கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா… எங்கே… எப்படி…என்னவாக இருக்கிறார்… ஆவிகள், பேய்கள் எல்லாம் உண்மைதானா?…

முற்பிறவி, மறுபிறவிகள் எல்லாம் உண்மையா… பொய்யா…?

ஏன் மனிதப் பிறவியில் ஏழை, பணக்காரன், நோயாளி, பைத்தியம் என்று வேறுபாடுகள்… அதற்கான காரணம் என்ன…

இறப்பின் பின் என்ன நிகழ்கிறது….

பிறப்பதற்கு முன்னால் இருக்கும் நிலை என்ன…

இவை பற்றி எல்லாம் அறிய இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்…

ஆறு அத்தியாயங்களையும் நேரம் ஒதுக்கி முழுமையாகப் படியுங்கள்.

மேற்கண்ட வினாக்களுக்கு பதில் கிடைக்கும்.

இது பற்றி தோழர் தமிழ் சிங்கத்தின் கேள்வியிலிருந்து…

தாங்கள் ”எனக்கு பிடித்த தளம்” என்ற பெயரில் மரணத்திற்கு அப்பால் என்று ஒரு வெப்சைட் ஐ நினைவு கூர்ந்த்துல்லீர்கள், சரி அதன் முழு கதையையும் படித்து விட்டீர்களா…..???

படிக்காமல் இருந்ததால் தயவு செய்து படித்து முடித்துவிடவும்….,,

நான் என் நண்பருடன் அதை படித்தேன்

அவர் சொன்னார் ”என்னைய கொடுமையுது இங்கதான் படம் நடத்தி
பரிச்சை வைச்சி கொல்றாங்க-ன்ன செத்த பிறகும் விடமாட்டங்கள ”……. என்றார்

”அப்படியானால் பரிச்சையில பெயில் ஆனா மாணவர்கள் தற்கொலை செய்துக்கிறாங்களே… அவங்க நிலைமையே நினச்ச தான் பாவமா இருக்கு” என்றார் ……

இதை பற்றி தங்கள் கருத்து என்ன…..????

அந்த பக்கத்தில் முதல் 111 வரிகளில் ,. 100 வரிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் அதற்க்கு பிறகு தான் சற்று வயிற்ரை கலக்குகிறது, சரி அதுவும் போகட்டும், உண்மை அதுவானால் பிறகு என் நிலைமை என்னவாகும்……..

எனது பதில்…

தமிழ் சிங்கம்…

முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டேன். பல விஷயங்கள் முன்பே பல நூல்களில் படித்தது. சில உணர்ந்தது (??!!). மொத்தத்தில் பகவான் ரமணர்தான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகிறார். – There is no Others.. மற்றும் அவரது புகழ் பெற்ற கருத்துக்களில் ஒன்று உடன் நினைவிற்கு வருகிறது.

“எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்ம சொரூபம் தெரியும். எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே. ஆகவே புதிய புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். ’நான் யார்’ என்பதை உள்ளுக்குள் ஆராய்ந்து பார்த்தால் ’உண்மை’ விளங்கும்” இதைத்தான் இந்தக் கட்டுரை பல்வேறு விதங்களில், பல கருப்பொருள்களில் சுட்டுவதை உணர்கிறேன். ராமகிருஷ்ணரின் ‘கர்மா’ தத்துவமும், வள்ளலார் போதித்த அன்பின் மகிமையும் இவற்றைப் படிக்கும் போது நன்றாகவே புரிகிறது. நமது உள்ளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி வாழ வேண்டிய அவசியத்தை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.

அதே சமயம் தியானத்தின் வலிமையும், அருமை, பெருமையும் புரிகிறது. (இங்கே ’தியானம்’ என்று சொல்லப்படுவது நவீன ’உடான்ஸ் சாமியார்கள்’ காசு வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் மூச்சுப் பயிற்சியை அல்ல. அது உடலுக்கு வேண்டுமானால் – தற்காலிகமாக – நன்மை தரலாம். ஆனால், ஆன்ம லாபத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராது என்பது என் திடமான நம்பிக்கை.) உடலை சரியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியமும் புரிகிறது. (நான் அதில் சற்று தவறி விட்டேன்)

ஆனாலும் சில கேள்விகள் உள்ளன. சில விளக்கங்களும் தேவைப்படுகின்றனதான்.

//ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தனது பிறக்கும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களைப் பற்றி அறிவதற்கு நாமிங்கே பகிடியாக ‘மேலுலகக் கணணி’ என்று செல்லமாக அழைக்கும் ஒரு விதமான கொம்பியூட்டர் சிஸ்டத்துடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்கு எட்டாத, சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கேயிருப்பவர்கள் அதனை விளங்கிக்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவியெடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை வசதி. ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.//

இதுதான் கொஞ்சம் புரியவில்லை அல்லது இடிக்கிறது. கம்ப்யூட்டர் என்ற வார்த்தை ஜஸ்ட் விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி தகவல் நான் படித்த/கேள்விப்பட்ட வரை மிக மிகச் சரியானதே! (பின்னாலே அதற்கு விளக்கமும் வருகிறது. எண்ணப்பதிவுகளின் தொகுப்பைத் தான் அப்படி – கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று – அழைக்கிறார்களாம்)

//பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், “இந்த இடம் ஒளிரட்டும் என்றவுடன் ஒளிவரவில்லையா?” இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டும் எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.//

இது முழுக்க முழுக்க உண்மை. எடிசனின் ஆய்வுக்குப் பல ஆவிகள் உதவின என்பது உண்மை.

// நேரகாலம் கூடிவரும்போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் நேரத்தில் தான் இது நடக்கும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ, அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் குழந்தை உயிர்வாழாது”.//

இது புரியவில்லை. ’குழந்தை பிறக்கும் தருணத்தில்தான் ஆத்மாவானது உடலுள் புகும்’ என்று சொன்னால் இந்திய புராணங்கள், அபிமன்யு, பிரகலாதன் கதைகள் எல்லாம் பொய் அல்லது மிகை என்றாகி விடும். திருமூலர் சொன்னதற்கு இது மாறாக உள்ளது. நான் அறிந்தது ’உடலில் மூளை வளர்ச்சியுறும் காலத்திலேயே ஆன்மா தாயின் உடலுக்குள் பிரவேசித்து விடுகும்’ என்பது தான். ஆகவே இதனை முழுமையாக ஏற்க இயலவில்லை. (ஆனால் பின்னால் ‘முன்பின்னோ நுழையும் ஆத்மா’ என்று வருகிறது. அந்த ’முன்’, ’பின்’ பற்றிய விளக்கங்கள் இல்லை. டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் ஆய்வில் இது போன்ற இரண்டு ’பின்’ ஆத்மா நுழைந்த சம்பவங்கள் இருக்கின்றன )

//இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், “குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. என்றார் //

இது புதிதாக இருக்கிறது. ஆனால் நன்கு வளர்ச்சியுற்றும் கூட சில குழந்தைகள் இறந்தே பிறப்பதை (என்ன ஒரு முரணான வார்த்தை!) நாம் பார்த்திருக்கிறோமே…

இப்படி நிறைய நிறைய விஷயங்கள்… அருமையான விளக்கங்கள். உண்மையில் அற்புதமான நூல் இது. மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழில் இருந்தாலும் இதற்காக நேரம் ஒதுக்கி மொழி பெயர்த்திருக்கும் (இன்னும் வளருமாம்) ஆனந்தி மகேந்திரன் நன்றிக்குரியவர். இந்த உண்மையைத் தேடி வலைப்பூவைப் படிக்கும் அனைவரையும் இந்தத் தளத்தைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். பக்கத்தில் இணைப்பும் கொடுத்துள்ளேன். (நண்பர் அண்ணாச்சாமி… இதைப் படித்து விட்டு, ’மூட நம்பிக்கையை வளர்க்கிறேன்’ என்று என்னை மீண்டும் திட்ட மாட்டார் என நம்புகிறேன் )

ஆனந்தி மகேந்திரன் அவர்களால் ஆனந்த கீதம் என்ற தளத்தில் எழுதப்பட்ட அந்தக்கட்டுரை A World Beyond என்ற ஆங்கிலப் புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் Ruth Montgomery என்ற பெண். (ரூத் மோன்ட்கோமரி). எழுத அவருக்கு உதவி, ஆவிகள் உலக உண்மைகளையும், இறப்பின் பின்னான நிலையையும் சொன்னவர் Arthur Ford – ஆர்தர் போர்டு.

ரூத் ஆவி மூலம் எழுதிய புத்தகம்

Ruth Montgomeryயின் சுவையான நேர்காணலை இங்கே படியுங்கள்…

இவர் தான் ரூத் மோன்கோமரி

ஆர்தர் போர்ட் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

ஆவி மனிதர் ஆர்தர் ஃபோர்ட்

படித்த அனைவருக்கும் நன்றி…

******************

Advertisements

17 thoughts on “கடவுள் இருக்கிறாரா?

  1. அப்படியா? எதைப் படிக்க வேண்டும்? புதிய ஏற்பாட்டையா? அல்லது ப்ழைய ஏற்பாட்டையா? எதுவாக இருந்தாலும் ஆறுமுக நாவலர் என்னும் சைவர் மொழி பெயர்த்தது தானே அது? அவர் ஏதாவது சைவக் கருத்துக்களை புகுத்திவிட்டரோ? 😦

 1. Ramanan சார், அல்லா இருப்பார், இயேசு இருப்பார், முருகன் இருப்பார். ஆனால் மக்கள் எவரும் இருக்க மாட்டார். அநீதிகளை தட்டி கேட்டமுடியாத எவனும் கடவுள் இல்லை. இறைவன் 60 தாய்க்கு சமம் என்று சொல்லும் மதங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், மக்களை கொலை செய்யப்படும் போது, ஒரு தாய் இப்படிதான் பார்த்து கொண்டு இருப்பாளா? எந்த ஒரு மதமும் எந்த ஒரு கடவுளும் இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படும் போது இரக்கம் காட்ட வில்லை. ஈராக் பற்றி எறிந்த போது எந்த வேதமும் இறக்கப்படவில்லை. மாவீரன் சதாம் கொலை செய்யப்பட்ட போது எந்த கடவுளும் இறக்கம் காட்ட வில்லை. குஜராத்தில் ஒரு கர்ப்பிணி சகோதரியின் கரு அறுக்கப்பட்டபோது எந்த கடவுளும் பாதுகாப்பு தரவில்லை. அப்புறம் என்னடா அல்லா, இயேசு, முருகன் சாமீ. எல்லாம் வேஸ்ட். மனிதனை மதிக்க கற்று கொள்ளுங்கள். மனிதம் valarugal

 2. i have heard that when meherbaba visited usa the scientits there wanted to measure his mental activity and they found his mind was empty..of ideas etc.one’s mind is always full of thoughts bad or good etc.there are two ways of filling ii with all good thoughts driving away all bad or you can empty it as meher baba did.when the mind becomes pure they say you see god.vallalar swamigal asked his brother’s wife to give him a mirror a lamp etc retired to the room in the first floor of his brother’s house near sevenwells area of chennai when he was only a boy.he lighted the lamp placed it before
  the mirror and he himself has written that he had the darshan of lord murugan in the mirror.in the gita lord krishna says the best yoga is abhyasa yoga.put things into practice which is very difficult and you will definitely reach your goal

 3. மிகவும் அருமையான தளம். அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. சிறிய சிறிய கேள்விகள் எழுந்தாலும் நம்பும் படியாக உள்ளது. எனது பல கால தேடலுக்கு கிடைத்த பரிசு போல் இருந்தது. இரவு இதைப் படித்து முடித்த பின் மனதில் அமைதியும் சந்தோஷமும் நிறைந்திருந்தது. அமைதியாக உறங்கவும் முடிந்தது. சகோதரனே மிக்க மகிழ்ச்சி.

  1. நன்றி சகோதரி. தேடல் உள்ள ஒரு சிலருக்காவது பயன்படும் என்றுதான் எனது தேடலின் போது கிடைத்த வலைப்பூவை அறிமுகப்படுத்தினேன். ஆனந்தி மகேந்திரனுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நேரம் ஒதுக்கி, மொழி பெயர்த்து சிறப்பாக எழுதியிருப்பதற்காக.

 4. தங்களது மிக நீண்ட விளக்கமான கருத்துகளுக்கு நன்றி.

  //நமது மனோ, வாக்கு, காயங்களால் எண்ணங்களால், செயல்பாடுகளால் ஏற்படும் வினைகளை, விளைவுகளை நாம் கூடவே எடுத்துச் செல்கிறோம். அதற்கு முழுக்க முழுக்க நாம் மட்டுமே பொறுப்பு. அது நல்வினையோ, தீவினையோ நாம் அனுபவித்தே தீர்க்க வேண்டும்//

  இவைகளைத்தான் அனுபவங்கள் என கருதுகிறேன்,
  தங்கள் பார்வைக்கு சற்று வேறுபட்டிருக்கிறது போலும்.

  // ஆன்மாவின் பரி பக்குவ சோதனைகளை அறியவே அத்தேர்வுகள்// -ஆழமான கருத்து (நெத்தியடி)**

  தாங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்கள் பள்ளிச் சிறுவனுக்கும் தெளிவாக புரியும் அந்த அளவிற்கு வெளிப்படியாக உள்ளது, குறிப்பாக பாபா திரைப்படம், மிக்க நன்றி*

  //கிறித்துவம் மறுபிறவியை ஏற்பதில்லை. இறப்பின் பின்னான வாழ்க்கையையும் அது ஒப்புக் கொள்வதில்லை.//
  இன்னும் சில கருத்துக்கள் (உதாரணங்கள்)சொன்னீர்கள் ஆனால் கிருத்துவர்கள் பற்றி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை, காரணம் அவர்களின் மத நூல் எத்தனை முறை எடிட் செய்ய பட்டுள்ளது என்று தாங்கள் அறிவீர்களா…..!!

  ஒரு வேளை இதை, ஒரு மிக்க நம்பிக்கை கொண்ட ஹிந்து ஒருவன் படித்தால் ஏமாற்றம் அடைய மாட்டானா…… அதனால் இதில் உள்ள மைய கருத்தை எடுத்து, நம்ப ஆட்களுக்கு விளங்கும் வகையில்
  பதிவிடலாமே….!!
  (தங்களுக்கு உண்மை என தோன்றினால்)

  எனக்கு ஒரு பழைய சந்தேகம், எல்லாமே வெளிநாட்டு சமாச்சாரமாகவே உள்ளதே,
  நம்ப ஊரு தமிழ் ஆவிகள் சுய நலவாதிகள……?
  ஏன் மரணத்தின் பின்னணியை விளக்கவில்லை, அப்படி விளக்கி இருந்ததால், அந்த புத்தகத்தின் பெயரை வெளியிடவும் …..!

  ஆவிகள் விஷியத்திலும் வெளிநாட்டு மோகமா…….?

  விக்கிரவாண்டி ஆராய்ச்சிகள் தவிர்த்து, தாங்கள் ஏதேனும் முயற்ச்க்கிலாம் என நினைக்கிறேன்,
  தமிழன் பெருமை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்,

  ”நான் கொஞ்சம் பெரியார் ராமசாமி அவரின் புத்தகங்கள் கொஞ்சம் படித்து விட்டு,
  மண்டை குழம்பி இருக்கும் ஒரு ஆசாமி, அதனால் என் வார்த்தையில் நாத்திக வாசனை காணப்படலாம், நான் கேட்கும் ஐங்கள் சற்று சில்றைத்தனமாக இருக்கலாம், என அச்சப்படுகிறேன்.”

  என்னவோ பண்ணுங்க சாமீ ……………………..!!!!
  பெரியார் பண்ண மாதிரி மண்ட கொலம்ப வச்சிடதீங்க…..!!!

  நீங்க என்ன சொன்னாலும், என் ஆய்வுகளோடு சம்மந்தம் இருந்ததால் மட்டுமே
  ( என் ஆன்மாவுக்கு சரி என்று பட்டாள் மட்டும் ) தங்கள் கருத்துக்களை உறுதி படுத்திக்கொள்வேன்,

  தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி, தங்கள் எழுத்துக்கள் எனக்கு ஓர் ஆய்வு பொருளே…..

  ”பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத வேலை”
  என்று சொல்லிவிட்டீர்கள்…. கொஞ்சம் வலிக்கிறது.

  மிக்க நன்றி***

  1. //கிருத்துவர்கள் பற்றி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை, காரணம் அவர்களின் மத நூல் எத்தனை முறை எடிட் செய்ய பட்டுள்ளது என்று தாங்கள் அறிவீர்களா…..!!//

   நண்பரே…

   நன்றாக அறிவேன். புதிய ஏற்பாடு மட்டுமல்ல; பழைய ஏற்பாடுக்கு முன் உள்ளது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை.

   //இதில் உள்ள மைய கருத்தை எடுத்து, நம்ப ஆட்களுக்கு விளங்கும் வகையில் பதிவிடலாமே….!!//

   இதுவே அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்கிறதே. பார்ப்போம்.

   //எனக்கு ஒரு பழைய சந்தேகம், எல்லாமே வெளிநாட்டு சமாச்சாரமாகவே உள்ளதே, நம்ப ஊரு தமிழ் ஆவிகள் சுய நலவாதிகள……? ஏன் மரணத்தின் பின்னணியை விளக்கவில்லை, அப்படி விளக்கி இருந்ததால், அந்த புத்தகத்தின் பெயரை வெளியிடவும் …..! ஆவிகள் விஷியத்திலும் வெளிநாட்டு மோகமா…….?//

   விளக்கி இருக்கிறார்கள் நண்பரே. அவை இப்போது கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி. மதுரை ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவர் ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ந்து ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’ என்ற விரிவான ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். மீடியம் சுந்தர்ராஜன் என்பவர் ”ஆவிகள் உலகம்” பற்றி ’ஆவியுலக ஆராய்ச்சி’ என்ற பெயரில் ஒரு வெகு அற்புதமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். நான் சிறுபையனாக (12 வயதில்) இருக்கும் போது முதன்முதலில் ஆவிகள் உலகம் பற்றித் தெரிந்து கொண்டது அந்த நூல் மூலம் தான். (நான் அம்புலிமாமா படிக்க ஆரம்பிக்கும் முன்பே குமுதம் படித்தவனாக்கும்). பின் அவ்வப்போது பல கட்டுரைகள், நூல்களை வாசித்திருக்கிறேன். ரா.கி.ரங்கராஜன் (கிருஷ்ணகுமார் என்ற புனை பெயரில் எழுதிய ஆவி சம்ந்தப்பட்ட) தொடர்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். அதில் ’கோஸ்ட்’ என்ற தொடர் வெகு சுவாரஸ்யமானது. அல்லயன்ஸ் அதை நூலாகக் கொண்டு வருவதாக (3 வருடம் முன்பு) சொன்னார்கள். இதுவரை கிடைக்கவில்லை இந்த புத்தகச்சந்தையில் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். (இவையெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் உண்மைச் சம்பவங்கள்/ஆய்வுகள் என்று கூற இயலாது)

   இதுபோக பேராசிரியர், டாக்டர் வை. தக்ஷிணாமூர்த்தி ஒரு மிகப் பெரிய ஆய்வு நூலை (2 பாகம்) எழுதியிருக்கிறார். (ஆனந்த நிலையம் பதிப்பகத்தில் கிடைக்கும்)

   அதுபோக விக்கிரவாண்டியாரும் நிறைய எழுதியிருக்கிறார். பேரறிஞர் புலியூர் கேசிகனும் கூட ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். கண்ணதாசனும் தனது ஆவி உலக அனுபவங்களை அர்த்தமுள்ள இந்துமதத்தில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் தாமரை மணாளனும் தனது அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். இந்திரா சௌந்திரராஜனும் ஒரு சில இதழ்களில் தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். உஜிலாதேவி-ராமானந்த குருஜியும் தனது அனுபவங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இன்னமும் பல நூல்களை, கட்டுரைகளை முன்பு படித்திருக்கிறேன். பல பெயர்கள் மறந்து விட்டன. அப்புறம் தற்காலத்தில் நிறைய ”ஆசாமிகள்’ எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள். பெரும்பாலான நூல்களில் ஒருவித சார்புத் தன்மை இருப்பதால் எனக்கு அவர்கள் நூலில் ஆர்வமில்லை. அதனால் நான் அவற்றைச் சிபாரிசு செய்ய விரும்பவில்லை.

   இவற்றையெல்லாம் நான் தேடிப் போனேன் என்பதை விட, பெரும்பாலான நூல்கள் தானாகவே என்னைத் தேடி வந்தன என்பதுதான் உண்மை.

   மீடியம் சுந்தர்ராஜனின் நூல் நிஜமாகவே வெகு அற்புதமானது. அதில் கந்தர்வர்கள் பற்றி, கின்னரர், கிம்புருடர் பற்றி, தேவர்கள் யார் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக இருக்கும். திருப்பதி மலையின் ரகசியங்களைப் பற்றியும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தியாசபிகல் நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவையும் வெகு சுவாரஸ்யமானவை. மறை பொருட்கள் கொண்டவை. மற்றவையெல்லாம் ஆங்கில நூல்களே! அங்குதானே விரிவாக சங்கம், அமைப்புகளைத் தோற்றுவித்து ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றையே அதிகம் படித்திருக்கிறேன். அவற்றிலிருந்தே எடுத்தாள்கிறேன். அதுதான் விஷயம்.

   பலருக்குத் தெரியாத விஷயன். யோகி அரவிந்தர் ஒரு காலத்தில் ஆவிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். பேசியும் இருக்கிறார். புதுச்சேரியில் அரவிந்தர் தங்கியிருந்த போது, அவரது இல்லத்தில் பாரதியார், மண்டயம் சீனிவாச்சாரியார், வ.ரா போன்ற பல நண்பர்கள் கூடுவார்கள். வேதம், வேதாந்தம், சாஸ்திரம் உட்பட பல விஷயங்கள் பற்றிப் பேசுவார்கள். அவற்றுள் சூட்சுமவாசிகள் எனப்படும் ஆவிகள் உலகம் பற்றியதும் உண்டு.

   ஆவிகளுடன் பேசிய ஸ்ரீ அரவிந்தர், ஆவிகளின் வழிகாட்டுதல்மூலம் ‘ஆட்டோமேடிக் ரைட்டிங்’ முறையில் ‘யோக சாதனை’ என்ற நூலை எழுதினார். பின்னர் அந்த நூலை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். இது போன்ற ஆய்வுகள் மூலம் சாதகர்களுக்கு எந்தப் பயனும் விளையாது என்று கருதிய அவர், அவற்றை ஊக்குவிக்கவில்லை.

   அது பற்றி விரிவாக இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

   அரவிந்தர் ஆசிரமத்தில் உயர் பொறுப்பு வகித்த அமிர்தா (அமுதன்) இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் அந்நூல் கிடைக்கும். ஸ்ரீ அன்னைக்கும் ஆவிகளுடனான அனுபவங்கள் உண்டு. ஆனால் அதுபற்றிய ஆய்வுகள், பேசுவது போன்ற முயற்சிகள் எல்லாம் தேவையில்லை. சமயங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பது ஸ்ரீ அன்னையின் கருத்து. அதில் உண்மையும் உள்ளது.

   இறைவனுடன் பேசதான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நம்மைப் போலவே வாழ்ந்து மறைந்து ஆவிகளுடன் பேசி என்ன ஆகப் போகிறது? (நான் மகான்களை, சித்த புருடர்களை, இறை அவதாரங்களுடனான ஆத்மத் தொடர்பை இங்கே குறிக்கவில்லை. அவர்களை மானசீக குருவாகக் கொண்டு தொடர்வதில் தவறில்லை)

   //விக்கிரவாண்டி ஆராய்ச்சிகள் தவிர்த்து, தாங்கள் ஏதேனும் முயற்ச்க்கிலாம் என நினைக்கிறேன், தமிழன் பெருமை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்,//

   தமிழின் பெருமை அறிவேன். ஆனால் இதுபற்றி எதை எழுதுவது? என் அமானுஷ்ய அனுபவங்களை வேண்டுமானால் எழுதலாம். அதற்கு இன்னும் கொஞ்சம் வயசாகட்டும்.

   // நான் கொஞ்சம் பெரியார் ராமசாமி அவரின் புத்தகங்கள் கொஞ்சம் படித்து விட்டு, மண்டை குழம்பி இருக்கும் ஒரு ஆசாமி, அதனால் என் வார்த்தையில் நாத்திக வாசனை காணப்படலாம், நான் கேட்கும் ஐங்கள் சற்று சில்றைத்தனமாக இருக்கலாம், என அச்சப்படுகிறேன்.”//

   பரவாயில்லை. என்னுடைய நண்பர்களுள் ஈ.வெ.ராவுடன் பழகியவரின் உறவினரும் ஒருவர். அவர் என்ன சொன்னார் என்றால், ”ஈ.வெ.ராவுக்கு பல விஷயங்களில் சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவற்றைப் போக்க, அவருக்குத் தெளிவுபடுத்த யாரும் முன் வரவில்லை. வேதம் பற்றிய அவரது சந்தேகத்திற்கு, வேதம் பற்றி நன்கு அறிந்த – பிராமணர் அல்லாத – ஒரு துறவி வந்து சந்தித்து விளக்கம் சொல்லி விட்டுச் சென்றார். இவ்வாறு அவருக்கு இருந்த பல சந்தேகங்களைப் போக்க யாரும் முன் வராததால், அவர் பல விஷயங்களை உண்மை என்று ஏற்க மறுத்து விட்டார்” என்றார். இது அவர் சொன்னது. உண்மையா, பொய்யா என்பது எனக்குத் தெரியாது. (ஓகேதானே மிஸ்டர் அண்ணாச்சாமி)

   // என்னவோ பண்ணுங்க சாமீ ……………………..!!!! பெரியார் பண்ண மாதிரி மண்ட கொலம்ப வச்சிடதீங்க…..!!!//

   குழப்பம் என்ற ஒன்று இருந்தால் தானே தெளிவு பிறக்கும் என்பது தாங்கள் அறியாததா என்ன?

   //நீங்க என்ன சொன்னாலும், என் ஆய்வுகளோடு சம்மந்தம் இருந்ததால் மட்டுமே. ( என் ஆன்மாவுக்கு சரி என்று பட்டாள் மட்டும் ) தங்கள் கருத்துக்களை உறுதி படுத்திக்கொள்வேன், தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி, தங்கள் எழுத்துக்கள் எனக்கு ஓர் ஆய்வு பொருளே…..//

   ரொம்ப நல்லது. அப்படியே செய்யுங்கள். ஏற்காவிட்டாலும் கூட அதை விட நல்லதே!

   தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

 5. ”எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்ம சொரூபம் தெரியும். எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே ”
  -இதை என் அவனுபத்தில் இருந்து முழுமையாக உணர்ந்து விட்டேன் //

  ”புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.”
  இதைத்தான் பற்று -அற்ற வாழ்க்கை என்று சொல்வார்கள் இதுவும் அறிந்தததே //

  ”நான் யார்’ என்பதை உள்ளுக்குள் ஆராய்ந்து பார்த்தால் ’உண்மை’ விளங்கும்”
  இதை நான் சிந்திக்க தொடங்கிய நாள் முதல், ஆராய தொடங்கிவிட்டேன்.,

  அதன் விளைவு, (வெளியில் சொல்ல எண்ணம் இல்லை) இன்னும் சில ஆய்வுகள்
  தேவை படுவதாலே இந்த தேடுதல் வேட்டையில் விழுந்தேன், தங்களது
  தலைப்பு பார்த்தவுடன் எனக்கு ஏற்ற தளம் என (”உண்மையை தேடி”) ஏற்று படிக்க தொடக்கி விட்டேன்,
  ஆரம்ப காலத்தில் தங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் ஆவலாக இருந்த்தது, தற்போது ஆரய்ச்சி பொருளாக உள்ளது,(மன்னிக்கவும் உண்மையை சொல்லிவிட்டேன் )
  காரணம் நான் படித்த மற்ற சில நூல்கள்,

  ”தங்களது இந்த தலைப்பு தான் என் வாழ்க்கையின் இரகசியம் ”

  நானும் என்னை சுற்றி சில அமானுஷ்யங்கள் நிகழ்வதை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்,
  தங்களது எழுத்துக்களோடு என் ஆய்வுகள் ஒன்றி போகிறது,

  இருப்பினும் தங்கள் எழுத்துக்களை ஒரு ஆய்வு பொருளாகவே பார்க்க தோன்றுகிறது,
  அதனால் தான் அந்த ”மரணத்திற்கு அப்பால்” என்ற தளத்தை பற்றி தங்களுக்கு எழுத நேர்ந்தது,
  மற்ற படி தங்கள் மனதை நோகடிக்கும் எண்ணம் இல்லை….

  நான் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டொழித்தவன், இப்போது கூட மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணங்களில் எனக்கு சற்று வேதனையாக இருக்கும், இந்த ஆங்கில புத்தகத்தின்
  மொழிபெயர்ப்பை படிக்கும் போது ஒரு வேலை அங்கேயும் பாடம் நடத்துவார்கள் என்று சொன்னதும்
  கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, (ஒரு வேளை உண்மையாக இருப்பின் )

  தங்களது எழுத்து இன்றி மற்ற எழுத்துக்களையும் படிக்கும் போது.. அதையும் ஒரு ஆய்வு பொருளாகவே தொடர்கிறேன் அதனால் அந்த ”பாடம் நடத்தும் ” விடயத்தை
  பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை,

  இருப்பினும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்பினேன்,

  இந்த ஆன்ம பூவுலகிற்கு வருவதே, கர்ம வினைகளை தொலைத்து விட்டு
  ”அனுபவங்களை ” சேகரிக்க….. என்பது என் ஆழமான கருத்து,

  சற்று சிந்தித்து பாருங்கள் இங்கு இருக்கும் எதைத்தான் நீங்கள் எடுத்துச் செல்லமுடியும் …?
  அப்படி ஏதேனும் மற்று கருத்து இருப்பின் தயவு செய்து எழுதவும்…!!!

  எந்த மனதையும் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை,
  நான் ஏதேனும் இதுவரை அப்படி செய்திருந்தால் மன்னிக்கவும்.

  இவை அனைத்திற்கும் காரணம் அந்த ஆங்கில புத்தகத்தின் மொழி பெயர்ப்பில் சில தவறுகள்
  இருப்பதாக நான் நினைத்தேன், இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன, அவற்றை தாங்களே
  விரைவில் அறிவீர்கள்……
  அதில் கிருஷ்த்துவர்களின் வாசமே அதிகம் பிரதிபலிக்கிறது,
  மற்ற மதங்களில் சொல்ல பட்ட கருத்துக்கள் ஆழமாக எதுவும் காணவில்லை…..!!!!
  அதன் முகப்புரையில் வருவனவற்றை ஓரளவு ஏற்க்கலாம்….!!

  ஆவிகளை நான் மறுக்க வில்லை, மற்ற மதங்களை வெறுக்கவில்லை,
  ”எல்லாம் சிவமயம் ”

  1. நண்பரே

   நான் முன்பே சொன்னது போல ’உண்மையைத் தேட’ ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் எனக்கு இவற்றின் மீதெல்லாம் (ஆவி, பேய், மறு உலகம், மறுபிறவி, முற்பிறவி) ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் தற்போது இவற்றில் எல்லாம் அதிக ஈடுபாடுகள் இல்லை. பின் ஏன் இதுபற்றியெல்லாம் பதிவிடுகிறேன் என்றால் இது போன்ற தேடல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த விஷயங்கள் ஒரு ஈர்ப்பாக, மேலும் உண்மைகளை அறிய ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதால் தான் எனது நேரத்தை ஒதுக்கி, பல இன்றியமையாத பணிகள் இருந்தாலும் இதற்கென நேரம் ஒதுக்கி, டைப் செய்து, சரிபார்த்து, புத்தகங்களைப் படித்து, இணையத்தில் தேடிப் படித்து (வீட்டில் சொல்வது போல பைசாக்கு பிரயோசனம் இல்லை என்றாலும்) செய்து கொண்டு வருகிறேன்.

   உங்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. யார் மீதும் மன வருத்தமும் இல்லை. (நண்பர் அண்ணாச்சாமி உட்பட. அவரது புரிதல் அவ்வளவுதான் எனும் போது நாம் என்ன செய்வது?)

   நீங்கள் இந்த நூல் முழுக்க முழுக்க கிறித்துவத்தை வலியுறுத்துவதாக, அதன் வாசம் வீசுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை. எழுதியிருப்பவர் ஒரு கிறித்துவர். ஆவியாக இருந்து எழுதத் தூண்டியவரும் ஒரு கிறித்துவர். அப்படி இருக்க நூல் அப்படித்தான் இருக்கும்.

   ஆனால்….. கிறித்துவம் மறுபிறவியை ஏற்பதில்லை. இறப்பின் பின்னான வாழ்க்கையையும் அது ஒப்புக் கொள்வதில்லை. இறைவன் தோன்றி இறந்தவர்களில் தகுதியானவரை உயிர்ப்பித்து தேவ சாம்ராஜ்யத்திற்குள் அழைத்துக் கொள்வார் என்பதுதான் வேத வசனம். ஆனால்… இதற்கு மாறாக மறுபிறவி உண்டு.. இறந்த பின்னும் வாழ்க்கை தொடர்கிறது… ஆவிகள் உலகம் உண்டு.. என்றெல்லாம் ஒரு கிறித்துவரே எழுதியிருக்கிறார் என்றால் ஏன் என்று நாம் பார்க்க வேண்டும்.

   அது தேவ வசனத்திற்கு மாறானது. சுருக்கமாகச் சொன்னாள் மதத் துரோகம். பின் ஏன் அப்படிச் சொன்னார்? போர்ட் மட்டுமல்ல. ஸ்டீவன்சன் கரோல் பௌமன் உட்பட பலரும் கிறித்துவர்களே! அவர்கள் அனைவருமே இறப்பிற்குப் பின்னான வாழ்வை ஒப்புக் கொள்கிறார்கள். மறுபிறவியை ஏற்கிறார்கள். ஆவிகள் உலகம் உண்டு என்கிறார்கள். இவ்வகை ஆய்வாளர்கள் அனைவருமே சமூகத்தின் சாதாரணமான ஆட்கள் அல்ல. உயர்கல்வி கற்றவர்கள். பெரும்பாலோனோர் டாக்டர்கள், பேராசிரியர்கள்.. தங்கள் மதக் கொள்கைகளுக்கு மாறாக இவற்றை ஏன் அவர்கள் சொன்னார்கள் என்றால் அவர்கள் ஆராய்ச்சியில் கண்ட உண்மை அது. அவர்கள் உணர்ந்தவற்றை, அவர்கள் அனுபவத்தை அவர்கள் சொன்னார்கள்.

   ஆகவே இவற்றையெல்லாம் மதக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இந்த நூலில் வரும் கருத்துக்களும் கருட புராணக் கருத்துக்களும் பல விஷயங்களில் ஒத்துப் போகின்றன (அதற்காக சொர்க்கம், நரகம், கழுவேற்றம், ஊசியால் குத்துதல், வைவஸ்தரணி நதிக்கரை, கிருமி போஜனம் போன்றவற்றை ஒப்பு நோக்கிக் குழப்பிக் கொள்ளக் கூடாது) அடிப்படை உண்மைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

   கொஞ்சம் பொறுங்கள். வருகிறேன்.

  2. /மற்ற மதங்களில் சொல்ல பட்ட கருத்துக்கள் ஆழமாக எதுவும் காணவில்லை..!!!!
   அதன் முகப்புரையில் வருவனவற்றை ஓரளவு ஏற்க்கலாம்.!! ஆவிகளை நான் மறுக்க வில்லை, மற்ற மதங்களை வெறுக்கவில்லை,
   ”எல்லாம் சிவமயம் ”//

   நல்லது. மதங்களோடு இவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அந்த உலகம் எண்ணங்களால் ஆன உலகம். அங்கே கிறித்துவும் உண்டு, இயேசுவும் உண்டும், அல்லாஹும் உண்டு. – எண்ண வடிவில் – அவரவர் விரும்பியவாறு. அவரவர் அங்கே தங்கள் எண்ண அலைகளுக்கு ஏற்றவாறு கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர். இங்கே நாம் தமிழர், பெங்காளி, மலையாளி, யூதர், ஜெர்மனியர் என்று இருப்பது போல அங்கே அவரவர்களது எண்ணப் பதிவுகளுக்கும், ஒத்திசைவு, ஒருங்கிணைப்பிற்கேற்ப ஒத்து வாழ்கின்றனர். ஒரு இறந்த இந்துவின் ஆவியினை வரவழைத்துக் கேட்டால் அது சொல்லும் கருத்துக்கள் சில வித்தியாசமாகக் கூட இருக்கலாம். ஆனால் எல்லா அடிப்படை உண்மைகளையும் ஆராய்ந்து பார்த்தால் அது ஒன்றாகவே உள்ளது. இறைவன் எல்லாவற்றையும் கடந்த ஒளி வடிவானவன் என்பதுதானே உண்மை. இதை அனைவருமே ஒப்புக் கொள்வர்.

   இந்து மதத்தைப் பொருத்தவரை அது கூறும் உண்மையை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளலாம். (பிற மதங்களில் அந்த நெகிழ்வுத் தன்மை இல்லை என்பது என் கருத்து) கடவுளை மறுக்கலாம். ஏற்காமல் இருக்கலாம். அது அவரவர் நம்பிக்கை, அனுபவத்தை, ஆராய்ச்சியைப் பொருத்தது. ஆனால் எதைக் கொண்டு ஆராய்வது. அறிவின் துணை கொண்டு எல்லாவற்றையும் ஆராய முடியாது. அறிவுக்கு அப்பாற்பட்ட… புலன்களுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. சரி அனுபவம் கொண்டு பார்த்தால் எல்லா அனுபவங்களும் உண்மையாக இருக்கும் என்று கூற முடியுமா? சில மனத்தின் திரிபுக் காட்சிகளாகவும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலும் கூட வித்தியாசமான, விபரீதமான அனுபவங்கள் சில சமயம் ஏற்படலாம்.எனவே இந்த அளவுகோல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து நாம் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

   //இருப்பினும் தங்கள் எழுத்துக்களை ஒரு ஆய்வு பொருளாகவே பார்க்க தோன்றுகிறது, அதனால் தான் அந்த ”மரணத்திற்கு அப்பால்” என்ற தளத்தை பற்றி தங்களுக்கு எழுத நேர்ந்தது, மற்ற படி தங்கள் மனதை நோகடிக்கும் எண்ணம் இல்லை//

   நல்லது. இதற்கெல்லாம் நான் மனம் நோக மாட்டேன். ஏன் இதுபற்றியெல்லாம் நான் பதிவிடுகிறேன் என்றால் ஹிட்ஸுக்காகவோ, பெயர், புகழ் சம்பாதிக்கவோ அல்ல. அவற்றில் எனக்கு ஆர்வமில்லை. அவையெல்லாம் நிலையானவை இல்லை என்பதும் எனக்குத் தெரியும். நம்மைப் போல இதே தேடல் உணர்வு கொண்ட ஒரு சிலருக்காவது இது பயன்படுமே என்றுதான், எனக்கு ஆர்வம் இல்லாதிருந்தாலும் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வலைப்பூ உங்களுக்கு உதவியாக இருந்தாலும் சரி,. இல்லாவிட்டாலும் நல்லதுதான். பின் எதுதான் உண்மை என்று தேட ஆரம்பித்து விடுவீர்க்ள் இல்லையா? அந்தத் தூண்டுதலுக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது வலைப்பூவில் பகிருங்கள். அது, இதே போன்ற தேடல் உள்ள பலருக்கும் பயன்படுமே.

   //இந்த ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பை படிக்கும் போது ஒரு வேலை அங்கேயும் பாடம் நடத்துவார்கள் என்று சொன்னதும்
   கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, (ஒரு வேளை உண்மையாக இருப்பின் )//

   நண்பரே… தேர்வு என்பது இங்குள்ள பரீட்சை போன்றா இருக்கும்? அது அப்படியல்ல. ஆவியுடலில் இருக்கும் ஆன்மாவின் பரி பக்குவ சோதனைகளை அறியவே அத்தேர்வுகள். சற்று விளக்கமாகக் கூறுகிறேன். இறந்து அவ்வுலகில் இருக்கும் அந்த ஆவிக்கு பூவுலக வாசனைகள் இன்னமும் உள்ளதா, எச்சங்கள், இச்சைகள் புவியில் கழிக்க வேண்டி உள்ளதா… அவற்றை இந்த சூக்கும உடலிலேயே (ஆவி உடல்) அனுபவித்தால் அந்த ஆன்மா திருதியுற்று விடுமா… அல்லது தூல உடல் எடுத்து அனுபவித்தால் தான் அவை அடங்குமா? (அப்படியானால் மறுபிறவி எடுக்க வேண்டி வரும்)… ஆன்மா மேல் நிலைக்குச் செல்ல தகுதியாக உள்ளதா… பூமியில் அதற்கான கர்ம வினைகள் அனைத்தையும் அனுபவித்து முடித்து விட்டதா – பக்குவம் பெற்று விட்டதா… இல்லை இன்னமும் எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா… அதற்கு செய்ய வேண்டியது என்ன… இவையெல்லாம் தான் தேர்வில் அடங்கும். (ரஜினியின் அற்புதமான படங்களுள் ஒன்றான “பாபா” திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா… அதில் மிகத் தெளிவாக இவை பற்றி காட்டப்பட்டிருக்குமே) இந்தத் தேர்வை நடத்துபவர்கள் புண்ணியலோக ஆன்மாக்கள் அல்லது ஆத்மானுபவம் பெற்ற உயர்நிலை ஆன்மாக்கள். இவர்களும் ஒரு குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு மேல் நிலைக்குச் செல்லலாம். அல்லது அந்நிலையிலேயே இருக்கலாம். பிறவியும் எடுக்கலாம். இது அனைத்துமே ஒரு தனிப்பட்ட ஆன்மாவின் உயர்வுக்குத் தானேயன்றி வேறில்லை.

   //ஆரம்ப காலத்தில் தங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் ஆவலாக இருந்த்தது, தற்போது ஆரய்ச்சி பொருளாக உள்ளது,(மன்னிக்கவும் உண்மையை சொல்லிவிட்டேன் )
   காரணம் நான் படித்த மற்ற சில நூல்கள்//

   அவை என்ன நூல்கள். பகிருங்களேன்.

   //இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன, அவற்றை தாங்களே விரைவில் அறிவீர்கள்//

   என்னவென்று கூறுங்கள்…

   //சற்று சிந்தித்து பாருங்கள் இங்கு இருக்கும் எதைத்தான் நீங்கள் எடுத்துச் செல்லமுடியும் …?
   அப்படி ஏதேனும் மற்று கருத்து இருப்பின் தயவு செய்து எழுதவும்…!!//

   நமது மனோ, வாக்கு, காயங்களால் எண்ணங்களால், செயல்பாடுகளால் ஏற்படும் வினைகளை, விளைவுகளை நாம் கூடவே எடுத்துச் செல்கிறோம். அதற்கு முழுக்க முழுக்க நாம் மட்டுமே பொறுப்பு. அது நல்வினையோ, தீவினையோ நாம் அனுபவித்தே தீர்க்க வேண்டும். Every Action has an Equal and oppoosite Reaction. அவ்வளவே!

   தங்களது மிக நீண்ட விளக்கமான கருத்துகளுக்கு நன்றி.

   “மரணத்தின் பின்” என்றுதான் முதலில் எழுதலாம் என நினைத்தேன். என்ன செய்வது அந்த அனுபவம் வாய்க்கவில்லையே 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.