சில நேரங்களில் சில திருட்டுக்கள்…

திருட்டு இவ்வுலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் அறிவுத்திருட்டு என்பது புதுமைப்பித்தன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருவது. “ரசமட்ட” கட்டுரைகளை எழுதி அவர் கல்கியைத் தாக்க, கநாசுவோ, புதுமைப்பித்தனின் கதைகளில் சில கூட “தழுவல்”தான் என்று வெளிப்படுத்த, அக்கால இலக்கிய உலகம் இரண்டுபட்டது.

இந்த ”அறிவுத் திருட்டு” இன்றும் தொடர்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கிறது. ”அப்படியே காப்பி அடித்து விட்டார்”, ”அனுமதி பெறாமல் மொழி மாற்றி வெளியிட்டு விட்டார்”, “டவுன்லோட் எழுத்தாளர்” என்றெல்லாம் பல எழுத்தாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன.

இதோ சமீபத்திய ஒன்று.

ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து, நேரம் செலவழித்து பத்திரிகையில் ஒரு தொடரை எழுதுகிறார். அதை புத்தகமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அதற்காகக் காத்திருக்கிறார். ஆனால் அதற்குள் வேறு ஒரு “பிரபல” எழுத்தாளர், கூசாமல், நோகாமல், எழுதியவரிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், எழுதியவருக்கு எந்தவிதத தகவலும் தெரிவிக்காமல் அதில் உள்ள பல கட்டுரைகளை அப்படியே காபி – பேஸ்ட் செய்து, (கட்டுரைகளில் வரும் பெயர்களின் எழுத்துப் பிழைகளைக் கூட விட்டுவைக்கவில்லை, அப்படியே காபி – பேஸ்ட்) முன்னும் பின்னுமாக பல கட்டுரைகளை, தகவல்களைச் சேர்த்து ஒரு புத்தகமாகப் போட்டு விட்டார். இத்தனைக்கும் அவர் “பிரபல” எழுத்தாளர். பல புத்தகங்கள் எழுதியவர். தமிழக அரசின் விருதுகளும் பெற்றவராம்.

அந்த நூலில் உள்ள கட்டுரைகள் பலவும் ”ஆவிகள் உலகம்” மாத இதழில் தொடராக வெளியானவை. சில, பல கட்டுரைகள் இந்த வலைப்பூவிலும் வெளியானவை.

இம்மாதிரியான செயல்கள் வன்மையாக கண்டிக்கத் தகுந்தவை. வலைப்பூவில் ”இதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும்” என்று குறிப்பிட்டிருக்கும்போது, அதையும் மீறி காபி அடிப்பது காபிரைட் சட்டப்படி குற்றமாகும். ஆனால், அதையெல்லாம் யார் இங்கு கவனிக்கிறார்கள்?

எந்தவித உழைப்பும் இல்லாமல் அடுத்தவன் படைப்பை தனதாக்கிக் கொள்பவர்களை என்ன செய்யலாம்?

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால், உண்மையாக தாங்கள் எழுதும் ”ஆன்மீகம்” மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதன்படி நடக்கட்டும்.

வாழ்க வளமுடன்.

அது குறித்த விவாதங்களை நீங்கள் கீழே உள்ள முகவரியில் பார்க்கலாம். நீங்களும் விரும்பினால் இங்கேயோ அல்லது அங்கேயோ கருத்து தெரிவிக்கலாம்.

https://www.facebook.com/arvindswam/posts/855121644502371

https://www.facebook.com/photo.php?fbid=855612647786604&set=a.219115151436360.68926.100000136305418&type=1

நன்றி

(தொடர்புடைய பதிவு : இணையத் திருடர்கள் : https://ramanans.wordpress.com/2011/05/23/1462/)

இணையத் திருடர்கள்

இணையத் திருடர்கள்

 முதலில் இதைப் பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி இதை அவசியம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் வேறு வழியின்றி இதை எழுதுகிறேன்.

”திருட்டு” அதுவும் எழுத்துத் திருட்டு என்பது அந்தக் காலம் முதலே தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சாதாரண எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் பல பிரபல எழுத்தாளர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ’கல்கி’யின் பல எழுத்துக்கள் மேலை நாட்டு எழுத்துக்களின் மூலங்களைத் தழுவியவர் என ‘ரசமட்டம்’ என்ற புனைபெயரில் புதுமைப்பித்தன் குற்றம்சாட்டினார். (ஆனால் அதே கல்கிதான் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின் அவருக்காக நிதி திரட்டினார். விழா ஏற்பாடுகளுக்கு உதவினார்.) க.நா.சு.வோ புதுமைப் பித்தனின் பல கதைகள் ஆங்கில இலக்கியத்திலிருந்து உருவி தமிழ் செய்யப்பட்டவை என்று தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலத்து சுஜாதா, சுபா போன்றோரும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்ப முடியவில்லை. சமீபத்தில் ”எந்திரன்” படத்தின் மூலக் கதை என்னுடையதுதான் என எழுத்தாளர் ஆர்னிகாநாசரும், தமிழ்நாடன் என்ற மற்றொரு எழுத்தாளரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதுபோல சமீபத்தில் வெளியான ’பயணம்’ படத்தின் திரைக்கதை, பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான தனது ”இது இந்தியப் படை” என்ற நாவலை அப்படியே ஒத்திருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். அதுபோல ராஜேஷ்குமாரின் பல கதைகள் சுடப்பட்டு திரைப்படங்களாகியுள்ளன என்ற கருத்தும் உண்டு.

ஆக, அறிவுத் திருட்டு என்பது யார் என்னென்ன சொல்லியும், அதைப் பற்றிய எவ்வித அக்கறையில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு இணையமும் விதிவிலக்கில்லை.

கட்டுப்பாடற்ற சுதந்திர வெளியான இணைய உலகில் தனிப்பட்ட ஒருவரது எழுத்திற்கு ’காபிரைட்’ எல்லாம் வைத்து உரிமை கோருவது மிகக் கடினம் என்றாலும், ஒரு படைப்பு வேறொருவரின் தளத்திலிருந்து எடுத்தாளப்படுமாயின் அந்த தளத்திற்கான சுட்டி (லிங்க்) தரப்படுவதுதான் இணைய உலக நாகரிகம். மனிதப் பண்பும் கூட.

ஆனால் அது நடக்கிறதா? குறிப்பாக இந்த இதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும். என்று கேட்டுக் கொண்டும் கூட, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், ஒரு வலைப்பூவின் தகவல்களைத் திருடுவதை, எழுத்துத் திருட்டை சிலர் மேற்கொள்வது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.

நல்ல விஷயங்கள் நாலு பேருக்குச் சென்றடைவதில் தவறில்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் யாரோ ஒருவர் எழுதிய எழுத்தைத் திருடி, அதை தனது வலைப்பதிவில் தன் பெயருடன் வெளியிடுவது எப்படி நியாயமாகும்? அதுவும் எழுதியவரின் பெயரைக் குறிப்பிடாது, அவரது தளத்தின் சுட்டியையும் குறிப்பிடாது, அவர் செய்திருக்கும் எழுத்துப் பிழைகளைக் கூட அப்படியே காப்பி அடித்து தான் தான் உழைத்து அதை உருவாக்கியது போல வெளியிடுவது எவ்வளவு கேவலமான விஷயம்?

அதிலும் கொடுமை, அது போன்ற பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு, அந்தப் பதிவைத் தாங்கள்தான் என்னவோ கஷ்டப்பட்டு உழைதது உருவாக்கியது போல் பெருமையோடு மறுமொழி அளிப்பது. கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகம் அற்றவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பது திண்ணம்.

எனது வலைப் பதிவில் உள்ள பல விஷயங்கள் எனது அனுபவத்தின் வெளிப்பாடுகள். சில நான் படித்தவை. சில நான் அறிந்தவை. சில எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவை. சில ஆங்கிலத்திலிருத்து மொழி பெயர்த்தவை. சில எனது ஆராய்ச்சியின் விளைவுகள். எது எப்படியாக இருந்தாலும், பிறரது தகவல்களை நான் கையாண்டிருந்தால் அது பற்றிய சுட்டிகளை நான் தவறாது கொடுத்தே வந்திருக்கிறேன். (சான்றாக தென்றல் தளம், Reincarnation பற்றிய ஆங்கிலத் தளங்களைச் சொல்லலாம்)

இவ்வாறு அவற்றை நான் நேரம் ஒதுக்கி, டைப் செய்து, சரிபார்த்து வெளியிட – சிலர் நோகாமல் நுங்கு தின்பது போல் – அதை திருடி தங்கள் பதிவாக வெளியிடுவது எப்படி உள்ளது என்றால் “அடுத்தவன் குழந்தைக்கு நான் தான் தகப்பன்”  என்று சொல்லும் பேடியின் செயலைப் போல் உள்ளது. பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டும் சிலர் அதனை மதியாது “திருட்டு வேலை” செய்வது அவர்களது ஈன புத்தியையே காட்டுகிறது. (அவர்கள் சாமியோ, ஆசாமியோ, பக்தனோ, பித்தனோ திருடன் திருடன் தான். திருட்டு, திருட்டுதான்)

கீழே அப்படித் திருடி வெளியிடப்பட்ட எனது கட்டுரைகளுக்கான சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன்.

வள்ளலாரின் வாழ்வில்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_5925.html

கிரிவலம்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_3197.html

விரதம்

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_7060.html

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_713.html

பார் போற்றும் பர்வத மலை

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_813.html

லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம்

http://agatiyaradimai.blogspot.com/2011/02/blog-post_10.html

ஓலைச்சுவடிகள்

http://amanushyam.blogspot.com/2011/04/blog-post_3232.html

ஆவிகள் உலகம்

http://amanushyam.blogspot.com/2011/04/ghost-world.html

கல்பனா சாவ்லா

http://amanushyam.blogspot.com/2011/03/blog-post_21.html

சந்யாசி தந்த ஆரஞ்சு பழம்

http://amanushyam.blogspot.com/2011/03/blog-post.html

கல்பனா சாவ்லாவின் மறுபிறவி

http://www.eegarai.net/t40398-topic

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=12509.0

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் பல ஆன்மீக ஞானிகள்

http://srikanmani.blogspot.com/2010/10/blog-post_18.html

ஹனுமான் சாலீஸா

http://agatiyaradimai.blogspot.com/2011/01/blog-post_8528.html

மற்றும் பல கட்டுரைகள்

 http://amanushyam.blogspot.com/2011/05/blog-post_2561.html

 http://amanushyam.blogspot.com/2011/04/2_29.html

ஆதாரத்திற்கு சில இமேஜ்கள்…

அமானுஷ்யம்

சந்யாசி தந்த ஆரஞ்சு பழம்

வானத்தில் பறந்த பெண் சித்தர்

கல்பனா சாவ்லா திருட்டுப் பதிவு

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் மற்றும் பல

கல்பனா சாவ்லா

விரதம் திருட்டுப் பதிவு

பாம்பன் சுவாமிகள் திருட்டுப் பதிவு

பின்னூட்ட ப்ரதாபம்

முற்பிறவிப் பதிவுத் திருட்டு

இதைப் பாருங்க—-

https://ramanans.wordpress.com/2010/11/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

அப்படியே இதையும் நல்லாப் படிச்சுப் பாருங்க…

http://www.maalaimalar.com/2011/02/12132941/tiruvannamalai-arunachaleswara.html

நான் என்னத்தச் சொல்ல? அட வலைப்பூக்காரர்கள்தான் இப்படி என்றால் பத்திரிகைக்காரர்களும் கூடவா? இணையதளத்தின் பெயரைக் குறிப்பிட்டால் குறைந்து போய் விடுவார்களோ?  இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் என்னால் இங்கே குறிப்பிட இயலவில்லை. ’காய்த்த மரம் கல்லடி படும்’ என்பது போல சிலரது இந்தச் செயல் இருக்கிறது. பதிவுகள் போடுவதை நிறுத்தி விடலாமா என்றும் கூடச் சமயத்தில் தோன்றுகிறது. ஒரு கட்டுரையே சுயமாக உழைத்து சிந்தித்து எழுத இயலாதவர்களுக்கு, நேர்மையற்றவர்களுக்கு எப்படி ஆண்டவனும், அருள்ஞானிகளும், அகத்தியர் போன்ற மகரிஷிகளும் உதவ முடியும்? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்ற வேண்டியதுதான். இவர்களுக்காக இரக்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வது? கடுமையான சொற் பிரயோகங்களாலாவது தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

இருக்கும் வேலையையே செய்ய இயலாத நிலையில் மேற்கண்டவற்றைத் தேடி எடுத்து நேரம் ஒதுக்கி எழுதியிருக்கிறேன். இதற்கு உதவிய “சைபர்” நண்பர்களுக்கு நன்றி. இனிமேலாவது திருட்டு எழுத்தர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

(இந்தப் பதிவை ஒருமாதிரி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியிருக்கிறேன். மனம் சமனமான பிறகு மீண்டும் வருகிறேன்)