ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் முற்பிறவி

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரை எல்லோருக்கும் தெரியும். ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் பல பொது நல பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருபவர். பிரபலங்களைச் சந்தித்து வலியுறுத்தி வருபவர். அவர் முற்பிறவியில் யார் என்று தெரியுமா?

ஸ்ரீ குரு பாபாஜியின் (”மகா அவதார் பாபாஜி என்று சிலர் கூறுவார்கள்; ஆனால் அது சரியல்ல; ஸ்ரீ குரு என்றே அவர் நெருங்கிய சீடர்களால் அழைக்கப்படுகிறார்” என்கிறார் அவரது முக்கிய சீடர்களுள் ஒருவரான, இப்போதும் வாழ்ந்து வரும் ஒருவர். அதுபற்றி பின்னால் பார்ப்போம்) முதன்மைச் சீடரும் யுக்தேஸ்வர் மஹாராஜின் குருவும், ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் பரம குருவும், காசி வாசி ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளின் சமகாலத்தவரும் (ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள் 200 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர். அவரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் தரிசனம் செய்திருக்கிறார். சுவாமி விவேகானந்தரும் பின்னால் தரிசித்திருக்கிறார். ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளின் மற்றொரு அவதாரமே ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். இது பற்றியும் பின்னால் பார்ப்போம்) காசி பாபா என்ற மற்றொரு பெயரும் கொண்டவருமான ஸ்ரீ லஹரி மஹா சாயர்தான் இப்போது ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கராக மறுபிறவி எடுத்திருக்கிறாராம்!

sris

லஹரி பாபாவைப் பற்றிய விவரங்களை ”இங்கே” பாருங்கள்.

semikew

இதை நான் சொல்லவில்லை. டாக்டர் வால்டர்  சொல்லியிருக்கின்றார்.வால்டர் ஒரு மெடிகல் டாக்டரும் கூட.

டாக்டர் வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற் கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.

அப்படி பல சம்பவங்களை ஆராய்ந்திருக்கும் டாக்டர் பல அதிசய மறுபிறவிச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து “Origin of the Soul: And the Purpose of Reincarnation” என்ற நூலையும் Born Again என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அதில் அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன.

லஹரி மஹா சாயர் தான் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் என்பதற்கான ஆதாரங்களை கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.

”ஸ்ரீ ஸ்ரீ – லஹரி பாபா”

மேல் விவரங்களுக்கு : http://www.iisis.net/

***

Advertisements

2 thoughts on “ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் முற்பிறவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s