அ.தி.மு.க. 131 இடங்களில் வெற்றி பெறும் என்று ஏப்ரலிலேயே கணித்துச் சொன்ன ஜோதிடர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. வாழ்த்துக்கள். இது குறித்து கருத்துக் கணிப்பு வெளியிட்ட நாளிதழ்கள், பத்திரிகைகளும் சரி, தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, இந்த இந்தக் கட்சி இவ்வளவு இவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று சரியாகக் கணித்துச் சொல்லவில்லை. கூடுதலாகவோ, குறைவாகவோதான் சொல்லியிருந்தனர். சரியாகக் கணித்துச் சொல்ல முடியாத அளவுக்குக் கடும் போட்டி நிலவிய தேர்தல் இது. தி.மு.க ஜெயிக்கும் என்று சில ஊடகங்களும் அ.தி.மு.க ஜெயிக்கும் என்று சில ஊடகங்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தன.

ஆனால், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோதிடர் அகத்தியராஜ் (எ) காளிராஜ் கடந்த ஏப்ரல் 7 அன்றே, அந்த அலை இந்த அலை என்று எந்த அலைகளும் வீசாத நேரத்தில் அ.தி.மு.க 131 இடங்களைப் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

admik win1

அதன்படி 2016 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகச் சரியாக 131 இடங்களைப் பெற்றுள்ளது. (மூன்று இடங்களைக் கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ளன) இந்த அளவுக்குத் துல்லியமாக, அ.தி.முக இவ்வளவு இடங்கள் தான் பெறும் என்று இதற்கு முன் எந்த ஜோதிடரும் கணித்துச் சொன்னதாகத் தெரியவில்லை.

அந்த வகையில் தனது ஜோதிட மேதைமையை வெளிப்படுத்தியிருக்கும் அகத்தியராஜ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அகத்தியராஜ் அவர்களது முகநூல் பக்கம் : https://www.facebook.com/agathiya.raj.3

அவரது அலைபேசி எண் : 9944455065

 

Advertisements

வானத்தில் பறந்த குழந்தை…

வானத்தில் பறந்த குழந்தை…

என்ன தலைப்பை நம்ப முடியவில்லை அல்லவா? கதை, கப்சா விடுகிறான் என்று தோன்றுகிறதல்லவா? முதலில் இதைப் படித்து விடுங்கள்…

“ கோவை (கோவைதானா என சரியாக ஞாபகமில்லை எனக்கு. மேலும் நினைவில் இருந்தே இதனை எழுதுகிறேன்) அருகே ஒரு அம்மையார் அற்புதம் நிகழ்த்துவாகக் கேள்விப்பட்ட மறைமலையடிகளின் நண்பர் அங்கே செல்கிறார். அது ஒரு சாதாரண குடிசை வீடு. உள்ளே முருகன் முதலிய தெய்வங்களின் படங்கள். அப்போது அங்கே தங்கள் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் வருகின்றனர்.

“அம்மா, குழந்தைக்கு பழனில முடி இறக்கணும் வேண்டுதல் அதான் இங்கே வந்தேன்” என்கின்றனர்.

“ஓ. அர்ச்சனை சாமான் கொண்டு வந்தியா?”

“இதோ”

அந்தத் தட்டை வாங்கி தூக்கிப் பிடித்தபடி “முருகா” என்று சொல்லி அந்த அம்மா மேலே எறிகிறார்.

மேலே சென்ற தட்டு காணாமல் போய் விடுகிறது.

இவர் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “ம்ம் முருகனை நல்லா வேண்டிக்குங்க” என்கிறார் அந்த அம்மையார்.

அவர்கள் வேண்டிக் கொள்ள சற்று நேரத்தில் அந்த அம்மா, “முருகா முருகா” என்க அந்தத் தட்டு மறுபடியும் கீழே இறங்கி வருகிறது. அதில் உடைத்த தேங்காய், பூ, பழம் என அர்ச்சனைப் பிரசாதம்.

அடுத்து அவர்கள் நிறைமுடியோடிருக்கும் தங்கள் குழந்தையைக் கொடுக்க, அந்த அம்மாவும் அதை வாங்கி, “முருகா” என்று சொல்லி மேலே தூக்க, குழந்தையும் மறைந்து விடுகிறது.

எல்லோரும் பதைபதைத்துக் காத்திருக்க, வெகு நேரம் கழித்து அந்த அம்மா மீண்டும் “முருகா முருகா’ என்று சொல்லிக் கையை உயர்த்த குழந்தை கைக்கு வருகிறது. அழகாக மொட்டையடிக்கப்பட்டு, சந்தனம் பூசப்பெற்று.

நண்பர் திகைத்து விடுகிறார். பின்னர் மறைமலையடிகளைச் சந்தித்து விவரம் சொல்கிறார். மறைமலையடிகளும் உண்மை என்னவென்று அறிய அங்கெ செல்கிறார். அங்கே அவருக்குக் கிடைத்த அனுபவம்….

அதை அறிய கீழே படியுங்கள்…

இது கற்பனை அல்ல. திருவிகவும் இதே சம்பவத்தை  (குழந்தை வானத்தில் பறந்தது) தனது நூலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இதனைப் பெரிதாக்கிப் பாருங்கள்…

ttk

mms 1

mms 2

mms 3
ப்போ நம்ப முடியுதா? 🙂

ஆதாரம் : மறைமலை அடிகள் வரலாறு.

எழுதியவர் ஆர். பொன்னம்மாள்

வெளியீடு : கங்கை புத்ததக நிலையம்

மற்றும் 

திரு.வி,க. எழுதிய உள்ளொளி,

பாரி நிலையம் வெளியீடு

*****