பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாஸ சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

“அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞான பாநு”வாக விளங்கி, “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்னும் மொழிக்கேற்ப முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவ வாழ்க்கை வாழ்ந்தவர் பாம்பன் ஸ்ரீ மத் குமர குரு தாச சுவாமிகள். சைவம் தழைக்கும் பொருட்டு  அவதரித்த அம்மகான், 1850-1929 வரை கிட்டத்தட்ட சுமார் 79 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து ஆன்மிக, இலக்கிய சேவை புரிந்தவர். முருகப் பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும் தெய்வ மொழியாகிய தமிழ் மொழிக்கும் தமது கவித் திறத்தால் சிறப்பு செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுபட விளக்கியுள்ள தவ சீலர். பொய்யாமையையும், கொல்லாமையையும் வலியுறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மகான்.

அவருடைய பாடல்கள் மந்திர சித்தி பெற்றவை. குறிப்பாக சண்முக கவசம், தௌத்தியம், குமாரஸ்தவம் போன்றவை மிகவும் சிறப்புப் பெற்றவை. குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள், நல்ல  ஆரோக்கியமான குழந்தை  பெற தினமும், காலை, மாலை இரு வேளை முருகன் திருவுரு முன் பாராயணம் செய்ய வேண்டியுது “வேற்குழவி வேட்கை”. பாப நாசம், சத்துரு ஜெயம், ஆயுள் விருத்தி,  முக்திப் பேறு இவற்றிற்காகப் பாராயாணம் செய்ய வேண்டியது ‘அட்டாட்ட விக்கிரக லீலை’. பகைவர்களினால் ஏற்படும் தொல்லைகள், ஏவல், பில்லி, சூனியங்கள், வம்பு வழக்குகள், சச்சரவுகள், சங்கடங்கள், மனக் குழப்பங்கள், செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்துகள் போன்றவை நீங்க நாம் தினமும் சொல்ல வேண்டியது “சண்முக கவசம்.” இதனைப் பாராயணம் செய்வது, விபத்து போன்றவற்றிலிருந்தும், மற்றும் எதிர்பாரா ஆபத்துக்களில் இருந்தும் ஒருவரைக் காப்பாற்றும். சுவாமிகளால் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற நூல்களுள் ஒன்று ‘பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’ என்ற நூலாகும். இந்தப் பாடலை முறைப்படி பாராயணம் செய்து பாடும் பொழுது முருகனே அங்கு எழுந்தருள்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இனி  சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

ஓம் சண்முக பதயே நமோ நம!
ஓம் ஷண்மத பதயே நமோ நம!
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
ஓம் நவநிதி  பதயே நமோ நம!
ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
ஓம் நரபதி பதயே நமோ நம!
ஓம் சுரபதி பதயே நமோ நம!
ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
ஓம் ஷடஷர பதயே நமோ நம!
ஓம் கவிராஜ பதயே நமோ நம!
ஓம் தபராஜ பதயே நமோ நம!
ஓம் இகபர பதயே நமோ நம!
ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
ஓம் ஜயஜய பதயே நமோ நம!
ஓம் நயநய பதயே நமோ நம!
ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
ஓம் வல்லீ பதயே நமோ நம!
ஓம் மல்ல பதயே நமோ நம!
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
ஓம் இஷ்டி பதயே நமோ நம!
ஓம் அபேத பதயே நமோ நம!
ஓம் கபோத பதயே நமோ நம!
ஓம் வியூஹ பதயே நமோ நம!
ஓம் மயூர பதயே நமோ நம!
ஓம் பூத பதயே நமோ நம!
ஓம் வேத பதயே நமோ நம!
ஓம் புராண பதயே நமோ நம!
ஓம் ப்ராண பதயே நமோ நம!
ஓம் பக்த பதயே நமோ நம!
ஓம் முக்த பதயே நமோ நம!
ஓம் அகார பதயே நமோ நம!
ஓம் உகார பதயே நமோ நம!
ஓம் மகார பதயே நமோ நம!
ஓம் விகாச பதயே நமோ நம!
ஓம் ஆதி பதயே நமோ நம!
ஓம் பூதி பதயே நமோ நம!
ஓம் அமார பதயே நமோ நம!
ஓம் குமார பதயே நமோ நம!

மந்திரானுபூதி பெற்ற மேற்கண்ட ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து பயன் பெறுவோமாக!

Advertisements

9 thoughts on “பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாஸ சுவாமிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s