குறும்புக் கவி

அவன் ஒரு சிறுவன். குறும்புக்காரனும் கூட.

சிறுவனாக இருந்தாலும் யாருக்கும் எதற்கும் அஞ்சாதவனாகவும், தைரியசாலியாகவும் அவன் இருந்தான். அதனால் அவனைக் கண்டால் சக குழந்தைகள் எல்லோருக்குமே சற்று பயம்தான். ஒருநாள் அவனுடைய பெரியம்மா ஒருவர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக ஒரு சீப்பு வாழைப்பழத்தையும் வாங்கி வந்திருந்தார். பெரியம்மாவைக் கண்டதும் எல்லாக் குழந்தைகளும் ஆவலுடன் சூழ்ந்து கொண்டன. பெரியம்மாவும் அவர்களை ஆசையாக நலம் விசாரித்தவாறே தன் கையிலுள்ள வாழைப்பழங்களை ஆளுக்கு ஒன்றாகப் பிய்த்துக் கொடுத்தார். மற்ற பிள்ளைகளை விட மூத்த பிள்ளை மீது அந்த அம்மாவுக்குப் பிரியம் அதிகம். அவனுக்குக் கூடுதலாக சில பழங்களைத் தர எண்ணினார். ஆனால் மற்றப் பிள்ளைகளின் முன்னால் கொடுத்தால் அவர்களும் பங்கு கேட்பார்களே என்று யோசித்தார். எஞ்சிய பழங்களை எல்லாம் உள்ளறையில் வைத்துவிட்டு, மூத்த பிள்ளை மட்டும் புரிந்து கொள்ளுமாறு, ‘யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சாப்பிடு’ என்று சைகை செய்தார்.

பெரியம்மா செய்த சைகையை அந்த மூத்த பிள்ளையால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் குறும்புக்காரச் சிறுவன் புரிந்து கொண்டுவிட்டான். யாரும் பார்க்காத நேரத்தில் அந்த அறைக்குள் புகுந்து அந்தப் பழங்கள் அனைத்தையும் தின்றுவிட்டு, பழத் தோல்களைக் கீழே போட்டுவிட்டுச் சத்தமில்லாமல் வெளியேறி விட்டான்.

சற்று நேரம் சென்றது. பெரியம்மா மூத்த பிள்ளையைக் கூப்பிட்டு, பழங்களைத் தின்றானா என்று விசாரித்தார். அவனோ தான் பழங்களைத் தின்னவேயில்லை என்று கூறவே, ‘சீக்கிரம் போ. வேறு யாராவது தின்றுவிடப் போகிறார்கள்’ என்று கூறி அந்த அறைக்கு அனுப்பினார். ஆவலுடன் அறைக்குள் நுழைந்த சிறுவன் திடுக்கிட்டான். அங்கே வெறும் தோல்கள்தான் கிடந்தன. மூத்த பிள்ளை பெரியம்மாவிடம் புகார் செய்தான். பையன்கள் அனைவரையும் கூப்பிட்டு விசாரித்தார் பெரியம்மா. அனைவருமே நாங்கள் யாரும் பழத்தை எடுத்துத் தின்னவே இல்லையென்று சாதித்தனர். கடைசியில் சந்தேகம், பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவன் மீது திரும்பியது.

எல்லாரும் சேர்ந்து அவனது தந்தையிடம் புகார் கூறினர்.

தந்தை மிகவும் கண்டிப்பானவர், கோபக்காரர். அவனுக்கு அன்று நல்ல உதை விழும் என்று எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் வேகமாக வந்தான். தந்தையை வணங்கினான். ஒரு காகிதத்தைக் கொடுத்தான்.

தந்தை, அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தார். படித்தார். வியந்தார். உடனே பையனைக் கட்டிக் கொண்டு பாராட்டினார்.

சிறுவன் தலையை நிமிர்த்த்தியபடி, கம்பீரமாக வெளியே செல்ல, மற்றச் சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உதை விழும் என்று எதிர்பார்த்தால் இங்கு பாராட்டு அல்லவா கிடைக்கிறது!

எல்லோரும் சேர்ந்து அவன், தன் தந்தையிடம் கையளித்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தார்கள்.

அதில் நடந்த சம்பவம் முழுவதையும் ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருந்தான் அவன். அதன் சிறப்பையும், மொழிநடையையும் கண்ட சக சிறுவர்கள் வியந்தனர். நடந்த சம்பவத்தை மறந்து அவனைப் பாராட்டினர்.

தன் தவறை ஒப்புக் கொள்ளும் நேர்மையும், அதையும் கூட அழகாக எடுத்தியம்பும் கவித்திறனும் கொண்ட அந்தச் சிறுவன் பிற்காலத்தில் தன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் தன் குருவின் பெயரையும் சேர்த்து உச்சரிக்கும் படியாக “புரட்சிக் கவிஞர்” ஆக ஆனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?!

bharathidasan

இன்று பாரதிதாசனின் 123வது பிறந்த நாள்.

***
தகவல் – அரவிந்த் (aravindsham at gmail dot com)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.