பிரும்மரிஷி மலை

மலை
மலை

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

மலைப் பகுதி
மலைப் பகுதி

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

தலையாட்டிச் சித்தர்
தலையாட்டிச் சித்தர்

இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.

மேல் விவரங்களுக்கு — http://www.gatewaytopeace.org/

http://www.nandhi.com/

(தகவல் உதவி : சிவநெறிச் செல்வர் – சிங்கை கிருஷ்ணன்)

Advertisements

6 thoughts on “பிரும்மரிஷி மலை

  1. நிச்சயமாக வினோ. கால ஞானத்தின் பழைய இதழ்களை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சுனாமி இன்ன நாளில், இன்ன நேரத்தில், இந்த இந்தப் பகுதிகளில் தாக்கும் என்று முன்பே சொன்ன நூலாம் அது. நான் பலரிடம் கேட்டு, உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்புதான் இதைச் சொல்கிறேன். எதிர்காலத்தில் நடக்கும் பல சம்பவங்கள் பற்றி அந்த நூலில் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நூலின் அனைத்துப் பிரதிகளும் கிடைத்தால் நல்லது. பார்க்கலாம்.

   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

 1. சில வருடங்களுக்கு முன்புவரை இந்த மலையை கண்டுகொள்ள ஆள் இல்லை இன்று பார்த்தால் அது புனிதமலையாகிவிட்டது…. இந்த விஷயம் தலையாட்டி சித்தருக்கு தெரியுமான்னு தெரியல -:)

  தலையாட்டிச் சித்தர் படத்த உங்கள் பதிவில் போட்டதுக்கு நன்றி, அவர பற்றி கேள்விபட்டிருக்கேன் இப்பதான் பாக்குறேன்.

  ****
  நீங்க திருச்சி பகுதியை சேர்ந்தவரா ?

  1. தங்கள் வருகைக்கு நன்றி ஞானப் பித்தரே! அடியேன் திருச்சியைச் சேர்ந்தவன் அல்ல. தலையாட்டிச் சித்தரைப் பற்றியும் முழுமையாக அறிந்தவனில்லை. பெரியவர், நண்பர் சிங்கை கிருஷ்ணன் மற்றும் ஆஸ்திரேலிய நண்பர் டாக்டர் விஜய் மூலம் இம்மலை பற்றிய தகவல் அறிந்தேன். அறிந்ததை இணையத்தில் பதிந்தேன். பகிர்ந்தேன். அவ்வளவுதான். நேரம் கிடைக்கும் போது அங்கு செல்ல வேண்டும்.

   அன்றும், இன்றும், என்றும் எனக்குப் பிடித்த மலை அண்ணாமலை – திருவண்ணாமலை தான். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் என் நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s