பிரதமர் நரேந்திர மோதியின் முற்பிறவி

இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி முற்பிறவியில் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் இரு கண்கள்” என்று சொன்னவர் சையத் அகமத் கான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும். மிகவும் வளர்ச்சியடைந்த முன்னேறிய நாடாக விரைவில் இந்தியாவை ஆக்க வேண்டும் என்று கனவுகண்டார். இஸ்லாமிய சமுதாயம் உயர்வடைய  அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது. இந்துக்களுக்கு இணையாக இஸ்லாமியர்களுக்கும் கல்வி, சமூதாயம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சையத்கான் ஆங்கிலேய அரசை வலியுறுத்தினார். 1894ல் சர் சையத் அகமத்கான், நவாப் முஹ்ஸினுல் முல்க் ஆகியோர் இணைந்து முஸ்லிம் பொலிடிகல் அஸோஸியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினர்.  ஒன்றுபட்ட இந்தியா கானின் கனவாக இருந்தது. ஆனால், மிகப் பெரும் சீர்திருத்தவாதியாக விளங்கிய அவரது கனவு நிறைவேறவில்லை. பிற்காலத்தே இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாக அது பிளவுண்டது.

Syed_Ahmed_Khan

அந்த லட்சியத்தோடு இருந்த கான், அதை நிறைவேற்ற மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறாரோ?

ஆம்… அன்றைய சையத் அகமத் கான் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோதி.

modi 2
5 Narenda Modi Reincarnation Syed Ahmad Khan

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள முற்பிறவி – மறுபிறவியைப் பற்றி ஆய்வு செய்யும் டாக்டர் வால்டர் தனது வலைத்தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் வால்டர், ஒரு மெடிகல் டாக்டரும் கூட.

டாக்டர் வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.

அப்படி பல சம்பவங்களை ஆராய்ந்திருக்கும் டாக்டர் பல அதிசய மறுபிறவிச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து “Origin of the Soul: And the Purpose of Reincarnation” என்ற நூலையும் Born Again என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அதில் அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன.

சையத் அகமத்கான் பற்றி அறிய இங்கே செல்க : சுட்டுக

இன்றைய மோதிதான் அன்றைய சையத் அகமத்கான் என்பதை அறிய இங்கே சுட்டுக. : சுட்டுக

இன்றைய பிரதமர் ஒரு தீவிர ஹிந்து. ஆனால் அவர் முற்பிறவியில் ஒரு முஸ்லிமாக இருந்திருக்கிறார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகத் தான் உள்ளது.

இரண்டு பேரின் புகைப்படங்களிலும் ஒற்றுமை தெரிகிறது. சையத்கானின் சில படங்களைப் பார்க்கும் போது அவரது அப்போதைய உடல்மொழி, கம்பீரம், நிமிர்ந்த அந்தப் பார்வை, கண்களின் ஒளி எல்லாமே இன்றைய பிரதமரை நினைவூட்டத்தான் செய்கிறது.

khanssss

mothiii

சரி, நண்பர்களே உங்கள் கருத்தென்ன?

***

Advertisements

2 thoughts on “பிரதமர் நரேந்திர மோதியின் முற்பிறவி

    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, நண்பரே! படைப்பின் ரகசியம் இறைவனைத் தவிர வேறு யாரே அறிவார். நம்புகிறோமோ இல்லையோ ஆனால் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.