பாரத யோகி

இன்று பாரதத்தின் விடுதலைப் பெருநாள். மகாயோகி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் கூட. அவரை நினைவு கூர்வோம்.

Tricolor_Flag_of_India

எழுத்தாளர். பத்திரிக்கையாளர். கட்டுரை ஆசிரியர். இதழாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகங்கள் கொண்டவர் அரவிந்தர். புரட்சிகர சிந்தனையாளராகத் துவங்கிய அவரது வாழ்க்கை இறுதியில் ஒரு மகாயோகியாக பரிணமித்து முற்றுப்பெற்றது. அதற்கு அவரது கடிதங்களே சான்றாக இருக்கின்றன.

Aurobindor2

அலிப்பூர் சிறையிலிருந்தபோது அவர் தனது மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதம்:

“ஜனவரி மாதம் நான்காம் தேதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்பொழுது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். எனது மனதின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை. நீ இங்கே வந்தால் நான் சொல்ல நினைப்பதைச் சொல்லுகிறேன். இப்போதைக்கு நான் சொல்லக் கூடியது என்னவென்றால், எனக்கு இனிமேல் சொந்தச் சுதந்திரம் இல்லை என்பதாகும். ஆண்டவன் போகச் சொல்லுகிற இடத்திற்கு நான் பொம்மை போலப் போவேன். அவர் செய்யச் சொல்வதை பொம்மை போலச் செய்வேன்.”

இந்தக் கடிதத்தின் மூலம் ஸ்ரீ அரவிந்தர் முற்றிலும் இறைவனைச் சரணடைந்த் விட்ட தன்மையை உணர முடிகிறதல்லவா?

அடுத்து மற்றொரு கடிதம். இது அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன் யோக சாதனைமுறைகளின் விளைவுகளைக் குறித்து தன் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எழுதியது:

“இப்பொழுது ஆன்மிகத்தை பௌதிகப் படிம உருவில் கொண்டுவரத் தேவையான சக்தியை நான் வளர்த்துக் கொண்டு விட்டேன். என்னால் இப்பொழுது மனிதர்களுக்குள் என்னைச் செலுத்தி, அவர்களை மாற்ற முடிகிறது. அவர்களது உள்ளங்களுக்குள் பரவியுள்ள இருளைப் போக்கி, ஒளியைக் கொணர்ந்து, ஒரு புதிய இதயமும் மனமும் கொடுக்க முடிகிறது. என்னிடமிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இருபவர்களிடமும் கூட இதனைச் செலுத்தி என்னால் வெற்றி பெற முடிந்திருக்கிறது. எனக்கு மனிதர்களின் குணங்கள், செயல்பாடுகள், அவர்களது எண்ணங்களை அறியும் ஆற்றல் கைவந்திருக்கிறது. ஆனால் அவை இன்னமும் முழுமை பெறவில்லை. அவற்றை முழுமையாக எல்லாச் சமயங்களிலும் உபயோகிக்க முடிவதில்லை. வெறும் எண்ணத்தின் மூலமே வேலையை வழிகாட்டி நடத்தும் திறன் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அது மற்றதைப் போல இன்னும் வலுவுடனில்லை. வேறு உலகங்களுடனான என்னுடைய தொடர்பு இன்னமும் கை கூடாத நிலையிலேயே உள்ளது. ஆனால் நான் சில பெரிய சக்திகளுடன் தொடர்பில் உள்ளேன் என்பது மட்டும் நிச்சயம்.”      

aravindar old 1

இக்கடிதத்தின் மூலம் ஸ்ரீ அரவிந்தரின் யோக சாதனைகளையும், அவரது யோக வாழ்வின் முன்னேற்றத்தினையும் நாம் தெரிந்து கொள்ள இயலுகிறது அல்லவா?.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

***

Advertisements

2 thoughts on “பாரத யோகி

  1. வணக்கம். இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்கள் தங்கள் பதிவில் “ஓம் நமோ பகவதே அரவிந்தாயா” என்று உள்ளது. அது ஓம் நமோ பகவதே அரவிந்தாய என்று இருக்க வேண்டும்.

    ओं नमो भगवते अरविन्दाय

    என்றும் மாறா அன்புடன் நந்திதா

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.