அய்யனார் யார்? – 2

தர்ம சாஸ்தா

சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து பட, அவள் பாசாண்ட சாத்தனை வேண்ட, அவள் துயர் துடைக்க அச்சாத்தன் குழந்தையாக அவதரித்து, பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து, பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பாளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்திகள் சிலம்பில் காணக் கிடைக்கின்றன.

கருப்பண்ணசாமி

மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. (அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. அவரைப் போன்ற வேறு சில சிறுதெய்வங்களுக்கும் இதே வகை வழிபாடு உண்டு)

கருப்பர்

மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.

வழிபாடு

மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.

யானை வாகனம்

மற்றுமொரு முக்கியமான விஷயம் கிராமங்களில் இப்போதும் அய்யனாருக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு விழாவில் கண்டிப்பாக மழை பெய்யாமல் இருக்காது. விழா நாளனறு மேகம் இருண்டு காற்றும் தூறலும் வீசுதல் என்பது பெரும்பாலும் நடக்கும் சம்பவம். மழைக்கடவுள் இந்திரன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புரவிகள்

அப்படியானால் இந்திர வழிபாடே பிற்காலத்தில் அய்யனார் வழிபாடாக மாறியுள்ளதா? அப்படியானால் அய்யப்பன் யார்? அய்யப்ப வழிபாடு பற்றி பண்டை இலக்கியங்கள் ஏதும் கூறவில்லையே ஏன்? அவ்வழிபாடு எப்போது தோற்றம் பெற்றிருக்கும்? அதற்கும் அய்யனார் வழிபாட்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?

(தொடரும்)

6 thoughts on “அய்யனார் யார்? – 2

  1. எங்கள் குலதெய்வம் அய்யனார் நெடுங்காலமாக பின்பற்றி வருகிறோம்… தயவுசெய்து யூ டியூப் சேனல் ஆட்கள் ஆய்வு செய்து பெயர்களை உச்சரியுங்கள் சிலர் வடகத்தான் வழி வந்த கூட்டம் சமஸ்கிருத பாஷையை எங்கள் தமிழ் குலதெய்வ பெயர்களில் புகுந்து கின்றனர்….. உண்மை பெயர் பூரணி ஐய்யனார் பொற்கலை‌ என்பது …வாழ்க வளர்க தமிழர் பண்பாடு…

  2. அய்யன் ஐயப்பன் இரண்டு ஒன்றா மற்றும் எங்கள் குல தெய்வம் கடந்த 30 ஆண்டு காலமாக கும்பிட முடியவில்லை நாங்கள் மீண்டும் எங்கள் குல தெய்வம் கும்பிட எதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா

  3. http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_23.html இதிலிருந்து காப்பியடித்து நீ எழுதியிருக்கிறாய். நீ ஒரு திருடன். அயோக்யன். பார்ப்போம், இந்தப் பின்னூட்டம் வெளியாகிறதா என்று திருட்டுப் பயலே

    1. யாரய்யா திருடன்? ஏன் இப்படி உளறுகிறாய்? உனது அறிவுத் திறன் கண்டு வியக்கிறேன். நீர் சொன்ன பதிவைப் பார்த்தேன். அது பதிவான நேரத்தையும் பார்த்தேன். நான் வலைப்பதிவேற்றிய பின் தான் அது எழுதப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல; எனது இந்தக் கட்டுரையின் ஒரு பகுதி ஏற்கனவே 2004ல் ஒரு மடற்குழுவில் நான் எழுதியதுதான். பத்திரிகை ஒன்றிலும் வெளியானதுதான். அதன் விரிவுதான் இந்தத் தொடர் கட்டுரை. சும்மா ஒன்றும் புரியாமல் உளறுவதே உங்களது வேலையாகப் போய் விட்டது. இந்த மாதிரித் திருட்டுப்பதிவு எழுதுபவர் வேறு ஒருவர் இருக்கிறார். எனது வலைப்பூவிலிருந்து திருடி, தான் எழுதியது மாதிரி வேலையையே, சில முறை எச்சரித்தும் அவர் மிக வினோதமாக, அலட்சியமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போய்க் கேளுங்கள். இங்கு வந்து உளறிக் கொட்டிக் கொள்ள வேண்டாம். உஜிலாதேவி பதிவிற்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமல்ல; இவையெல்லாம் முன்னரே எழுதி ஷெட்யூல் செய்யப்பட்டவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையான திருடனை விட்டு விட்டு இங்கு வந்து உளறிக் கொண்டிருக்க வேண்டாம்.

      1. நீங்கள் சொல்வது உண்மை. அந்தத் திருட்டு வலைப்பதிவாளர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவரது ’அமானுஷ்யம்’ என்ற வலைப்பூவே பிரபலமானவர்களின் பதிவுகளிலிருந்து திருடி எழுதப்படுவதுதான். நண்பர், பிரபலபதிவர் சரவணன் (உண்மைத்தமிழன்) வலைப்பூவிலும் இதே போல குளறுபடி செய்து அவமானமடைந்தார். உடனே ’உண்மைதமிழன்’ என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்டு (த்) எடுத்து விட்டு மீண்டும் தன் கைவரிசையைத் தொடர்ந்தார். சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத இந்த முட்டாள் பசங்களைப் பற்றி எழுதி உங்கள் நேரத்தை விரயமாக்காதீர்கள். அந்தப் பதிவைச் சுட்டினால் நேரே ‘உஜிலாதேவி’ தளத்திற்குச் செல்கிறது. உஜிலாதேவிக்கு ஹிட்ஸ் கிடைக்கவும் அதன் மூலம் காசு சம்பாதிக்கவும் இப்படி ஒரு ஏற்பாடு போல. நீங்கள் அந்த வலைப்பதிவரைப் பற்றி உஜிலாதேவி தள நிர்வாகி யோகி ராமானந்த குருவிடம் புகார் செய்யலாமே!? இல்லாவிட்டால் ’சைபர் க்ரைம்’ !? அப்போதுதான் இவனுங்க அடங்குவானுங்க சார்.

        1. sarveesh.

          போனால் போகட்டும். திருந்தாத ஜென்மங்களிடம் நாம் பேசிப் பயனில்லை. அவர் தர்மத்தை அவர் செய்கிறார். நம் தர்மத்தை நாம் செய்வோம். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.