திருட்டு எழுத்தாளர்

திருட்டு இவ்வுலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் அறிவுத்திருட்டு என்பது புதுமைப்பித்தன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருவது. “ரசமட்ட” கட்டுரைகளை எழுதி அவர் கல்கியைத் தாக்க, கநாசுவோ, புதுமைப்பித்தனின் கதைகளில் சில கூட “தழுவல்”தான் என்று வெளிப்படுத்த, அக்கால இலக்கிய உலகம் இரண்டுபட்டது.

இந்த ”அறிவுத் திருட்டு” இன்றும் தொடர்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கிறது. ”அப்படியே காப்பி அடித்து விட்டார்”, ”அனுமதி பெறாமல் மொழி மாற்றி வெளியிட்டு விட்டார்”, “டவுன்லோட் எழுத்தாளர்” என்றெல்லாம் பல எழுத்தாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன.

இதோ சமீபத்திய ஒன்று.

ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து, நேரம் செலவழித்து பத்திரிகையில் ஒரு தொடரை எழுதுகிறார். அதை புத்தகமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அதற்காகக் காத்திருக்கிறார். ஆனால் அதற்குள் வேறு ஒரு “பிரபல” எழுத்தாளர், கூசாமல், நோகாமல், எழுதியவரிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், எழுதியவருக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல் அதில் உள்ள பல கட்டுரைகளை அப்படியே காபி – பேஸ்ட் செய்து, (கட்டுரைகளில் வரும் பெயர்களின் எழுத்துப் பிழைகளைக் கூட விட்டுவைக்கவில்லை, அப்படியே காபி – பேஸ்ட்) முன்னும் பின்னுமாக பல கட்டுரைகளை, தகவல்களைச் சேர்த்து ஒரு புத்தகமாகப் போட்டு விட்டார். இத்தனைக்கும் அவர் “பிரபல” எழுத்தாளர். பல புத்தகங்கள் எழுதியவர். தமிழக அரசின் விருதுகளும் பெற்றவராம்.

காப்பியடிக்கப்பட்ட நூலில் உள்ள கட்டுரைகள் பலவும் ”ஆவிகள் உலகம்” மாத இதழில் தொடராக வெளியானவை. சில, பல கட்டுரைகள் இந்த வலைப்பூவிலும் வெளியானவை.

இம்மாதிரியான செயல்கள் வன்மையாக கண்டிக்கத் தகுந்தவை. வலைப்பூவில் ”இதில் இடம்பெறும் கட்டுரைகள் பத்திரிகை மற்றும் அச்சு ஊடகத்திற்காக உருவாக்கப்படுபவை. காபிரைட் உள்ளவை. யாரும் காபி-பேஸ்ட் செய்யக் கூடாது என அறியவும்” என்று குறிப்பிட்டிருக்கும்போது, அதையும் மீறி காபி அடிப்பது காபிரைட் சட்டப்படி குற்றமாகும். ஆனால், அதையெல்லாம் யார் இங்கு கவனிக்கிறார்கள்?

எந்தவித உழைப்பும் இல்லாமல் அடுத்தவன் படைப்பை தனதாக்கிக் கொள்பவர்களை என்ன செய்யலாம்?

கீழே சில சில புகைப்பட ஆதாரங்களை இணைத்திருக்கிறேன்.

கட்டுரை வெளியானது ஆவிகள் உலகம் இதழில் 2009ம் வருடத்தில். பிரபல எழுத்தாளரால் காபி அடிக்கப்பட்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம்  வெளியானது 2012ல் அந்த விவரங்களையும் இணைத்திருக்கிறேன்.

அசல்

திருட்டுப் பிரதி

அசல்
அசல்

திருட்டுப் பிரதி
திருட்டுப் பிரதி

                                                                                              அசல்

mary 1 mary 3 mary 4

                                                                       திருட்டுப் பிரதிகள்திருட்டுப் பிரதி

அசல்
அசல்

திருட்டுப் பிரதிகள்

திருட்டுப் பிரதி shakshi 2

இது குறித்து முக நூலில் நிகழ்ந்த விவாதங்களை நீங்கள் கீழே உள்ள முகவரியில் பார்க்கலாம்.

https://www.facebook.com/arvindswam/posts/855121644502371

https://www.facebook.com/photo.php?fbid=855612647786604&set=a.219115151436360.68926.100000136305418&type=1

மனசாட்சி என்ற ஒன்று இருந்தால், உண்மையாக தாங்கள் எழுதும் ”ஆன்மீகம்” மீது நம்பிக்கை இருந்தால் எழுத்துத் திருடர்கள் அதன்படி நடக்கட்டும். ஆனால் திருடர்களிடம் அப்படி எதிர்பார்க்கக் கூடாது இல்லையா?

நன்றி

(தொடர்புடைய பதிவு : இணையத் திருடர்கள் : https://ramanans.wordpress.com/2011/05/23/1462/)

9 thoughts on “திருட்டு எழுத்தாளர்

  1. வணக்கம் …உங்கள் வலைப்பூ உட்பட மின்நூல் அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமை.. உங்களை போன்ற எழுத்தாளர்கள் இருப்பது பலரின் அறிவுக்கு அடித்தளம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களின் அமானுசிய அதிசய பதிவுகளை எமது தளத்தில் பதிவிட உங்களது அனுமதி தேவை… உங்கள் பெயர் தளத்தில் முகவரியுடன் இதனை வெளியிட நாம் எண்ணியுள்ளோம். உங்கள் அனுமதி கிடைத்தால் மாத்திரம்.. உங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்
    செய்திஉலகம்
    ஆசிரியர் குழு

    1. வணக்கம்

      தாராளமாக நீங்கள் இந்தத் தளத்தில் உள்ள கட்டுரைகளை பெயர் மற்றும் முகவரியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம். தடையேதுமில்லை. என்ன ஒன்று, வெளியாகும் கட்டுரைகளை யாரேனும் காபி-பேஸ்ட் செய்து புத்தகமாகப் போடாமல் இருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையும் செய்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்!

  2. it is very bad and sad.Like that same way I posted more than 1150 posts with http://www.marubadiyumpookkum.wordpress.com.But with out any suitable reason and meaning wordpress.com suspened my site. Even I have no back-ups of my writing.These kind of illegal and immoral always with the net world.So; everybody should very careful about all this. It is sin on their part. It is totally condemned of that kind of actions. but what is use,they are not ashamed of it.

  3. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  4. யார் அந்தத் திருட்டு எழுத்தாளன்? எழுத்துத் துறைக்கே அவமானம் இவனைப் போன்றவர்கள். கேவலமாக இருக்கிறது. சீச்சீ.. இதுவும் ஒரு பிழைப்பா?

    இதற்கு அந்த ஆள்…. வேண்டாம், நான் சொல்ல விரும்பவில்லை. அந்தக் கலைவாணியே பார்த்துக் கொள்ளட்டும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.