நம்பினால் நம்புங்கள் 

மறுபிறவியில் சிலருக்கு நம்பிக்கை உள்ளது. சிலருக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதுபோன்ற ஆயிரக்கணக்கான மறுபிறவி சம்பவங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருவதுடன், ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருகின்றனர். அதிலிருந்து ஒரு சம்பவம் இங்கே…

துருக்கியில் வாழ்ந்து வந்தான் ஒரு இளைஞன். ஒருசமயம் அவன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவன் தான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என பலமுறை மறுத்தும் கேளாமல் சிறையில் வைக்கப்பட்டான். அதனால் மனம் வெறுத்த அவன், போலீஸாரின் துப்பாக்கியைக் கொண்டே தனது நெற்றிப் பொட்டிற்குக் கீழே காதுக்கு மேல் சுட்டுக் கொண்டு மரணமடைந்தான். மறுபிறவியில் அவன் அதே ஊரில் பிறந்த போது முற்பிறவி நினைவுகளின் தாக்கம் ஏற்பட்டது. அது பற்றிப் பல விஷயங்களை ஆதாரங்களுடன் கூறத் துவங்கினான். முதலில் யாரும் நம்பவில்லை. பின்னர் சந்தேகப்பட ஆரம்பித்தனர். பத்திரிகைகளிலும் தகவல்கள் வெளியாயின.

மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்க டாக்டர் இயான் ஸ்டீவன்சனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனே புறப்பட்டு தனது குழுவினருடன் துருக்கி சென்றார். சிறுவனைச் சந்தித்து அவன் கூறும் செய்திகளை ஆராயத் தொடங்கினார்.

டாக்டர் அயான் ஸ்டீவன்சன்

ஆய்வின் இறுதியில் டாக்டர் ஸ்டீவன்சன், அவன் கூறுவது அனைத்தும் உண்மையே என்றும், அவன் முற்பிறவியில் காதுக்கு அருகில் சுட்டுக் கொண்டு இறந்ததால் இப்பிறவியிலும் அந்தப் பகுதி மிக வித்தியாசமாக உள்ளது என்றும், மிகப் பெரிய தழும்பு உள்ளது என்றும், முற்பிறவியில் குண்டு மூளையைத் துளைத்து தலை வழியாக வெளியேறியதால் தலையிலும் காயம் காணப்படுகிறது என்றும் தனது ஆய்வு முடிவில் தெரிவித்தார்.

காதறுந்த சிறுவன்

இதுபோன்ற விஷயங்கள் நாம் அறிந்ததைப் பற்றி மட்டுமே பேசக் கூடியதான “அறிவியலின்” எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இவற்றை “Para Psychology” மற்றும் “Occult Science” என்னும் துறைகளில் உள்ளடக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதெல்லாம் ‘கப்ஸா’, ’உடான்ஸ்’ ’பினாத்தல்’ ‘நம்ப முடியவில்லை’ என்பவர்கள் கீழ் கண்ட சுட்டியைப் பார்க்கவும்.

டாக்டர் இயான்ஸ் ஸ்டீவன்சனின் மறுபிறவி ஆராய்ச்சிகள்

Advertisements

2 thoughts on “நம்பினால் நம்புங்கள் 

 1. நண்பரே நான் நம்பிவிட்டேன், இதுவும் ஸ்டீவன்சன் அவர்களின் ஆராய்ச்சிகளில் ஒன்று தான்,
  அது போகட்டும் தாங்கள் ஏன் ஒரு ஆய்வு செய்ய கூடாது……….?
  இந்தியாவுக்கு பெருமை சேர்க்கலாமே…….!!!

  ……….வளரட்டும்……

  1. வாங்க வாங்க தமிழ் சிங்கம். இவ்வளவு நாளா எங்கே போனீங்க? அதுசரி, இந்தப் பதிவுகள் போடுவதிலேயே எனக்கு நாட்டமில்லை. ஒருவித நிர்ப்பந்தத்தினால் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் ஆராய்ச்சி செய்வதாவது, இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாவது? என்னமோ போங்கள். அதற்கெல்லாம் வேறு ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் செய்வார்கள். ஏன் பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸில் இன்னமும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்களே. நானெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணமான ஆள். அதிகம் படிப்பறிவில்லாத, அந்த அளவுக்கு விஷய ஞானமும் இல்லாத தற்குறி ஐயா.

   நமக்குத் தெரிஞ்ச், புரிஞ்ச ஒரே ஆராய்ச்சி “நான் யார்” என்று ஆராய்வதுதான். நீண்ட நாள் கழித்த வருகைக்கு நன்றி சிங்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.