முருகன் பாமாலை

ஸ்கந்த ஷஷ்டியை முன்னிட்டு சில முருகன் பாடல்கள்/துதிகள்


 

 

குறை தீர்க்கும் குமரன்

 

அருணகிரிநாதர் திருப்புகழ்

 

நாத விந்து கலாதி நமோ நம

வேத மந்திர ஸ்வரூபா நமோ நம

ஞான பண்டித ஸ்வாமி நமோ நம –  வெகுகோடி

 

நாம சம்பு குமாரா நமோ நம

போக அந்தரி பாலா நமோ நம

நாக பந்த மயூர நமோ நம –  பரசூர

 

சேத தண்ட வினோதா நமோ நம

கீத கிண்கிணி பாதா நமோ நம

தீர சம்பிரம வீரா நமோ நம – கிரிராஜ

 

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம –  அருள்தாராய்

 

ஈதலும் பல கோலால பூஜையும்

ஓதலும் குண ஆசார நீதியும்

ஈரமும் குரு சீர்பாத சேவையும் – மறவாத

 

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை

சோழ மண்டல மீதே மனோஹர

ராஜ கம்பீர நாடாளு நாயக –  வயலூரா

 

ஆதரம் பயிலாரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முன்னாளதில்

ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி

 

ஆதி அந்தவுலாவாசு பாடிய

சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் –  பெருமாளே…

 

பாடலைக் கேட்க

 

 

வள்ளிக் கணவன் பேரை

 

வள்ளிக் கணவன் பேரை

வழிப் போக்கர் சொன்னாலும்

உள்ளம் குழையுதடி – கிளியே

ஊனும் உருகுதடி – கிளியே

ஊனும் உருகுதடி!

 

மாலை வடி வேலவர்க்கு

வரிசையாய் நானெழுதும்

ஓலைக் கிறுக்காச்சுதே – கிளியே

உள்ளமும் கிறுக்காச்சுதே!

கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே!

(வள்ளிக் கணவன் பேரை..)

 

காட்டுக் கொடி படர்ந்த

கருவூரின் காட்டுக்குள்ளே

விட்டுப் பிரிந்தானடி – கிளியே

வேலன் என்னும் பேரோனடி

கிளியே வேலன் என்னும் பேரோனடி!

 

கூடிக் குலாவி மெத்த

குகனோடு வாழ்ந்த தெல்லாம்

வேடிக்கை அல்லவடி – கிளியே

வெகு நாளின் பந்தமடி!

கிளியே வெகு நாளின் பந்தமடி

(வள்ளிக் கணவன் பேரை..)

 

மாடுமனை போனாலென்ன?

மக்கள் சுற்றம் போனாலென்ன?

கோடிச் செம்பொன் போனாலென்ன? – கிளியே

குறுநகை போதுமடி!

கிளியே முருகன் குறுநகை போதுமடி!

 

எங்கும் நிறைந் திருப்போன்!

எட்டியும் எட்டா திருப்போன்!

குங்கும வர்ணனடி – கிளியே

குமரப் பெருமானடி!

கிளியே குமரப் பெருமானடி

 

வள்ளிக் கணவன் பேரை

வழிப் போக்கர் சொன்னாலும்

உள்ளம் குழையுதடி – கிளியே

ஊனும் உருகுதடி – கிளியே

ஊனும் உருகுதடி

 

பாடலைக் கேட்க

 

 

அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து

 

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்

புனை தீரன் அயில் வீரன்

தீரன் அயில் வீரன்

 

வண்ண மயில் முருகேசன் – குற

வள்ளி பதம் பணி நேசன் – உரை

வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்

வரவாதே சொல் வன்மாதே

 

சன்னிதியில் துஜஸ்தம்பம் – விண்ணில்

தாவி வருகின்ற கும்பம் – என்னும்

சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்

தாங்கும் உயர்ந்தோங்கும்

 

அருணகிரி நாவில் பழக்கம் – தரும்

அந்தத் திருப்புகழ் முழக்கம் – பல

அடியார்கணம் மொழிபோதினில்

அமராவதி இமையோர்செவி

அடைக்கும் அண்டம் புடைக்கும்

அடைக்கும் அண்டம் புடைக்கும்

 

கருணை முருகனைப் போற்றி – தங்கக்

காவடி தோளின்மேல் ஏற்றி – கொழும்

கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி

காண்பார் இன்பம் பூண்பார்

காண்பார் இன்பம் பூண்பார்

 

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்

புனை தீரன் அயில் வீரன்

தீரன் அயில் வீரன்

 

பாடலைக் கேட்க

 

 

ஓம் சரவண பவ!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.