நம்பினால் நம்புங்கள்

அதிசயக் குழந்தை

 

கீழ்கண்ட வீடியோவை கவனமாகப் பாருங்கள்….

 

இது எப்படி சாத்தியம்? மூன்று வயது கூட நிரம்பாத குழந்தையால் எப்படி ஒரு ராகத்தை அவ்வளவு எளிதில் இனம் கண்டு கொண்டு சொல்ல முடிகிறது, அதுவும் அநாயாசமாக? தான் ஆலாபனையை முடிப்பதற்குள் கொஞ்சம் கூட நேரம் கொடுக்காமல் குழந்தை பதில் சொல்வதைக் கேட்டு பாம்பே ஜெயஸ்ரீ எப்படி திகைத்துப் போகிறார் பாருங்கள்? இது எப்படி சாத்தியம்?

இந்த வீடியோவையும் பாருங்கள்…

 

ஒருவர் பாட, ஒருவர் வீணை வாசிக்க, ஒருவர வயலினில் இசைக்க எப்படியெல்லாம் அந்த ராகங்களைக் கண்டு பிடிக்கிறாள் இந்தச் சிறுமி….. மயக்கமாக இருக்கிறது, இந்த மழலை மேதையின் அறிவுத் திறனைக் கண்டு.

பெற்றோர்களின், முன்னோர்களின் ஜீன்களினால் வந்திருக்கும் என்ற விஞ்ஞானப் பம்மாத்து இங்கே செய்ய முடியாது. காரணம், குழந்தையின் பெற்றோர்கள் ,  முன்னோர்கள் உறவினர்கள் என யாரும் இசைப் பாரம்பரியத்தில் வந்தவர்களல்ல. வெகு சாதாரணமான கீழ் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்கு குழந்தைக்கு இந்த மேதைமை எப்படி வந்திருக்க முடியும்?  இதைத் தான் ’கருவிலே திருவுடையார்’ என்று சொல்வார்கள்.

”ஒருமைக் கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து” என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு பிறவியில் கற்றுத் தேர்ந்த ஞானமும், அறிவும், அந்தப் பிறவி முடிந்தும், ஏழு பிறவிகளுக்கும் கூடத் தொடர்ந்து வரும் என்கிறார். இதையே கீதையும் வேறு வடிவில் சொல்கிறது.

சுவாமி விவேகானந்தரும் கூட இதே போன்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். குழந்தைகள் ஒன்றுமே அறியாமல் வெறும் சிலேட் பலகை போன்று பிறப்பதில்லை. அவர்கள் ஜென்ம ஜென்மமாகத் தாங்கள் அறிந்த அறிவுடனும், ஞானத்துடனுமே பிறக்கிறார்கள். தகுதியான நேரம் வரும் போது அது வெளிப்படுகிறது என்பதுதான் உண்மை. இதே கருத்தைத் தான் கரோல் போமென் தனது Children’s Past Lives நூலில் குறிப்பிடுகிறார்.

 

Children's Past Lives

 

கரொல் போமென்

இதே கருத்தைத் தான் ரேமண்ட் முடி, இயன் ஸ்டீவன்சன், எட்கர் கெய்சி, சத்வந்த் பஸ்ரிச்சா, பானர்ஜி என பலரும் தெரிவித்துள்ளனர். இதே போன்றுதான் மாண்டலின் சீனிவாஸூம்,  சித்ர வீணா ரவிகிரணும் இளம் வயதிலேயே, யாரும் எதையும் சொல்லிக் கொடுக்காது, யாரிடமும் பயிலாது பிறவி மேதைகளாக விளங்கினர். சித்ர வீணா ரவிகிரணின் தாத்தா சகாராம ராவ் ஒரு மிகச் சிறந்த இசைக் கலைஞர்.  அவர் வழி ரவி கிரணும் ஒரு இசை மேதையாக விளங்குகிறார்.

ஆனால் இந்தக் குழந்தை?

எனக்கு இந்தக் குழந்தையின் கண்களைப் பார்க்கும் போது எம்.எல்.வியின் ஞாபகம் வருகிறது…. உங்களுக்கு….???

 

எம்.எல்.வச்ந்தகுமாரி

 

எம்.எல்.வி

 

Advertisements

4 thoughts on “நம்பினால் நம்புங்கள்

  1. குழந்தை என்போர் புது மெமோரி கார்டு மாதிரி இன்னும் சொல்லபோனால் அவர்கள் நீரை உட்கொள்ளும் பாத்திரம் போன்றவர்கள் அந்த நீர் எந்த நிறத்தை உடையதோ அந்த நிறத்தை அப்படியே காட்டுவதை போல இவர்களும் எதை உள்ளிளுகிரர்களோ அதை அப்படியே வெளிக்கொணர செய்கிறார்கள்.

    இதற்க்கு முன்னோரின் பண்பு நலன் ,முன்ஜென்ம பாக்கியம் என்று எதுவும் அவசியம் இல்லை.கர்நாடக இசை என்று இல்லை எந்த ஒன்றையும் அவ்வாறு செய்யும் சக்தி இறைவன் இவர்களுக்கு தருகிறான்.

  2. கேள்வி பட்டேன் ரமணன். இதற்க்கு ஒரே காரணம் ஜீன்கள் என்று சொல்ல இயலாது . அவ்வாறு சொல்வது மூடத்தனம். கருவில் இருக்கும் பொழுது நாம் எனன் செய்கிறோம் என்ற ஒன்று ஒல்லாது. அதிகம் கர்நாடக இசை கேட்டால் பிறக்கும் குழந்தை அதில் நாட்டம் உள்ள குழந்தையாக பிறக்கும். இதற்க்கு என் மகள் ஒரு உதாரணம்

    1. ஆம், கார்த்திக் அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. புராணங்களில் அபிமன்யு, பிரகலாதன் என்று பல உதாரணங்களும் உண்டு. ஆனால் இந்தக் குழந்தைக்கு இந்த சிறு வயதுக்குள் இவ்வளவு மேதைமை இருப்பது நிச்சயம் விட்ட குறை தொட்ட குறைதான். இது கேள்வி ஞானத்தால் உருவானதல்ல. பிறவி ஞானத்தால் வருவது. ஜென்ம ஜென்மமாய்த் தொடர்வது. மிகப் பெரிய இசை மேதை யாரோ ஒருவரின் (எம்.எல்.வி??)மறுபிறவிதான் இக்குழந்தை. வால்டர் செமிகேவிற்கு மின்னஞ்சல் அனுப்பி ஆராயச் சொல்லலாம் என இருக்கிறேன். ஆனால் குழந்தையின் மற்ற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பார்ப்போம். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.