மஹா யோகினி ஸ்ரீ அன்னை

இன்று ஸ்ரீ அன்னை மஹா சமாதி ஆன நாள். இந்த நன்னாளில் அவர் பாதம் தொழுது புனிதம் பெறுவோம்.

ஓம்.

ஸ்ரீ அன்னை

பிரான்ஸில் பிறந்த மிர்ரா இந்தியா வந்தடைந்து, அரவிந்தரிடம் சரணடைந்து அனைவரும் போற்றும் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். நேர்மையுடனும், சத்தியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உண்மையைப் போற்றினார். சாதகர்கள் ஆன்ம உயர்வடைய உதவினார். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் மீதும், மரங்கள் போன்றவற்றின் மீது அன்னை கருணை மிக்கவராக விளங்கினார்.

அரவிந்தர் ஆசிரமத்து பங்களா ஒன்றில் வயதான பரந்த மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து விரவி, அருகிலுள்ள மற்ற மரம் செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அதை வெட்டி விட வேண்டுமென்றும் ஸ்ரீ அன்னையிடம் அதற்கான உத்தரவை மறுநாள் பெற வேண்டும் என்றும் ஆசிரமப் பாதுகாவலர் நினைத்தார்.

மறு நாள் ஸ்ரீ அன்னையிடம் சென்று இது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ அன்னை ‘இது பற்றித் தனக்கு முன்பே தெரியும்’ என்றும், ‘மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை, மரத்தை வெட்டிவிட வேண்டாமென்று நேற்று இரவு வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மரத்தை வெட்ட வேண்டாமென்றும்’ கூறி தடுத்து விட்டார்.

அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவராக ஸ்ரீ அன்னை திகழ்ந்தார்.

****

ஆசிரமத்தில் பல மரங்கள் இருந்தன. அவற்றுள் யூக்லிப்டஸ் மரமும் ஒன்று. ஒரு முறை புதுவையில் வீசிய கடும் புயலால் பல மரங்கள் பாதிக்கப்பட்டன. சில வேரோடு பெயர்ந்து விழுந்தன. அந்தவகையில் ஆசிரமத்தில் இருந்த யூக்லிப்டஸ் மரமும் மிகவும் பாதிக்கப்பட்டது.

அந்த மரத்தின் தேவதை ஸ்ரீ அன்னையிடம் சென்று, தான் மிகவும் தனிமையால் வாடுவதாகவும், சக நண்பர்களைப் பிரிந்து வருந்துவதாகவும் தெரிவித்தது. உடனே அந்த தேவதைக்கு ஆறுதல் கூறிய ஸ்ரீ அன்னை, அதற்குத் துணையாக மற்றொரு யூக்லிப்டஸ் மரத்தை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். அது முதல் அந்தப் பழைய மரம், நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்தது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; மரங்களுக்கும் கருணை காட்டக் கூடிய தாய் தான் ஸ்ரீ அன்னை.

வரம் தர வரும் ஸ்ரீ அன்னை

அன்னை உள்ளமே

அது அன்பின் இல்லமே!

அடைக்கலம் தருபவர்

ஆசி வேண்டுவோம்

அன்னை போற்றி

அன்னை போற்றி

அன்னையே என்றும் போற்றி

மேலும் ஸ்ரீ அன்னை பற்றி அறிய…

ஸ்ரீ அன்னை அருள்

மகா சக்தி ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையும் மலர்களும்

வரம் தரும் அன்னை

ஸ்ரீ அன்னை திருவடிக்கே சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி

ஓம் ஸ்ரீ சைதன்ய மயி

ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

**********************

Advertisements

4 thoughts on “மஹா யோகினி ஸ்ரீ அன்னை

  1. அன்னையின் வாழ்க்கையே ஆத்ம சாதகர்களுக்கு ஒரு பாடம்தான்.
    அன்னையின் பிறந்த நாள் கட்டுரை, மரங்களிடத்தும் அன்பு காட்டவேண்டும் என்ற கருத்த‍ை அனைவருக்கும் போதிக்கும்.
    உயர் ஆத்மாக்களுக்கு மரங்கள் பேசுவதும் கேட்கும்.
    அன்னையின் ஆசி தொழுபவர் அனைவருக்கும் கிடைக்கும்.

    1. நன்றி முருகையன். நீங்கள் சொல்வது சரி. இதே கருத்தை ஒத்த சம்பவங்கள் ஓஷோவின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. ஞானிகளால் அனைத்து உயிர்களின் குரல்களையும், வேண்டுதல்களையும் உணர முடியும். அவை, அஃறிணையாக இருந்தும் கூட. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.