலோ கூடாது.

இதனை இங்கே குறிப்பிடக் காரணம், இந்த வலைப்பூவில், எனது சொந்த முயற்சியில் தேடலில் உருவான கட்டுரைகளை பிரபல எழுத்தாளர் ஒருவர் அப்படியே காபி – பேஸ்ட் செய்து (நான் செய்திருக்கும் எழுத்துப் பிழைகளையையும், பெயர் பற்றிய பிழைகளையும் கூட அப்படியே காபி அடித்து) முன்னே, பின்னே கொஞ்சம் விஷயங்களைச் சேர்த்து புத்தகமாக்கி வெளியிட்டு விட்டார். (அதைப் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்)

இதனை அந்த பிரபல எழுத்தாளர் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகும் ’கள்ள மௌனம்’ சாதித்து விட்டுச் சும்மா இருந்து விட்டார். சம்பந்தப்பட்ட பதிப்பகம் எங்களுக்குத் தெரியாது எழுத்தாளரைக் கேளுங்கள் என்று சொல்லி விட்டது. எழுத்தாளரோ கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியோ வெட்கமோ இல்லாமல் தனது பணிகளை வழக்கம் போல் செய்து கொண்டிருக்கிறார். அடுத்தவரின் உழைப்பைத் திருடிப் பிழைப்பவர்களை… மற்றவரின் சிந்தனையில் தோன்றிய விஷயங்களுக்குத் தாங்கள் சொந்தம் கொண்டாடுபவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது….

வேறு வழியில்லாமலேயே இதனைப் பற்றி இங்கே குறிப்பிட நேர்ந்தது. மன்னிக்கவும்

மற்றபடி நூலைப் படித்துவிட்டு அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றி

12 thoughts on “நம்ப முடியாத அதிசயங்கள் – மின்னூல்

  1. இறைவன் என்னும் பெரு மரத்தின் கிளைகள் தான் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பார்சி, பௌத்தம், ஜைனம் எல்லாம். ஆகவே “எல்லாம் ஒன்றே” இராமனும் அல்லாவும் ஒருவரே!நான் இந்துதான். ஆனால் நான் ஒரு அத்வைதி. ஆகவே “ஸர்வம் பிரம்ம மயம்” ’ “எல்லாம் ஒன்றே”;

    1. ஆம். மோகன்ராஜ் அவர்களே! உண்மை. அதைத் தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன். வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

        1. dear sir
          enkku 25 year
          im a girl
          naan sinna vajathil erunthu nirija sokanka odai valuran
          enakku kathu keppathum sirithu kuraivu pokka poka kekkum thanmi kuraithu kondu pokuthu.

          hospithal la kaddeum pirijosanam ellai.
          keddal narampu sejal elanthu pokuthu endu solenam
          operaesan sithal mulai pathikkumam endu sollurankal doctors.
          naan rompa alaka eruppan
          alorukkum help pannuvan
          aanalum enakku ethalai rompa kavalija erukku.
          ennalai ondum seija mudejamal erukku.

          naan srilanka.
          please enakku help panuka
          naan sukamadaij enna sijalam?
          ethavathu vali solluko please.
          ennala padykka kuda mudyjamal viduddan
          A/L la biosience padyththen
          now summa erukuran.

          enakku 7 th place sevvai erukku
          naan 01.09.1990.piranthanaan
          time 12.26 pm
          purada star

          wedding propose pannenal varrathu ellam poruththm ellai endu kulamputhu.
          y eppady enathu life la niraija sokama erukku?
          14 year la missed my father
          20 year la missed my sister
          I have not brothers
          now i have only mom.
          naan thanimaiel kavalaija anupavikkuran ija.
          please enakku help pannuko pz
          pz my email ku replay pannuko

          thank you

  2. இப்படி மொட்டை ’எழுத்தாளர்’னு சொன்னா எப்படி?
    யாருங்க அந்த “ப்ராப்ள” எழுத்தாளன்?
    சொல்லுங்கண்ணே சொல்லுங்க
    சொல்லுங்கண்ணே சொல்லுங்க

    1. மிக்க நன்றி அப்துல்லா சார். உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கம் தருகிறது. தமிழகத்தில் வாழ்ந்த சூஃபி ஞானிகளைப் பற்றி, தர்காக்களைப் பற்றி (நாகூர், காட்டுப்பாவா பள்ளிவாசல், பிரான்மலை பாவா, சென்னை பாவா) எழுத ஆவல் உண்டு. இறைவன் அருள் புரிய வேண்டும்.

        1. ஆம். நண்பரே, நான் இந்துதான். ஆனால் நான் ஒரு அத்வைதி. ஆகவே “ஸர்வம் பிரம்ம மயம்” ’ “எல்லாம் ஒன்றே”;

          நன்றி

            1. இறைவன் என்னும் பெரு மரத்தின் கிளைகள் தான் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பார்சி, பௌத்தம், ஜைனம் எல்லாம். ஆகவே “எல்லாம் ஒன்றே” இராமனும் அல்லாவும் ஒருவரே!

              ஓம் சாயிராம்

              அல்லா மாலிக்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.