ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரின் ஆவி உலக அனுபவம்

நூற்றாண்டு கண்ட சட்ட, அரசியல் மாமேதை வி. கிருஷ்ணய்யர். ’சிறியன சிந்தியாதான்’ என்று பலரும் மெச்சும் வகையில் வாழ்ந்த அவர் இன்று (04/12/2014) அமரரானார்.

அவர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும் தனது வாழ்க்கை அனுபவங்களை, தனக்கு நிகழ்ந்த அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதியிருக்கும் After the death என்ற நூல் மிகவும் முக்கியமானது. அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போமா?

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ணய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே நடந்த சம்பவத்தைப் பார்போம்.

”அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கிருஷ்ண பகவான் அருள்வானாக!

ஓம்

****

Advertisements

2 thoughts on “ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரின் ஆவி உலக அனுபவம்

 1. ரமணன் சார்,

  இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.
  ஆனால், கிருஷ்ணய்யர் சம்பந்தமாக நீங்கள்
  கூறி இருப்பது தான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
  அவர் ஒரு அந்த நாள் கம்யூனிஸ்ட், மனிதநேயம்
  மிக்கவர் என்கிற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன்.

  இந்த விஷயங்களில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை உண்டு
  என்று அறியவும், அவர் இந்த அளவிற்கு முயற்சிகள்
  எடுத்துக் கொண்டார் என்று அறியவும் ஆச்சரியமாகத்தான்
  இருக்கிறது. நல்ல நினைவஞ்சலி.
  மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் கிருஷ்ணய்யர்.

  உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  1. தங்கள் கருத்திற்கு நன்றி காவிரி மைந்தன் அவர்களே..

   //இந்த விஷயங்களில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை உண்டு//

   ஆமாம். இது பற்றி அறிய அவர் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்றிருக்கிறார். புகழ்பெற்ற ஆவியுலத் தொடர்பாளர்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அதுபற்றியும் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். படிக்கப் படிக்க எல்லாமே ஆச்சரியமாக உள்ளது.

   நூலை இங்கே வாங்கலாம் : http://www.amazon.com/Death-After-V-Krishna-Iyer/dp/8122006507/ref=asap_B001HQ5RTU_1_3?s=books&ie=UTF8&qid=1417755170&sr=1-3

   மலையாளம் அறிந்தவர்கள் வாங்க : http://onlinestore.dcbooks.com/books/MARANANANTHARA-JEEVITHAM

   இந்த நூல் பற்றிய ஹிந்துவின் விமர்சனம் : http://www.thehindu.com/br/2005/04/12/stories/2005041200121403.htm

   என்ன இருந்தாலும் அவரவரது அனுபவமே உண்மை ஆசான் என்பதுதான் உண்மை அல்லவா?

   நன்றி காவிரி மைந்தன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.