நம்பினால் நம்புங்கள்

விரல் ரேகைகளின் பல்வேறு தோற்றங்கள்

இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். ஆனால் இது பற்றி ஆய்வுகள் செய்து எழுதியிருப்பவர் சாதாரண நபரல்ல. தமிழகக் காவல்துறையின் தடயவியல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, முப்பத்தேழாண்டு காலக் காவல்துறை அனுபவத்தைக் கொண்ட, பல்வேறு சிக்கலான வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த, பல்வேறு அமைப்புகளால் பாராட்டி கௌரவிக்கப் பெற்ற சாதனையாளர் திரு ஏ.எம். பத்மனாபன் அவர்கள். அவர் FINGER PRINT IS A REPLICA OF    RELEIGION AND GOD என்ற அற்புதமான ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதிதான் இது.

விரல் ரேகைகளின் வித்தியாசமான தோற்றங்கள்

இது போன்ற இன்னும் பல சுவையான தகவல்கள் அந்நூலில் உள்ளன. உதாரணமாக,

1. விரல்ரேகையில் மொத்தம் 10 வகையான உட்பிரிவுகள் வரை இருக்கின்றன.

2. இரண்டு விரல்ரேகைகள் ஒரேமாதிரி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை.

3. விரல்ரேகையில், சுழி, வளைந்த சுழி,  நீள்வட்டம், இரட்டை நீள்வட்டம், குறுக்கு வட்டம் எனப் பற்பல வகைகள் உள்ளன.

4. விரல் ரேகை அமைப்பில் திருநீறு, திருமண், சக்கரம், ஓம், சிலுவை, பிறைச்சந்திரன் போன்ற இறைச்சின்னங்கள் மட்டுமல்ல; மனித முகம், பறவைகள், போன்ற சின்னங்களும் சில ஆங்கில எழுத்துகளும் கூடக் காணப்படுகின்றன. என்று பல சுவையான தகவல்களை அவர் அந்நூலில் தெரிவித்துள்ளார்.

அது தவிர விரல் ரேகை அறிவியல் துறையில் மிகச் சிறப்பான நூல்கள் பலவற்றையும் அவர் எழுதியிருக்கிறார். குறிப்பாக ‘காவல்துறையில் விரல் ரேகையின் பயன்பாடு’ என்ற அவரது நூல் குறிப்பிடத்தக்கது. சென்னை ஹிக்கின்பாதம்ஸில்/லேண்ட் மார்க்கில் கிடைக்கும்.

அறிஞர் திரு பத்மநாபன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.

Advertisements

8 thoughts on “நம்பினால் நம்புங்கள்

 1. நண்பரே,

  வணக்கம். இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் என் விரல் ரேகையை எடுத்துப் பார்த்தேன். அதில் ஆங்கில லெட்டர் Q போலத் தெரிந்தது. என் மனைவியினுடைய ரேகை OOO என்று ஒன்றுக்குள் ஒன்று வட்டமாக உள்ளது. மகனின் ரேகையில் ஓம் போல இருக்கிறது. எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு என்ன பலன்கள் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். உதவுவீர்களா?

  1. அன்பு நண்பரே

   இதற்கு என்ன பதில் கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. திரு பத்மநாபன் தனது நூலில் இது போன்ற சின்னங்கள் இருந்தால் இன்ன பலன் என்று ஏதும் குறிப்பிடவில்லை. மனித விரல் ரேகைகளில் இது போன்ற சின்னங்கள், ஆங்கில எழுத்துக்கள், முகங்கள், பறவைகள் போன்ற சின்னங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாரே தவிர அதற்கான பலன் இன்னது என்று அவர் ஏதும் குறிப்பிடவில்லை. இப்படி உள்ளது என்பதைச் சுட்டுவதுதான் அவரது நோக்கம்.

   மேலும், ஒரு இந்துவின் விரல் ரேகையில் சிலுவையோ, பிறையோ இருக்கலாம். அதுபோல ஒரு கிறித்த்துவர், முகமதியர் ரேகைகளில் திருமண்ணோ, திருநீறோ இருக்கலாம். இது இப்படித்தான் என்று தீர்மானிக்கவோ வரையறுக்கவோ இயலாது.

   அனால் ஒரு விஷயம், பொதுவாக இந்த ரேகைகளில் இந்த இறைச் சின்னங்கள் இருப்பவர்கள் (சிலுவை, ஓம், திரு நீறு, திருமண், சக்கரம்) புனிதமானவர்கள் என்ற அல்லது தெய்வீக அருள் பெற்றவர்கள் என்ற ஒரு கருத்து உண்டு. ஆனாலும் அவை ஆய்வுக்குரியதுதான்.

   உங்கள் ரேகை அமைப்புகளில் இருக்கும் விஷயம் பற்றி என்னால் கருத்துக் கூற முடியவில்லை. அந்த நூலிலும் அப்படிப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை கோவிந்த்.

   ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பத்மநாபன் குறிப்பிட்டிருக்கிறார். பல ஆயிரக்கணக்காண குற்றவாளிகளின் ரேகைகளை அவர் ஆராய்ச்சி செய்த போது எல்லோரது ரேகைகளிலும் ஒரே ஒரு அம்சம் பொதுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படியானால்… குற்றவாளிகள் உருவாக்கப்படுவதில்லை, பிறப்பிலேயே அவர்கள் குற்றவாளிகளாகத் தான் பிறக்கிறார்கள், சமயம் வரும் போது அக்குற்றச் செயல்களைச் செய்து குற்றவாளிகள் ஆகிறார்கள் என்றாகிறது. அப்படியானால் இந்து மதத் தத்துவங்கள் கூறும் ஒருவனது வாழ்க்கை முன்பே தீர்மானிக்கப்பட்டபடிதான் (விதிப்படி) நடக்கிறது என்பது உண்மையாகிறது. இது பற்றி விரிவாக வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

   இந்தப் பதிவை நான் போட்டது, இப்படியெல்லாம் ஆய்வுகள் நடக்கின்றன – ரேகை அமைப்புகள் இருக்கின்றன என்பதைச் சுட்டத்தான். ஒவ்வொருவரும் அவரவர்களது ரேகை எப்படி இருக்கிறது என்று பார்த்து, ஏதேனும் முன் தீர்மானத்திற்கு வந்தால் அல்லது குழப்பத்திற்கு ஆளானால் நான் என்ன செய்வது? நானே எனது ரேகையில் என்ன சின்னம் இருக்கிறது என்று பார்க்க முனையவில்லை. ஆகவே நீங்கள் ஏதும் நினைத்து குழம்பாமல் இருக்கவும். தற்போதைக்கு உங்களுக்கு உதவ முடியாதவனாக இருக்கிறேன். மன்னிக்கவும். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. வணக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.