யோகியின் வாழ்வில்…

யோகி ராம்சுரத் குமார்

உத்தரப்பிரதேச மாவட்டத்தில் உள்ள நர்தராவில் 1918ஆம் ஆண்டு, டிசம்பர் 1 அன்று ராம் சுரத் குமார் பிறந்தார். சிறுவயதில் ஒரு குருவியை அறியாமையால் கொன்று விட, அதன்  இறப்பே இவருக்குள் ஆன்மத் தேடலை ஏற்படுத்தியது. இளம் வயது முதலே ஆன்ம நாட்டம் கொண்டு விளங்கிய இவர் பல சாதுக்களைச் சந்தித்தார். இமயம் முதல் குமரி வரை சுற்றினார். திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் வாய்த்த பின்னர் இவரது ஆன்ம தாகம் மேலும் அதிகரித்தது. பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை-அரவிந்தரை தரிசனம் செய்தார். ஞானானந்த கிரியின் ஆசிரமத்தில் சில நாட்கள் இருந்தார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். ரமணாச்ரமம் சென்று ரமணரது அருள் பார்வை பெற்றார். பல தலங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதியில் தன் குருவை கஞ்சன்காடு அனந்தாச்ரமத்தில் கண்டறிந்தார். சுவாமி ராமதாஸரால் ஆசிர்வதிக்கப்பட்டு, ராமநாமமே தனக்குரியது என்பதை அறிந்து அதையே தொடர்ந்து உச்சரிக்கலானார். ராம நாம மகிமையால் யோகியாக உயர்ந்தார். ஆனாலும், ’தான் ஒரு பிச்சைக்காரன்’ என்று சொல்வதையே வழக்கமாக வைத்திருந்தார். அவரை நாடி வந்து ஆன்ம உயர்வு பெற்றவர்கள் எத்தனையோ பேர்.

பகவான் தன் இறுதிக் காலத்தில் புற்றுநோயினால் அளவற்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அற்புத சக்தியால் பகவான் தனது நோயைத் தானே குணமாக்கிக் கொள்வார் என பகவானுக்கு நெருங்கிய சில பக்தர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிரக் குறையவில்லை. மேலும் அந்த நோய் குணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதையும் பகவான் ஏற்றுக் கொள்ளவில்லை. தாங்கொணாத அந்த வலியையும் வேதனையும் தாங்கியவாறே தனது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பகவானின் துன்பம் கண்டு பொறுக்காத சில அன்பர்கள் வேதனையுடன், பகவானின் இந்த நிலைக்கான காரணத்தையும், பகவான் ஏன் அதனை தன் ஆற்றல் மூலம் போக்கிக் கொள்ளக் கூடாது என்றும் வினவினர்.

அதற்கு பகவான், ” தந்தை இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒன்றைச் சரி செய்வதற்காக இந்தப் பிச்சைகாரனின் உடலை இந்த நிலையில் வைத்துள்ளார். இது தந்தைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆற்றல்கள் பக்தர்களின் நலம் காக்க மட்டுமே. இந்த உடல் மண்ணுக்கும் தூசிக்கும் சமம். இந்த உடலுக்கு அது பொருந்தாது.” என்றார்.

பகவானின் பற்றற்ற மனம் கண்டு பக்தர்கள் வியந்தனர்.

*****

யோகி

ஒருமுறை பகவானிடம் நீங்கள் ஏன் அதிகம் சிகரெட் பிடிக்கிறீர்கள், அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்காதா என்று அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு பகவான், “தந்தை ஏதோ ஒரு காரணத்திற்காக இவனை புகைப்பிடிக்கும் நிலையில் வைத்திருக்கிறார். எனவே இவனை உதாரணமாக வைத்துக் கொண்டு நீங்களும் புகைப்பிடிக்கும் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. இவனுக்கு மனம் என்பதே இல்லை. எல்லாம் தந்தையின் கட்டளைப்படியே நடந்து வருகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். எது சரியோ அதை மட்டும் செய்ய வேண்டும். இது தான் இந்தப் பிச்சைக்காரனின் வேண்டுகோள்.” என்றார்.

மகானின் அறிவுரையை பக்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.

***********

பகவானின் நாமத்தை அவர் குரலிலேயே கேளுங்கள்

பகவானின் ஆசிரம ஆராதனை

இதைப் பார்க்கும், கேட்கும் அனைவருக்கும் ஸ்ரீ பகவானின் அருள் கிட்டட்டும்

யோகி ராம் சுரத் குமார, யோகி ராம் சுரத்குமார யோகி ராம் சுரத் குமார ஜய குரு ராயா

Advertisements

5 thoughts on “யோகியின் வாழ்வில்…

  1. அன்பார்ந்த ரமணன் யோகிகள், ஞானிகளின் பிறந்த நாள்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பதிவு ஏற்றுகின்றீர்கள். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    யோகி ராம் சுரத்குமாரின் அருள்பெறுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.