இலக்கியத்தில் ஆவிகள்

சிலம்பில் சிறு தெய்வங்கள், ஆவிகள், வழிபாடுகள்

‘ஆவிகள், பேய்கள், பூதங்கள் எல்லாம் இல்லை’, ‘எல்லாம் கட்டுக்கதை’ என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் திரு.வி.க, மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் தமது அனுபவங்களை, கண்டவற்றை, கேட்டவற்றை எழுதி வைத்துள்ளனர். நூலாக்கியுள்ளனர். எல்லாம் கற்பனை என்று கூடச் சிலர் வாதிடுவர். ஆனால் நம் பண்டைய இலக்கியங்களில் இவை பற்றிக் கூறப்படுவதற்கு இவர்கள் பதில் ஏதும் சொல்வதில்லை. சிலர் அவற்றையெல்லாம் மித மிஞ்சிய கற்பனை என்று கூடக் கூறுகின்றனர். எல்லாம் அவரவர்கள் அனுபவத்தின் பாற்பட்டே விளங்குகின்றது என்பதே உண்மை.


சிலம்பில் இறைவழிபாடு:

சிலப்பதிகாரத்தில் வரும் “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது யாரை? அநேகமாக கருப்பண்ணசாமியைக் குறிக்கலாம் என்றே தெரிகின்றது. அந்த பூதம் இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானதாகும் (அவரைப் போன்ற சில சிறுதெய்வங்களுக்கும் உண்டு). மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.

மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாம் வருவதில் தவறேதும் இல்லை. பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர் என்ற கூற்றும் இந்த உண்மைக்கு வலு சேர்க்கின்றது.

சிலம்பில் பேயும் பூதமும்:

நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

“கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’  எனவும் பேயைப் பற்றிச் சிலம்பு கூறுகின்றது.

வனசாரினி என வன தேவதையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது.

ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“ஆதி பூதத்து அதிபதிக் கடவுள்” என மதுரை நகரத் தலைமைத் தெய்வமான சிவபெருமான் குறிப்பிடப்படுகின்றார்.

சிலம்பில் ஆவி வழிபாடு
மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு கூறுகின்றது. இளங்கோவே கண்ணகியின் ஆவியோடு பேசியிருக்கிறார். அதன் ஆசி பெற்றிருக்கிறார்.

அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் எனப் பல்வேறு வகையான வழிபடு பூதங்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது.
சாமியாடுதல் பற்றியும், கொல்லிப் பாவை பற்றியும் சிலம்பு கூறுகின்றது.  தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி சிறப்பானது.
சமணரால் இயற்றப் பெற்ற சிலம்பு கூறும் அளவிற்கு மணிமேகலை தவிர்த்த மற்ற இலக்கியங்கள், மக்கள் வாழ்வோடு இயைந்த இது போன்ற இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகள் பற்றிக் கூறவில்லை என்பதே உண்மை.

மற்ற சில சிறு தெய்வங்களுக்கும் பலவாறான வரலாறுகள் நிச்சயமாக இருக்க்கும். அக்காலத்தில் வாழ்ந்த வீரர்கள் பலரின் நடுகற்கள் வழிபாடே பின்னர் சிறு தெய்வ வழிபாடானது என்ற கூற்றிலும் உண்மை இருக்கின்றது. சிலம்பில் இன்னும் பல்வேறான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. கொற்றவையின் வாகனம் சிங்கம் மட்டுமல்ல. மானும் கூட.
வட நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றால் அங்கே காளி அல்லது சாமுண்டிக்கு சிங்கம், புலி மட்டுமல்லாமல், முதலை, கழுதை, களிறு போன்றவையும் வாகனமாக இருப்பதைப் பார்க்கலாம். ( கழுதை ஸ்ரீ தேவியின் மூத்த சகோதரியின் வாகனம்)
சிலம்பில் வரும் கோவலன் பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியியமிருந்து தன்னைக் காத்துக் கொள்கிறான். யார்ந்த வனசாரிணி? நம் கதைகளில் வரும் வன தேவதைதானா அல்லது மோகினிப் பேயா?

இந்த விஷயங்கள் எல்லாம் வெறுமனே கற்பனை என்று ஒதுக்கி விட்டு விடலாமா? நமக்குத் தேவையானவை அல்லது நம்பிக்கைக்கு உகந்தவை எல்லாம் உண்மை. மற்றவை எல்லாம் வெறுமனே கற்பனை அல்லது உயர்வு நவிற்சி என்று ஒதுக்கி வைத்து விடுதல் புத்திசாலித் தனம் ஆகாது. உண்மையைத் தேட வேண்டும் என்பதே உண்மையான உண்மை. தேடுவோம்.


Advertisements

7 thoughts on “இலக்கியத்தில் ஆவிகள்

  1. வணக்கம்.
    சமீபத்தில் தான் என் நண்பன் ஒரு மோட்டார் வாகன விபத்து உயிரிழந்தான். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது போன்ற அகால மரணம் அடைத்தவர்கள் ஆத்மா சாந்தி அடயூமா?

    1. அநேகமாக அவர்கள் மறுபிறவி எடுத்து விடுவார்கள். ஆத்ம சாந்திக்கான பரிகாரம் அந்தப் பிறப்பை வலுப்படுத்தும். விரைவுபடுத்தும்.

    1. ஆம். உண்மை. எனக்கு நேரம் இல்லாதததால் அவை பற்றிக் கூற இயலவில்லை. கலிங்கத்துப் பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் மட்டுமல்லாது முத்தொள்ளாயிரம், அகம், குறுந்தொகை, புறப்பாடல்களிலும் நமது தொன்ம வழிபாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் தேடி எடுத்துக் குறிப்பிடுவது கடினம் என்பதால் எனது பாடப் புத்தகமான சிலம்பிலிருந்தும், மேகலையிலிருந்தும் தகவல்களை எடுத்தாண்டிருக்கிறேஎன். குறள் பற்றி முன்னரே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேஎன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s