இராமன் கடவுளா?

 

இராமன் மானுடனா அல்லது கடவுளா? இது சிலருக்கு எழும் ஐயம். அனைத்தும் அறிந்த ஒரு அவதாரபுருஷன் என்றால் அவன் ஏன் சீதையைத் தொலைத்ததற்கு மனம் கலங்க வேண்டும்? மனம் மயங்கி வசனங்கள் பேச வேண்டும்? மாயையால் தாக்குண்டானோ? அங்ஙனமாயின் அவன் எவ்வாறு அவதார புருஷனாக, கடவுளாக  இருக்க முடியும்? சாதாரண மானுடனாகத் தானே இருக்க முடியும்?

– இது கம்பராமயணத்தைப் படிக்கும் போது சிலருக்குத்  தோன்றும் ஐயம்.

சரி உண்மையிலேயே இராமன் கடவுளா அல்லது மானுடனா? கம்பர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போமா?

கம்பர் காலத்தில் சைவ வைஷ்ணவச் சண்டைகள் அதிகம். மகாவிஷ்ணு பிறந்து பிறந்து இறந்து கொண்டே யிருப்பதால், அவர் கடவுளல்லர் என்பது சைவர்கள் கருத்தாக இருந்தது. கிணற்றிலே விழுந்த குழந்தையை எடுப்பதற்காகத் தானும் அக்கிணற்றிலே குதித்து மூழ்கும் தாயைப் போல, கடவுளும் மனிதர்களைக் கரையேற்றும் பொருட்டுக் கீழே இறங்குகிறார். ஆகவே மக்கள் நலம் காக்க பல்வேறு அவதாரங்கள் எடுக்கும் மகாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பது வைஷ்ணவர்கள் கருத்து.

இப்படி ஒருவருக்கொருவர் இராமன் கடவுள்தான், இல்லை, இல்லை என்று ”குடுமிப் பிடி” சண்டையடித்துக் கொண்டிருக்க, இராமன் கடவுளா, மனிதனா என்பதற்கு ஒரு அற்புதமான ஒரு தீர்ப்பைச் சொல்கிறார் கம்பர், தனது கம்பராமாயணத்தில்.

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,

மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னேர்

ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி

வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே


இராமன் அவதரித்தால், அது விஷ்ணுவுக்குப் பெருமையாகாது; வேறு வேறு தேவர்களுக்கும் பெருமை தராது. இராமன் மனிதனாகப் பிறந்ததால் தெய்வப் பிறப்பு முதலியவற்றையெல்லாம் இம் மனிதப்பிறப்பு வென்று விட்டது என்கிறார் கம்பர். இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்பது கருத்து. அதாவது மனிதனாகப் பிறந்த இராமன் தெய்வங்களுக்கெல்லாம் மேலானவன் என்பது அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து. எல்லா தெய்வங்களுக்கும், எல்லா தேவர்களுக்கும், எல்லா அவதாரங்களுக்கும் மேலானவன் ராமன் என்கிறார் கம்பர். உண்மைதான் இல்லையா?

ஸ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராமா! ஸ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராமா!!

 – அரவிந்த்

*****

 

2 thoughts on “இராமன் கடவுளா?

  1. ”இராமன் மனிதனாகப் பிறந்ததால் தெய்வப் பிறப்பு முதலியவற்றையெல்லாம் இம் மனிதப்பிறப்பு வென்று விட்டது என்கிறார் கம்பர்.”
    இந்த உண்மையை அற்புதமாக பதிவு செய்துள்ளீர்கள் .மனிதன் தனது செயல்கள் மூலம் தெய்வ நிலை அடையலாம் என்பதை சொல்லவே ராம அவதாரம் என்பது உணர்ந்தாலே போதும் ,

    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இதையே தான் பின்னால் வந்த கண்ணதாசன் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்றார். முன்னால் பிறந்த மூத்த கவி “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார். புரிய வேண்டியவர்களுக்கு எல்லாம் புரிந்தால் சரி. நல்லன சிறக்கட்டும். ஓம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s