நம்பினால் நம்புங்கள்

தேடிவந்த கொண்டைப் பறவைகள் – ஓவியர் மணியம் செல்வன்

மணியம் செல்வன்

‘விழிப்புணர்வுக் கதைகள்’ என்று விகடனில் ஒரு தொடர் வந்தது. ‘கொண்டைக் குருவி’யை சப்ஜெக்டாகக் கொண்டு ஒரு கதை. நான் வரைய வேண்டியது கொண்டைக் குருவியைத் தான். அதை நான் பார்த்ததில்லை. அதன் ஆங்கிலப் பெயரும் எனக்குத் தெரியாது. என்னிடம் உள்ள என்சைக்ளோபீடியா கலெக்‌ஷனிலிருந்து அது போன்ற அமைப்பு உள்ள படத்தைத் தேடி, அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒன்றை வரைந்தேன். தாய், தந்தை, அதன் குஞ்சு என மூன்றையுமே வரைய வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு, இரவு பகலாகக் கண் விழித்து அதை வரைந்து அனுப்பினேன். அது விகடன் எம்.டி.யின் மேஜைக்குப் போனது. அவர் மறுநாள் என்னை வரச் சொன்னார். என்னிடம்,  “நீங்கள் நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள். ஆனால் பறவையின் சரியான உருவம் இதுதான்” என்று கூறி அதன் புகைப்படத்தைக் காட்டினார். நானும் அங்கேயே புதிதாக ஒன்றை வரைந்து கொடுத்துவிட்டு வந்தேன்.

 

 

கொண்டைப் பறவை

 

இதழ் வெளியான மறுநாள், விடியற்காலை. எனது ஓவிய அறைக்கு உள்ளே நுழைந்த நான் ஜன்னலைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். அதிர்ச்சி+ஆனந்தம். என் மனைவியின் பெயரைச் சொல்லி சத்தமாக அழைத்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த என் மனைவி, மைத்துனர் எல்லோரும் என் அறைக்கு ஓடி வந்தனர். நான் எந்தப் பறவையை முந்தின நாள் வரைந்திருந்தேனோ அதே பறவைகள் இரண்டும் என் அறை ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தன.

 

 

 

 

கொண்டைப் பறவைகள்

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன். அந்தப் பறவைகள் ஏன் அங்கு வந்தன?

அழகான கொண்டைப் பறவை

இந்தப் பறவைகளை எவ்வளவு சிரமப்பட்டு கடமையுணர்வோடு வரைந்தேன் என்பது எனக்கும் அந்த உருவத்திலிருந்த அந்தப் பறவைகளின் ஆன்மாவிற்கும் தான் தெரியும். அதைப் பாராட்டும் விதமாகவே அந்த ஆன்மாக்கள் அங்கு வந்ததாக நான் உணர்கிறேன். அந்தப் பறவைகள் அதற்குப் பிறகு இதுநாள்வரை என் கண்ணில் படவில்லை. இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். எனது படைப்பைப் பாராட்டுவதற்காக அந்தப் பறவைகள் ரூபத்தில் ஆண்டவனே வந்ததாக உணர்கிறேன். அப்போதைய எனது உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகக் கடினம்.

நன்றி : தென்றல் அமெரிக்க மாத இதழ்

Advertisements

8 thoughts on “நம்பினால் நம்புங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s