சித்தர்கள் யார்?

சித்தர்கள்
சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

அகத்தியர்
அகத்தியர்

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;

                              …………….

  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

munivarசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “

– இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

84 thoughts on “சித்தர்கள் யார்?

  1. http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

    ஞான நூல்கள் – PDF
    மெய் ஞானம் என்றால் என்ன?
    இறைவன் திருவடி எங்கு உள்ளது?
    ஞானம் பெற வழி என்ன?
    வினை திரை எங்கு உள்ளது?
    வினை நம் உடலில் எங்கு உள்ளது?
    வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
    ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
    சும்மா இரு – இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
    மனம் எங்கு உள்ளது?

    ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

    திருஅருட்பாமாலை 3 — PDF
    திருஅருட்பாமாலை 2 — PDF
    திருவாசக மாலை — PDF
    திருஅருட்பாமாலை 1 — PDF
    ஞானக்கடல் பீர் முகமது — PDF
    மூவர் உணர்ந்த முக்கண் — PDF
    ஞானம் பெற விழி — PDF
    மந்திர மணிமாலை(திருமந்திரம்) — PDF
    கண்மணிமாலை — PDF
    அருள் மணிமாலை — PDF
    சாகாக்கல்வி – PDF
    வள்ளல் யார் – PDF
    உலக குரு – வள்ளலார் – PDF
    திருஅருட்பா நாலாஞ்சாறு
    சனாதன தர்மம்
    பரம பதம் – எட்டு எழுத்து மந்திரம் அ
    ஜோதி ஐக்கு அந்தாதி
    அகர உகர மாலை
    ஞான மணிமாலை
    ஆன்மநேய ஒருமைப்பாடு
    ஜீவகாருண்யம்
    ஸ்ரீ பகவதி அந்தாதி
    அஷ்டமணிமாலை
    திருஅருட்பா தேன்

    1. அன்பும் அருளும் கருணையும் இரக்கமும் பக்தியும் உண்மையும் நேர்மையும் கொண்டு வழுவாது தூய வாழ்வு வாழ்வோர்க்கு சித்தர்கள், மகான்களின் அருள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன? கண்டிப்பாகக் கிடைக்கும்.

  2. ரமணர் ஐயாவிற்க்கு…

    //பிரம்ம சூத்திரம், பகவான் ரமணரின் நான் யார், பகவத் வசனாம்ருதம், ஞான வாசிஷ்டம் போன்ற நூல்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.//

    இந்த நூல்கள் மின் நூலாக கிடைக்குமா? நான் இருப்பது கிராமத்தில் இங்கு நூலகங்களில் இந்த நூல்கள் கிடைப்பது அரிது… கிடைக்குமா ஐயா???

    லதாவினீத்குமார்.

    1. லதா வினீத் குமார்..

      நீங்கள் எந்த ஊரில்/நாட்டில் வசிக்கிறீர்கள்? இந்தியா/தமிழகம் என்றால் எளிதாக மேற்கண்ட புத்தகங்களை எளிதாக வாங்கிக் கொள்ள இயலும். அயல்நாடு என்றாலும் இணைய நூல் விற்பனைக்கடைகள் மூலம் வாங்க இயலுமே! முன் நூலாக வைத்திருப்பதை விட புத்தகமாக வைத்திருந்தால் மனம் சமநிலை இழக்கும் போது புரட்டிப் பார்த்து மேலும் தெளிவடைய உதவிகரமாக இருக்கும். ஆகவே மின்நூலை விட புத்தகங்களே சிறந்தது என்பது என் கருத்து.

      இருந்தாலும்…

      உங்கள் ஆர்வத்தைக் குலைக்க விரும்பவில்லை.

      பகவான் ரமணரின் ”நான் யார்?” இங்கே… http://www.sriramanamaharshi.org/downloads/who_am_I_Tamil.pdf

      மகரிஷி வாய் மொழி இங்கே…

      Click to access Sri_Maharshi_voimozhi.pdf

      மற்ற ரமணாச்ரம நூல்களை நீங்கள் http://www.sriramanamaharshi.org/bookstallsales/books-in-tamil-c-153/?zenid=828a7e6694b2ae0588401c846cffcf3c என்ற தளத்தில் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

      பிரம்ம சூத்திரம், ஞான வாசிட்டம் போன்ற நூல்களை நீங்கள் கடைகளில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

      ஆர்வத்துக்கும் தேடலுக்கும் வாழ்த்துக்கள்.

      உங்கள் வயது என்ன என்பது தெரிந்தால் (அதற்கேற்ப) மேலும் சில நூல்களைப் பரிந்துரைக்க ஏதுவாக இருக்கும்.

      நன்றி.

      1. ரமணர் ஐயாவிற்க்கு…

        என் வயது 28. சித்தர்கள் வழிபாட்டை விரும்புகிறேன். உங்களின் கருத்துப்படியே புத்தகமாக கூடிய விரைவில் வாங்குகிறேன் ஐயா. மேலும் சில சந்தேகங்கள் இருக்கிறது கேட்கலாமா? உங்களை நான் எப்படி மின்னஞ்சலில் தொடர்பு கொள்வது???

      2. ரமணர் ஐயாவிற்க்கு…

        நான் பழநி-யில் வசிக்கிறேன். பழநி-யில் இருந்து உடுமலை செல்லும் வழியில் எனது ஊர் உள்ளது. உடுமலைக்கும் பழநிக்கும் நடுவில் உள்ளது.

        லதாவினீத்குமார்.

  3. //நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.//

    //அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.//

    ரமணர் ஐயாவிற்க்கு…. தகுதி என்பது எதைப்பொறுத்தது? தகுதி என்பது என்ன? தூய்மையான வாழ்வு என்பது என்ன? தகுதியற்றோர் என யார்யாரை சித்தர்கள் ஒதுக்குவார்கள்?

    தவறானவர்கள் திருந்தினால் சித்தர்களும் இறைவனும் ஏற்றுக்கொள்வார்களா? தயவுசெய்து விளக்கவும். ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்……

    1. //தகுதி என்பது எதைப்பொறுத்தது?//

      தகுதி என்பது நம் நடத்தையை, பிறருக்கு துன்பம் நினைக்காத, செய்யாத, தூய வாழ்வை, பிற உயிர்களையும் தம் உயிர் போல் மதிக்கும் செந்தன்மையைப் பொறுத்தது.

      //தகுதி என்பது என்ன?//

      ஒரு பாத்திரம் நீரைத் தாங்க வேண்டுமென்றால் அது முதலில் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும். அந்த நீர் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பாத்திரம் சுத்தமானதாக இருக்க வேண்டும். அந்த நீர் எல்லோருக்கும் பயன் தரக் கூடியதாய் அமைய வேண்டுமென்றால் அது தூசி, அழுக்கு, குப்பைகள் சேராத வண்ணம் மூடி பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு பாத்திரத்திற்கு இருக்கும் இத்தகைய தன்மைகள் போல் மனிதனுக்கும் சில நிலைகளை உணர, உயர அடிப்படையான குணங்கள் இருக்க வேண்டும். அதுவே தகுதி.

      //தூய்மையான வாழ்வு என்பது என்ன? //

      எல்லாவுயிரையும் தன்னுயிர் போல் நினைப்பது, தன்னைப் போலவே பிறரையும் மதிப்பது, நினைப்பது, நேசிப்பது, பிறருக்கு துன்பம் நினைக்காத, செய்யாத ஒழுக்கமான அற வாழ்வே தூய்மையான வாழ்வு.

      //தகுதியற்றோர் என யார்யாரை சித்தர்கள் ஒதுக்குவார்கள்?//

      தவறு என்று நன்கு தெரிந்தும், அது தவறு என உணர்த்தப்பட்டும் கூட அதை விருப்பத்துடன் செய்பவர்களை, அறம் பிறழ்பவர்களை, மனதின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து குற்றங்கள் செய்து கொண்டிருப்பவர்களை தகுதியற்றோர் என சித்தர்கள் ஒதுக்குவார்கள்.

      //தவறானவர்கள் திருந்தினால் சித்தர்களும் இறைவனும் ஏற்றுக்கொள்வார்களா?//

      கண்டிப்பாக. ஆனால் மீண்டும் அவர்கள் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். அற வாழ்வு வாழ வேண்டும். இல்லாவிட்டால் அதள பாதாளம்தான்.

      நண்பரே உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் திருக்குறளிலேயே உள்ளன. கீதையிலும் உள்ளது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  4. எவ்வித பயிர்ச்சி முறை நம்மை நாம் அரிய உதவும்
    எந்த முறையில் என்ன என்ன பயிர்ச்சிகளை எடுதுக்கொள்ள வேண்டும்
    இதற்கு எதாவத புதகம் உள்ளதா.

    waiting for your reply sir!

    1. பிரம்ம சூத்திரம், பகவான் ரமணரின் நான் யார், பகவத் வசனாம்ருதம், ஞான வாசிஷ்டம் போன்ற நூல்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

  5. your article is not fully content…self contrdictory….for ex you say ” அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.”……..how dead planets are related with live earth…astromomy studies planetary motion…this is OK… planetary motion is no way related with us…If you contradict this..please prove that i am wrong…let me correct myself….

    1. நன்றி தமிழ்வாணன் அவர்களே!! என்ன ஒரு அருமையான பெயர்!! ஏனோ, எனக்கு எழுத்து வேந்தர் தமிழ்வாணனின் நினைவு வருகிறது. வாழ்த்துகள்!!

    1. முழுமையான பதில் இங்கே… உங்கள் கேள்விக்கு கடைசியில் வருகிறேன்.

      ——

      ராம்..

      இந்துஞான மரபில் பல்வேறு தத்துவ சிந்தனைகள் பயன்பட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று தாந்த்ரீகம். இது யோக வழிமுறையால் இவ்வுடலைப் பயன்படுத்தி, அதனை தூய்மையாக்கி, இறைவன் இருக்கும் ஆலயமாக அதை மாற்றுவது என்று ஒருவிதத்தில் கூறலாம். விளக்கமாகச் சொன்னால் புலன்கள் மூலம் அனுபவிக்கும் உடலின்பத்தையே பற்றற்றதாக்கி, அதனை இறைவனை நோக்கிச் செல்லும் பயணத்தின் பகுதியாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி என்றும் கூறலாம். சுருக்கமாகச் சொன்னால் எதன் எதன் மூலம் எல்லாம் நாம் ஞான வாழ்வில் மேலே செல்லச் செல்லச் சறுக்கி விடுமோ, அதை அடக்கி அடக்கி ஆள்வதை விட, அதனை அதன் இயல்பில் போக்கில் விட்டு பின் வெல்வது. ஒரு வரியில் சொல்வதானால் போகத்தை யோகமாக மாற்றுவது. அதற்கான வழி தாந்த்ரீகம்.

      தாந்த்ரீக சாஸ்திரம் என்பது மிகக் கடுமையானது. அதன் பயிற்சியில் சறுக்கி விழுந்தால் அதல பாதாளம்தான். மீண்டும் யோக நிலை நோக்கிச் செல்ல பல காலம் ஆகும். அதனால் தான் அதனை பலரும் பின்பற்றுவதில்லை. இக்கலியுகத்தில் மிக எளிதானது கர்ம யோகமும், பக்தி யோகமும் என்பதால் நம் ஞானிகள் அதையே அதிகம் வலியுறுத்தினர்.

      கர்ம யோகம் – எந்தச் செயலைச் செய்தாலும் அதில் விருப்பு, வெறுப்பற்று, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, அதனால் விளையும் பலன்களை எதிர்பார்க்காமல் உண்மையாக, பூரணத்துவமாகச் செய்வது.

      பக்தி யோகம் – அனைத்தும் இறவைன் செயலே என்பதை உணர்ந்து எப்போதும் அவனது நாமத்தைச் சொல்லித் துதித்து எந்தச் செயல்களையும் செய்வபது.

      கர்ம யோகம் கடினமானது. ஆனால் நாள்பட நாள்பட ஞானநிலைக்கு இட்டுச் செல்லக் கூடியது. பக்தி யோகம் எளிமையானது. எல்லோராலும் பின்பற்றத் தகுந்தது. ஆனால் மனிதர்களின் ’அகந்தை’ (ஈகோ) அவ்வளவு எளிதில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட விரும்பாது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டே அனைத்திலும் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.

      அது எதற்காகத் தேடுகிறோம் என்பதைப் பொருத்தது. லௌகீக சுகங்களுக்காகவா, அல்லது ஆன்ம அனுபூதி பெறவா என்பதைப் பொருத்து அது சுயநலமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஆனாலும் அத்வைதத் தத்துவத்தின் படி அனைத்தும் அகத்துள்ளே அமைந்திருப்பதால், அதை வெளியே தேடுவதில் பயனில்லை என்பது ஒரு கருத்து.

      இதைத் தான் பகவான் ரமணர், “நீ யார் என்பதை உன்னுள் பார். அதை அறிந்தால் மற்றவையெல்லாம் தானாய் விளங்கும்” என்கிறார். சொல்லப் போனால் “நாம் யார்” என்பதை அறிந்தால் அறிய வேண்டிய வேறு விஷயங்களே எதுவும் இல்லை என்பதே ரமணர் கருத்து. அதுவே ஆத்மா அனுபூதி – தன்னை உணர்வதன் மூலம் இறையை உணர்தல் – “அகம் பிரம்மாஸ்ஸ்மி” தத்துவம். அதை முழுமையாக உணர்ந்தால் அறிய வேண்டியது எதுவும் இல்லை. யாரையும் தேட வேண்டியதும் இல்லை. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு ஜென்மாவிலும் நடக்கலாம். பல யுகங்களும் ஆகலாம். அது, ஆன்மாவின் வாசனையை (உயர்வை அல்லது பக்குவத்தைப்) பொருத்தது.
      ——

      பகுத்தறிவுவாதிகள் கூறுவது கடவுள் இல்லை. மனித ஆற்றலை மிஞ்சிய சக்திகள் எதுவும் இல்லை. இயற்கைக்கு மாறானது எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அதை நம்ப வேண்டியதில்லை போன்றன. இன்னும் நிறைய இருக்கின்றது அதை விரித்து இங்கே கூற இயலாது. சுருக்கமாகச் சொன்னால் தன்னை மட்டுமே நம்புவது பகுத்தறிவு. தான் மட்டுமல்ல; தன்னை மீறிய சக்திகளின் தாக்கமும் இந்த வாழ்வில் உள்ளது என்று அந்தச் சக்திகளை நம்புவது ஆன்மீகம்.

      அந்தச் சக்திகளை நம்புவதோ, கண்ணுக்குத் தெரியாத அவற்றைப் பற்றி ஆராய்வதோ தேவையற்றது. குழப்பத்தைத் தருவது. முட்டாள்தனமானது என்பது பகுத்தறுவுவாதிகளின் வாதம். அவர்கள் அறிவைக் கொண்டு மட்டுமே அளவிடுகிறார்கள். விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது. மெய்ஞ்ஞானம் அறிதலுக்கும் அப்பாற்பட்டது.

      பகுத்தறிவுவாதிகள் கூறுவது போல் தேவையில்லாதவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு தெரிந்து கொண்டாலும் பயன் விளையப்போவதில்லை என்பதைத் தான் நான் “ …. நம் பகுத்தறிவு வாதிகள் கூறுவது போல் தேவையில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை….” என்று கூறினேன்.

      நன்றி.

      1. எல்லா ஜீவாத்மாவின்
        புலன்களீலிருந்துபுலன்கலை
        புல்ன்களூக்கு
        புலப்படாமல்
        புலன்கலை
        ஆட்டுவிப்பது
        பரமாத்மா

    1. ராம்..

      இந்துஞான மரபில் பல்வேறு தத்துவ சிந்தனைகள் பயன்பட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று தாந்த்ரீகம். இது யோக வழிமுறையால் இவ்வுடலைப் பயன்படுத்தி, அதனை தூய்மையாக்கி, இறைவன் இருக்கும் ஆலயமாக அதை மாற்றுவது என்று ஒருவிதத்தில் கூறலாம். விளக்கமாகச் சொன்னால் புலன்கள் மூலம் அனுபவிக்கும் உடலின்பத்தையே பற்றற்றதாக்கி, அதனை இறைவனை நோக்கிச் செல்லும் பயணத்தின் பகுதியாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி என்றும் கூறலாம். சுருக்கமாகச் சொன்னால் எதன் எதன் மூலம் எல்லாம் நாம் ஞான வாழ்வில் மேலே செல்லச் செல்லச் சறுக்கி விடுமோ, அதை அடக்கி அடக்கி ஆள்வதை விட, அதனை அதன் இயல்பில் போக்கில் விட்டு பின் வெல்வது. ஒரு வரியில் சொல்வதானால் போகத்தை யோகமாக மாற்றுவது. அதற்கான வழி தாந்த்ரீகம்.

      தாந்த்ரீக சாஸ்திரம் என்பது மிகக் கடுமையானது. அதன் பயிற்சியில் சறுக்கி விழுந்தால் அதல பாதாளம்தான். மீண்டும் யோக நிலை நோக்கிச் செல்ல பல காலம் ஆகும். அதனால் தான் அதனை பலரும் பின்பற்றுவதில்லை. இக்கலியுகத்தில் மிக எளிதானது கர்ம யோகமும், பக்தி யோகமும் என்பதால் நம் ஞானிகள் அதையே அதிகம் வலியுறுத்தினர்.

      கர்ம யோகம் – எந்தச் செயலைச் செய்தாலும் அதில் விருப்பு, வெறுப்பற்று, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, அதனால் விளையும் பலன்களை எதிர்பார்க்காமல் உண்மையாக, பூரணத்துவமாகச் செய்வது.

      பக்தி யோகம் – அனைத்தும் இறவைன் செயலே என்பதை உணர்ந்து எப்போதும் அவனது நாமத்தைச் சொல்லித் துதித்து எந்தச் செயல்களையும் செய்வபது.

      கர்ம யோகம் கடினமானது. ஆனால் நாள்பட நாள்பட ஞானநிலைக்கு இட்டுச் செல்லக் கூடியது. பக்தி யோகம் எளிமையானது. எல்லோராலும் பின்பற்றத் தகுந்தது. ஆனால் மனிதர்களின் ’அகந்தை’ (ஈகோ) அவ்வளவு எளிதில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட விரும்பாது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டே அனைத்திலும் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.

    2. // sitharkalai thedi avargal arulukaaga kaadu malaiyellam thirivadhu epdi suyanalamagum.//

      ராம்,

      அது எதற்காகத் தேடுகிறோம் என்பதைப் பொருத்தது. லௌகீக சுகங்களுக்காகவா, அல்லது ஆன்ம அனுபூதி பெறவா என்பதைப் பொருத்து அது சுயநலமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஆனாலும் அத்வைதத் தத்துவத்தின் படி அனைத்தும் அகத்துள்ளே அமைந்திருப்பதால், அதை வெளியே தேடுவதில் பயனில்லை என்பது ஒரு கருத்து.

      இதைத் தான் பகவான் ரமணர், “நீ யார் என்பதை உன்னுள் பார். அதை அறிந்தால் மற்றவையெல்லாம் தானாய் விளங்கும்” என்கிறார். சொல்லப் போனால் “நாம் யார்” என்பதை அறிந்தால் அறிய வேண்டிய வேறு விஷயங்களே எதுவும் இல்லை என்பதே ரமணர் கருத்து. அதுவே ஆத்மா அனுபூதி – தன்னை உணர்வதன் மூலம் இறையை உணர்தல் – “அகம் பிரம்மாஸ்ஸ்மி” தத்துவம். அதை முழுமையாக உணர்ந்தால் அறிய வேண்டியது எதுவும் இல்லை. யாரையும் தேட வேண்டியதும் இல்லை. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு ஜென்மாவிலும் நடக்கலாம். பல யுகங்களும் ஆகலாம். அது, ஆன்மாவின் வாசனையை (உயர்வை அல்லது பக்குவத்தைப்) பொருத்தது.

    3. // please can u guide me where tantra yoga in india is being taught.//

      அடியேன் அறியேன் ராம். நம் பகுத்தறிவு வாதிகள் கூறுவது போல் தேவையில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை. தங்கள் வருகைக்கு நன்றி.

  6. “தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்” Dear Ramanan If we try to get the blessing of sitha,s also one of the selfishness.

    1. Dear Yuvaraj..

      Sorry for the delayed answer. All the Saints like Bagavan Ramanar, Seshadri, Mother, Sri aurobindho, Ramakrishnar all are my gurus. But the true aspect is our Athma only is our Real GURU. Ramanar also mentioned this.

      marriage life is acceptable in siddha margam. Vasishtar – arundadithi, akasthiyar-loba muthrrai, jamadakni – renuka…. are the examples.

      If you like you can marry. if not leave it.

      i.e. it’s necessary or not you can only decide.

      About Marriage and Brammacharyam Sri aurobindho said that …

      பிரம்மச்சர்யம்

      யோக வாழ்வை மேற் கொள்ள விரும்புபவர்களுக்கு பிரம்மச்சர்யம் மிக முக்கியமான ஒன்றாகும் என்றாலும் பிராணாயாமம், ஆசனங்கள் போன்றவற்றால் மட்டும் புலனடக்கம் ஏற்பட்டு விடாது. மாறாக சில சமயம் இவை பிராண மய சக்தியை அதிகரித்து, உள்ளுணர்வைத் தூண்டி, பாலியல் வேட்கைகளை அதிகரிக்கவும் செய்து விடும். எனவே இவற்றை வெல்வதற்கு ஒரே வழி, மனக்கட்டுப்பாடும், இவ்வகை எண்ணங்களில் இருந்து விலகி இருப்பதும் தான்.

      திருமணம்

      திருமணம் என்பது தனிமனிதனின் இலட்சியத்தைப் பொறுத்ததாகும். எளிய இன்ப வாழ்வை மேற் கொள்ள விரும்புவோர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் கலை, இசை, தேசப் பணி, சமுதாய சீர்திருத்தம் போன்ற உயர்ந்த இலட்சிய வேட்கை உடையோர் அதே வகை எண்ண வேட்கை உடையவர்களை வாழ்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதே அவர்களின் இலட்சியத்தை அடைய உதவிகரமாக இருக்கும். உடல் வேட்கையைப் பொறுத்தன்றி, உயர்ந்த எண்ணங்களைப் பொறுத்தே இவ்வகை முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

      are you Satisfied now yuva?

  7. Namaskar,

    Everybody should follow the spiritual path strongly in your life it will bring you near or close to God. All the Siddhas helps you for your spiritual journey. spiritual is real there is no religious, caste, race or colour differences. Your goal is parambrahma, it is very important. You chant the Maha mantra “Om Param Brahma Chakradhar” everybody get his bliss.Only this Maha Mantra transfering you Kaliyug to Sathyug. The “Mahasambuti Chakradhar”. He has himself taken birth of welfare of this universe. He will establish Dharma and sathyuga on 2012. Everyone come and take shelter at his feet.

    “OM PARAM BRAHMA CHAKRADHAR”

  8. Namaskar,

    Everybody should follow the spiritual path strongly in your life it will bring you near or close to God. All the Siddhas helps you for your spiritual journey. spiritual is real there is no religious, caste, race or colour differences. Your goal is parambrahma, it is very important. You chant the Maha mantra “Om Param Brahma Chakradhar” everybody get his bliss.Only this Maha Mantra transfering you Kaliyug to Sathyug. The “Mahasambuti Chakradhar”. He has himself taken birth of welfare of this universe. He will establish Dharma and sathyuga on 2012. Everyone come and take shelter at his feet.

    “OM PARAM BRAHMA CHAKRADHAR”

  9. Dear brothers and sisters,

    Everybody should follow the spiritual path strongly in your life it will bring you near or close to God. All the Siddhas helps you for your spiritual journey. spiritual is real there is no religious, caste, race or colour differences. Your goal is parambrahma, it is very important. You chant the Maha mantra “Om Param Brahma Chakradha” everybody get his bliss.Only this Maha Mantra transfering you Kaliyug to Sathyug.

  10. அன்பு ரமணன்,வணக்கம்
    அருட்சிவம் வலைப்பதிவில் நான் யார்? என்னும் பதிவில் சித்தர்கள் தொடர்பான விவாதம் ஒன்றினை சூழ்நிலை கருதி ஆரம்பித்துள்ளேன். மேற்படி விவாதத்தில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன். தற்போது உங்களுடைய வலைப்பதிவில் சித்தர்கள் பற்றி தேடும்போது உங்களுடைய சித்தர்கள் யார் ?. பதிவு கிடைத்தது. மேற்படி இந்த பதிவினை தாங்கள் அருட்சிவம் வலைப்பதிவில், நான்யார் விவாதமேடை பின்னூட்டத்தில் இணையுங்கள். நான் அதை நேரடியாக பதிவில் இணைப்பு கொடுத்துவிடுகின்றேன். நான்யார்?.
    http://www.siddharkal.blogspot.com இந்த முகவரியில் சென்று பார்க்க வேண்டுகின்றேன். அப்படியே எனது மற்றைய பதிவுகளையும், profileஐயும் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
    அடுத்து, வள்ளலார் பிறந்தநாள் அக்டோபர்.05 ல் வருகின்றது. ஞாபகப்படுத்துகின்றேன்.
    அன்புடன்.
    பா.முருகையன், C/o.வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.

  11. The subject is very interesting and makes good waves in human mind towards the originality or ‘origin’ality(பிறப்பிடம்) of our spirit soul (ஆன்மா) .pls continue your writings based on sidhas. Thank you ramanan.

  12. சித்தர்களின் கருத்து மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். அனைவருக்கும் இவை நன்மை அளிக்கும். நன்றி. இப்பணி மேல் ஓங்கி வளர நம் அனைவருக்கும் ஸ்ரீ பழனி மூட்டை சாமியின் ஆசி கிடைக்க பிராத்திக்கிறேன்.

  13. Dear Ramana

    The above real massage is given by u is very good and it is useful to the people in kaliyuga .now days we people don’t no about the real science of the ancient res hi and Siddha .when British enter into india most of our science are destroyed ,Today modern science is not a real science ,for example about 1500years ago lord Siva temple we will see the nava graga in that we will see the sun is middle all other plant are around the sun,from that we understood before 1500 years ago itself our Indian scientist (SIDDHAR) did research in space without any instrument.How can it possible? Yes it is possible by olden days natural science in India ,today science is a artificial science .but today most of them believing only artificial science ,we all are thinking we developed ,compere to olden ancient science the modern science is nothing,in modern science we destroying the natural and we creating the artificial it is very danger to the world .so we all try follow our real science give by our real scientist (SIDDHAR) . OLD IS GOLD

    1. Yes.. If we Deserve for that it’s possible. Do you know if we deserve, we can see the siddhas, rishis and GOD also.

      தகுதி இருந்தால் சித்தர்கள், யோகிகள் ஏன் கடவுளையே காண முடியும். அப்படிக் கண்டவர்கள் பலர் நமக்கு முன்னால் வாழ்ந்திருக்கின்றனர். தேவை உண்மையான தேடலும் ஆர்வமும் அதற்கான தகுதியும் மட்டுமே.

  14. சித்தர்கள் இயற்கை மற்றும் இறைவனை அறிந்ததால் அவர்களின் சிறிய நினைவும் நம் வாழ்வின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அதனை உணர நம்மால் முடிவதில்லை அதற்கான முறையான முயற்சியும் பயிற்சியும் தேவை , இவை இருந்தால் எல்லோரும் சித்தர்களின் அருளால் சித்தர் ஆகலாம்.
    இப்படிக்கு
    பிரகாஷ்

    1. நல்லது பிரகாஷ். எல்லாவற்றிற்கும் தகுதி என்ற ஒன்று வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல்… அப்போது மட்டுமே அனைத்தும் சாத்தியம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  15. //இயற்கையை வென்றவர்கள்//

    இயற்கையை புரிந்தவர்கள் என்று கூறலாம்

    //உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும்//

    இப்படி வாழ்ந்ததால் யாருடைய அருளையும் எதிர்பாக்க தேவையில்லை, நாம் தான் கடவுள் -:)

sathish kumar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.