எது வேதாந்தம்?

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்

சுவாமிகளைக் காண்பதற்காகவும், வேதாந்தம் பற்றி உரையாடுவதற்காகவும் பண்டிதர் கணேஷ் தேவுஸ்கார் என்பவரும் மற்றும் இரண்டு நண்பர்களும் வந்திருந்தனர். சுவாமிகளோ அவர்களிடம் வேதாந்த தத்துவ விளக்கத்தைப் பேசுவதை விட்டுவிட்டு, அவர்கள் பகுதி மக்கள் பஞ்சத்தினாலும், பசியினாலும் படும் வேதனைகளையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் பற்றி மனம் வருந்தி பேசிக் கொண்டிருந்தார். வெகு நேரம் பேச்சு நீடித்தது. பின் அவர்கள் புறப்படத் தயாராகினர்.

அவர்களில் ஒருவர் சுவாமிகளிடம், ” நான் வேதாந்தம் பற்றி தங்களிடம் நன்கு விளக்கம் பெறலாம் என வந்திருந்தேன், ஆனால் அது முடியாமல் போய் விட்டது” என்று வருத்தத்துடன் கூறினார்.

அதைக் கேட்ட சுவாமிகளுக்கு அளவு கடந்த சினம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரிடம், ” ஒரு ஏழை மனிதனின் பசியைப் போக்க முயலாத மதம் என்ன மதம்? அவனுக்கு சேவை செய்ய முன்வருவதே உண்மையான மதம். பிறவெல்லாம் போலி மதம்.” என்று குறிப்பிட்டவர், மேலும், ” பலரது நன்மையைக் கருத்தில் கொண்டு, அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்ய ஒருவன் முன் வரவேண்டும் என்பதே வேதாந்தத்தின் சாரம்!” என்றும் கூறி அறிவுறுத்தினார்.

****

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s