அறுபடை முருகன் ஆலயம்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அவ்வாறு குன்றுகள் தோறும் எழுந்தருளி திருவிளையாடல் புரிந்து வருபவன் முருகப் பெருமான். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி என்பவை முருகனின் ஆறுபடை வீடுகளாகப் புகழப் பெறுகின்றன. இவற்றில் திருப்பரங்குன்றம் : மூலாதாரம், திருச்செந்தூர் : சுவாதிட்டானம், பழனி : மணிபூரகம், சுவாமிமலை : அநாகதம், திருத்தணி : விசுத்தி, ஆக்ஞை : பழமுதிர்ச்சோலை என உடலின் சக்கரங்களைக் குறிப்பதாக ஐதீகமுண்டு. இதை நாடி ஜோதிடம் மூலம் அறிந்த, டாக்டர் அழகப்பா அழகப்பனின் முயற்சியால் உருவானதுதான் சென்னை, பெசண்ட் நகரில் அமைந்திருக்கும் அறுபடை முருகன் ஆலயம்.

arupadai temple1

டாக்டர் அழகப்பா அழகப்பன், அமெரிக்காவின் முதல் இந்து ஆலயம் என்று புகழப்படும் நியூயார்க் மஹா கணபதி ஆலயத்தை உருவாக்கியவர். அவர் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும் காஞ்சி மகாப் பெரியவரைச் சந்திப்பது வழக்கம். அதன்படி ஒருமுறை பெரியவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது “ முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஓரிடத்தில் இருக்கிறது. ஆறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றிருக்கிறா. உடனே பெரியவர் சிரித்துக் கொண்டே, “ஆமாம். நன்னாத்தானிருக்கும். நீ கட்டு. நான் உனக்கு நிலம் வாங்கித் தருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். பின் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடம் சொல்லி, அப்போது அறநிலையத் துறை அமைச்சராக இருந்த திரு. ஆர்.எம். வீரப்பன் மூலம் பெசண்ட் நகர் அருகே கடற்கரையையொட்டி ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம் கோயிலுக்காக அளிக்கப்பட்டது. அப்படி அளிக்கப்பட்ட இடத்தில்தான் முழுக்க முழுக்கக் கல்லால் ஆன அறுபடை வீடு கோயில் தற்போது காட்சி தருகிறது. இந்த அனைத்து சன்னதிகளையும் கட்டி முடிக்க இருபத்தைந்து வருடங்கள் ஆகியிருக்கின்றன. ஏப்ரல் 9, 2008-ல் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

மிக அமைதியான சூழலில், பெசண்ட் நகர் கடற்கரையை ஒட்டி இவ்வாலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தில் நுழைந்ததும் மிகப் பெரிய கல்லால ஆன வேல் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கிறது. அதனை அடுத்திருப்பது சுவாமிநாத சுவாமி ஆலயம். அதன் பின்னால் திருத்தணி முருகன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். நடுவே நியூயார்க்கில் இருக்கும் வல்லப கணபதி தனிச் சன்னதியில் உள்ளார். தொடர்ந்து பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை சந்நிதிகள் அந்தந்த இடத்தில் இருப்பது போன்றே காட்சி தருகின்றன. நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர் தனிச்சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். முருகனின் காவடிப் பித்தனான இடும்பனுக்கும் ஒரு சிறு சன்னதி உள்ளது. சிறபபு நிகழ்சிகள் நடத்துவதற்காக தனியாக ஒரு அரங்கமும், அலங்காரக் கூடம் ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழநி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களில் உள்ளது போலவே இங்கும் முருகப் பெருமானின் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. அங்குள்ளது போலவே அதே திசையில் இங்கும் காணப்படுவது மற்றொரு சிறப்பாகும்.

arupadai temple 2

அறுபடை வீடுகளுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கே வந்து அறுபடை முருகனையும் தரிசித்துச் செல்கின்றனர். அருகிலேயே முருகபக்தரான பாம்பன் சுவாமிகளின் சமாதி ஆலயம் இருக்கிறது. சற்று தொலைவில் அஷ்டலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. முருகனுக்கு விசேஷமான கந்த சஷ்டி, தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை இங்கும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆறுபடை வீடுகளுக்கும் சென்ற பலன், சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.