பிச்சை எடுக்கவும் தயார்!!

பகவான் ராமகிருஷ்ணர்
பகவான் ராமகிருஷ்ணர்
சேவையின்  நாற்று
சேவையின் நாற்று

சுவாமி விவேகானந்தர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சருடன் தங்கியிருந்த காலம்.

ஒருநாள் ராமகிருஷ்ணரைப் பார்ப்பதற்காக ஒரு பக்தர் விஜயம் செய்திருந்தார். அவர் மிகுந்த செல்வந்தர். பண வசதி அதிகம் படைத்தவர். அவரிடம் ராமகிருஷ்ணர், “உங்களைப் போன்ற வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உதவ வேண்டும், இதோ பாருங்கள், இவன் பெயர் நரேந்திரன். திடீரென இவன் தந்தை காலமாகி விட்டதால், மிகவும் கஷ்டப்படுகிறது இவன் குடும்பம். உங்களைப் போன்றவர்கள் தான் இவனுக்கு உதவி செய்ய வேண்டும்!” என்று கூறி வேண்டுகோள் விடுத்தார். அந்தச் செல்வந்தரும் அதனை ஆமோதித்து விட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் சீற்றத்துடன் எழுந்த நரேந்திரர், குருதேவரைக் கோபித்துக் கொண்டார். “நீங்கள் என்ன வருவோர், போவோரிடம் எல்லாம் எனக்காக உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறீர்கள், அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பர்?” என்றார் கோபத்துடன்.

அதற்கு குருதேவரோ தழுதழுத்த குரலில், ” குழந்தாய், உனக்காக நான் எங்கு வேண்டுமானாலும் சென்று, எவரிடமும் கையேந்தக் கூடத் தயாராக இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா!” என்று கேட்டார்.

குரு தேவரின் பணிவான அந்தக் குரலைக் கேட்ட நரேந்திரர், கண் கலங்கியவராய், அவர் தம் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்.

அந்த அளவுக்கு தம் சீடரான சுவாமி விவேகானந்தர் மீது அன்பு வைத்திருந்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

****

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s