நம்பினால் நம்புங்கள்

காயத்ரி சுவாமிகள் என்ற ஒரு சித்த சன்யாசி சேலத்தில் இருந்தார். அவர் மக்கள் முன்பு பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியிருக்கிறார். மேஜிக்கா சித்தா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கே ஒரு அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்காக ஒருமுறை சேலம் சென்றிருந்தேன். சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கிச் சென்றிருந்தேன். நான் வாங்கிப் போயிருந்த ஆரஞ்சுப் பழங்களை வாங்கிச் சில நிமிடங்கள் அப்படியே கையில் வைத்திருந்து விட்டு, என்னிடம் திருப்பிக் கொடுத்தார். “இதை நீ வீட்டில் போய் உரித்துப் பார்” என்று சொன்னார். அவர் சொன்னபடி வீட்டுக்குப் போய் உரித்துப் பார்த்தால், அதற்குள் ஒரு சிறிய மகாலக்ஷ்மி விக்கிரகம்! அதுபோல ஒருமுறை பூசணிக்காயுள் இருந்து முருகன் சிலையை எடுத்தார். வாழைப்பழத்தில் இருந்து வேல் எடுத்தார். இதை எல்லாம் எனக்கு முன்னால் மட்டும் இல்லை. நிறையப் பேருக்கு முன்னால் செய்தார். இது மாதிரி நிறையச் செய்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்? சிலர் இதை ‘கண்கட்டு’ என்று சொன்னார்கள். சிலர் ‘குட்டிச் சாத்தான்’ வேலை என்றார்கள். சிலர் அவருக்கு ஏதோ ஒருவித ‘மாயசக்தி’ இருப்பதாகச் சொன்னார்கள். இதுதான், இப்படித்தான் என்று காரண, காரியத்தோடு யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இது போன்ற விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தன.

–      இந்திரா சௌந்தர்ராஜன்

இந்திரா சௌந்தர்ராஜன்

(நன்றி : தென்றல், மார்ச் 2001)

 

Advertisements

11 thoughts on “நம்பினால் நம்புங்கள்

 1. Ramanan சார், அல்லா இருப்பார், இயேசு இருப்பார், முருகன் இருப்பார். ஆனால் மக்கள் எவரும் இருக்க மாட்டார். அநீதிகளை தட்டி கேட்டமுடியாத எவனும் கடவுள் இல்லை. இறைவன் 60 தாய்க்கு சமம் என்று சொல்லும் மதங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், மக்களை கொலை செய்யப்படும் போது, ஒரு தாய் இப்படிதான் பார்த்து கொண்டு இருப்பாளா? எந்த ஒரு மதமும் எந்த ஒரு கடவுளும் இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படும் போது இரக்கம் காட்ட வில்லை. ஈராக் பற்றி எறிந்த போது எந்த வேதமும் இறக்கப்படவில்லை. மாவீரன் சதாம் கொலை செய்யப்பட்ட போது எந்த கடவுளும் இறக்கம் காட்ட வில்லை. குஜராத்தில் ஒரு கர்ப்பிணி சகோதரியின் கரு அறுக்கப்பட்டபோது எந்த கடவுளும் பாதுகாப்பு தரவில்லை. அப்புறம் என்னடா அல்லா, இயேசு, முருகன் சாமீ. எல்லாம் வேஸ்ட். மனிதனை மதிக்க கற்று கொள்ளுங்கள். மனிதம் valarugal

 2. ரமணன் ஐய தங்கள் கருத்து என்ன…?

  மகான்கள் என்றாலே எதாவுது அதிசயங்கள் செய்து தான் ஆகவேண்டும ? இந்த மக்கள் இப்படியே பழகி விட்டார்கள், இப்படித்தான் சிலர் மதம் மாறுதல், என்று கிளம்பிவிட்டார்கள், அதிசயங்கள் நிகழ்த்தினாலும் , இல்லாவிட்டாலும் , இறைவன் இறைவனே ….!! மகான்கள் மகன்களே ….!!
  அவர்களை நம் ஊன கண்களால்
  அளவிட கூடாது …… இது என் உறுதியான கருது ..,

  ***இது வரை தங்கள் தளத்தில் எழுத்து வடிவத்தில மட்டுமே அமானுஷ்யங்கள் வெளிந்துள்ளன. ஒரு மாறுதலுக்கு வீடியோ , போட்டோ இவைகளை வெளியிட்டால்
  என்ன…?***

  1. அதிசயங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவையெல்லாம் இறைவனை நோக்கி மக்களை ஈர்க்க உதவும் துருப்புச் சீட்டுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அம்மாதிரி அற்புதங்கள் செய்யும் சிலர் தங்களையே கடவுளாகக் கருதிக் கொள்வதும், மக்கள் அப்படியே நம்பி அவர்கள் பின் போவதும் தான். உண்மையான ஞானி அற்புதங்கள் செய்தாலும் அது இறைவனை நோக்கிய பாதையில் பக்தனைத் திருப்புவதற்காகவே அன்றி வேறல்ல.

   ஒரு சில போட்டோக்கள், வீடியோக்கள் இருப்பதாகத்தான் ஞாபகம். வாய்ப்பு அமையும் போது வெளியிடுகிறேன். நிச்சயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.