விஷம் உண்ட வித்தகர்

அந்தக் காலத்தில் காலரா போன்ற நோய்கள் அடிக்கடி வரும். அதனால் பஞ்சாயத்து மற்றும் தாலுகா அலுவலர்களில் சிலர் மக்களின் நன்மைக்காக அம்மருந்துகளை தங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருப்பர். அவசர காலங்களில் அவற்றை மக்களுக்கு அளித்து நோய் தீர்க்க உதவுவர். அம்மருந்துகளில் ஒன்று “க்ளோரடைன்” என்பது. காலராவிற்கு சிறிதளவு உண்டால் இது மருந்து. அதுவே அளவுக்கு அதிகமானால் குடல் வெந்து அந்த ஆளின் மரணத்திற்குக் காரணமாகி விடும்.

தாலுகா போர்டு பிரசிடெண்ட் வெங்கட சுப்பையர் தனது வீட்டில் இம்மருந்துகளை பீரோவில் வைத்திருந்தார். அவர் வீட்டிற்கு அவ்வப்போது வந்துசெல்வது சேஷாத்ரி சுவாமிகளின் வழக்கம்.

seshu-1

ஒருநாள் வெங்கட சுப்பையர் வீட்டிற்குச் சென்றார் சுவாமிகள். பிரசிடெண்ட் அப்போது உள்ளறையில் ஏதோ வேலையாக இருந்தார். சடாரென்று அங்கிருந்த பீரோவைத் திறந்த சேஷாத்ரி சுவாமிகள், அதில் இருந்த “க்ளோரடைன்” மருந்து பாட்டில் முழுவதையும் குடித்து விட்டார். பகத்தில் இருந்த காயங்களுக்குத் தடவும் டிஞ்சர் அயோடின் பாட்டில் மருந்தையும் முழுவதுமாகக் குடித்து விட்டார். மற்றொரு பாட்டிலில் இருந்த மருந்தைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை தன் உடலிலும் தலையிலும் பூசிக் கொண்டார்.

சத்தம் கேட்டு உள்ளறையிலிருந்து வந்துபார்த்த வெங்கட சுப்பையர் திகைத்துப் போய் விட்டார். ”ஐயய்யோ… மகான் மருந்தைக் குடித்து விட்டாரே! குடலை அறுத்து விடுமே! மாற்று மருந்து ஏதும் கைவசம் இல்லையே! என்ன செய்வதென்று தெரியவில்லையே!” என மனம் பதைபதைத்துப் புலம்பினார்.

இதைக் கேட்ட சேஷாத்ரி சுவாமிகள் வழக்கம் போல சிரித்துக் கொண்டே, தனது வயிற்றையும், நெஞ்சையும் தடவினார். பின் பெரிதாக ஏப்பம் விட்டார். பின்னர் வேகமாக அந்த இடம் விட்டுச் சென்று விட்டார்.

விஷத்தையும் ஜீரணம் செய்த மகானின் அற்புத சக்தியைக் கண்டு வியந்த வெங்கட சுப்பையர் அதிசயித்து அவரை வணங்கினார். எல்லோரிடமும் இந்த அதிசய நிகழ்வைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.

உடலை வென்றவர்களை வெறும் விஷம் என்ன செய்யும்?

ஸத்குருவே சரணம்!!

4 thoughts on “விஷம் உண்ட வித்தகர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.