பகவான் ரமணரின் ஜயந்தி விழா

இன்று பகவான் ரமண மஹர்ஷியின்  ஜயந்தி விழா. இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.

 

பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். ‘நான் யார்’ என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவம் செய்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால் ‘மௌன குரு’ என்றும், ‘பிராம்மண சுவாமி’ என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் ‘ரமணாச்ரமம்’ ஆகிற்று.

ரமணரின் சமாதித் தலம்

மனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.

நாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் அதனால் கடும் வேதனையைச் சந்தித்தார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அது, அவரைப் பெரிதும் வருத்தியது. படுத்த படுக்கையாகவும் சில நாட்கள் இருக்க வேண்டி வந்தது. 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது. இதன் மூலம் அருணாசலரே, பூவுலக மக்களின் துயர் துடைக்க ரமணராய் அவதரித்தார் என்பது உண்மையானது.

அவரது மறைவிற்கு தாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்து தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளிய பகவானின் ஜெயந்தி விழா  இன்று கொண்டாடப்படுகிறது. பகவானைப் பணிவோம். பரமனருள் பெறுவோம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

ரமணர் வாழ்வில் நடந்த ஒருஅற்புதம்

*****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s