சத்குரு ஆராதனை விழா

இன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை குருபூஜை விழா. அவரது தாள் பணிந்து உயர்வோம்.

 

மகானின் வாழ்விலிருந்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம்…

ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார். ‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் சுவாமிகள் கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார். அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது.
’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.

மற்றுமொன்று.

துறவி ஒருவர் வட நாட்டிலிருந்து வந்திருந்தார். பிச்சை வாங்கி உண்ணுவதே அவர் வழக்கம். அவர் வெளியில் துறவு வேடம் பூண்டிருந்தாலும், உள்ளுக்குள் எப்படியாவது ரசவாதம் போன்ற ரகசியங்களை அறிந்து கொண்டு, அதிக பணம், தங்கம் சேர்க்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். இலட்சியமாக இருந்தது. அண்ணாமலையில் நிறைய மூலிகைகள் இருக்கும், அதன் மூலம் தங்கம் செய்யலாம். பணக்காரர் ஆகலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.

அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த அவர் ஒரு நாள் மகான் சேஷாத்ரி சுவாமிகளைக் கண்டார். மகான் தனது வழக்கமான “ஸ்வஸ்திக்“ ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரின் மகத்துவம் புரியாமல், ‘இவரிடம் போய் யாசிக்க என்ன இருக்கிறது’ என அற்பமாக நினைத்து, தனது திருவோட்டை வேண்டா வெறுப்பாக அவரிடம் நீட்டினார்.

மகானும் அவரது உள் மன ஓட்டத்தை அறிந்தார். தனது கால்களால் எட்டி ஓர் உதை உதைத்தார் திருவோட்டை. திருவோடு கீழே விழுந்தது. ஆனால் அதில் ஒரு தங்க நாணயமும் இருந்தது.

துறவி அதைக் கண்டார். ஆச்சர்யம் கொண்டார். அதே சமயம், சுவாமிகளின் ஆற்றலைக் கண்டு பயமும், அதிர்ச்சியும் அடைந்தார். தனது தவறான நோக்கத்திற்காக மன்னிப்பு வேண்டி, சுவாமிகளைக் கீழே வீழ்ந்து வணங்கியவர், பின்னர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. திருவண்ணாமலையை விட்டே போய் விட்டார்.

 மகான் பற்றி மேலும் விரிவாக அறிய :சத்குரு சேஷாத்ரி

சுவாமிகளின் ஆராதனை விழா இன்றும் நாளையும் அண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஊஞ்சலூர் அதிஷ்டானம், மதுரை குழந்தையான்ந்த சுவாமிகள் அதிஷ்டானம், மாடம்பாக்கம் பதினென் சித்தர் ஆலயம் போன்ற இடங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்

*****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s