வணங்குகிறவன் யார், வணங்கப்படுபவன் யார்?

விரூபாஷிக் குகையில் பகவான் ரமணர் தங்கியிருந்தபோது மகான் சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி அங்கே வந்து செல்வார். இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். சில சமயம் அரிதாக ஏதாவது ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர். அவ்வாறு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது அருணாசலத்தைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

அடுத்தவர் மனதில் நினைப்பதை எளிதில் ஊகித்தறியும் சேஷாத்ரி சுவாமிகளால், ரமணரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. ஏனென்றால், தான், தனக்கு என்று தனித்த எந்த சிந்தனையும் அற்ற பரப்ரம்ம நிலையிலேயே ரமணர் எப்பொழுதும் இருந்து வந்தார்.

உடனே சேஷாத்ரி சுவாமிகள், “இது என்ன நினைக்கிறதோ தெரியவில்லையே!” என்றார் மகரிஷியைச் சுட்டிக் காட்டி.

ரமணரோ வழக்கம்போல் பதில் ஏதும் பேசாமல் இருந்தார்.

“அருணாசலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும். முக்தி உண்டு” என்றார் சேஷாத்ரி சுவாமிகள்.

ramana seshan

“சரிதான். வணங்குகிறவன் யார்?, வணங்கப்படுபவன் யார்?” என்று எதிர் வினா எழுப்பினார் ரமணர்.

“அதுதானே தெரியவில்லை” என்றார் சேஷாத்ரி சுவாமிகள் எல்லாம் தெரிந்திருந்தும் ஒன்றுமே தெரியாதவரைப் போல.

உடனே ரமணர், பிரம்ம சூத்திரம், ஞான வாசிட்டம் போன்ற நூல்களிலிருந்தெல்லாம் அத்வைத தத்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறி, ‘அகம் பிரம்மாஸ்மி” என்ற கருத்தையும் விளக்கி, “சர்வம் பிரம்ம மயம்” என்ற உண்மையை அழகாக நிலைநாட்டினார்.

இதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், ரமணரை வாழ்த்தி விட்டு, அண்ணாமலையை மேலும் பல முறை வணங்கிவிட்டுச் சென்றார்.

Advertisements

4 thoughts on “வணங்குகிறவன் யார், வணங்கப்படுபவன் யார்?

  1. பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசைசெய்யும், நேசனும் பூசைகொண்டு நியதியில் பேறுநல்கும், ஈசனும்ஆகிப் பூசையான் செய்தேன் எனுமென்போத, வாசனை யதுவுமான மறைமுத லடிகள் போற்றி” இது தமிழர் சிவபூசையிறுதியில் ஆன்ம சமர்ப்பணமாகக் கூறும் துதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s