பேச்சாளரும் சிங்கமும்

ஒரு பேச்சாளர் காட்டு வழியாப் போயிட்டிருந்தார். அப்போ ஒரு சிங்கத்துக் கிட்ட மாட்டிக்கிட்டார். சிங்கம் அவரைத் தின்னப் போறதாச் சொல்லி மிரட்டிச்சு. அவரும் பதறிப் போய், “ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காக ரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிடுமே”ன்னு சொல்லிப் புலம்பினார்.

உடனே சிங்கம், ”ஓ.. நீ பேச்சாளரா? அப்படின்னா உன் பேச்சால என்னை மயக்கு பார்க்கலாம்” அப்படின்னது.

அவர் உடனே, “பெரியோர்களோ, தாய்மார்களே, சிங்கங்களே, கரடிகளே”ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் பேசினார்.

கேட்டுக்கிட்டே இருந்த சிங்கம் திடீர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்திருச்சி.

பேச்சாளர் ”அப்பாடா தப்பிச்சோம்”னு சொல்லிக் கிட்டே ஓடிப்போனார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் எழுந்திருச்ச சிங்கம், “அப்பாடா… நல்ல வேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன். இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னிருப்பான்”னு சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.

ஒரு பேச்சு எப்படி இருக்கக் கூடாதுங்கறதுக்கு இந்தச் சின்னக் கதை ஓர் உதாரணம்.

கதையைச் சொன்னவர் : பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

Advertisements