கடவுள் உள்ளமே, கருணை இல்லமே!!

swami-vivekananda
ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அது கடுமையான கோடைக்காலம்.. எங்கும் வறட்சி நிலவியது. தாகமும், பசியும் அவரை வாட்டியது. ஆனால் அவரிடமோ கையில் பணம் இல்லை. அவர் துறவு நிலை ஏற்ற பின்பு பணம், பொருள் எதுவும் கையில் வைத்திருப்பதில்லை. அதனால் மிகுந்த பசி வேதனையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

விவேகானந்தர் அருகே ஒரு பயணி உட்கார்ந்திருந்தார். அவர் சுவாமிகளை வழி முழுவதும் பலவாறாகக் கிண்டல் செய்து வந்தார். “சின்ன வயது, திடமான உடல். இதை வைத்துக் கொண்டு உழைத்துப் பிழைக்காமல், பிச்சை எடுக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை!” என்று பலவாறாக திட்டிக் கொண்டு வந்தார்.

சுவாமிகளோ பதில் ஏதும் கூறாமல், பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ரயில் ஒரு நிலையத்தில் போய் நின்றது. கொளுத்தும் வெயிலால் வாடிய சுவாமி விவேகானந்தர் நிழலில் அமர ஏதேனும் இடம் கிடைக்குமா என்று தேடினார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அதற்கு அனுமதிக்காததால், கொளுத்தும் வெயிலிலேயே அவர் உட்கார நேர்ந்தது. அதைக் கண்டு அவருடன் பயணம் செய்த அந்த நபர், மீண்டும் கிண்டல் செய்தார். விவேகானந்தர் அப்போதும் ஏதும் பேசவில்லை மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

அப்போது அங்குமிங்கும் நோக்கிக் கொண்டு யாரையோ தேடியவாறே ஒருவன் அங்கே வந்தான். விவேகானந்தரைக் கண்டதும் வணங்கினான். அவன் கையில் வைத்திருந்த உணவு மூட்டையையும், தண்ணீர் கூஜாவையும் அவரிடம் கொடுத்து உண்ணுமாறு வேண்டினான்.

திகைத்தார் சுவாமி விவேகானந்தர், “நீ யாரப்பா, எதற்கு இதையெல்லாம் நீ என்னிடம் கொடுக்கிறாய்?’ என்று அன்புடன் அவனை வினவினார்.

அவனோ, அவரை வணங்கியவாறே, “ஐயா, நான் இந்த ஊரில் கடை வைத்திருக்கிறேன், நான் பகல் உணவு உண்டு விட்டு, சற்று தூங்குவது வழக்கம். அவ்வாறு இன்றும் தூங்கும் போது ஸ்ரீ ராமன் என் கனவில் வந்தார். அவர் என்னிடம், உங்கள் உருவத்தைக் காட்டி, ‘என் பக்தன் பட்டினியாக இருக்கிறான். அவனுக்கு உடனே உணவு கொண்டு போய்க் கொடு!’ என்று கட்டளையிட்டார். நான் முதலில் அதை வெறும் சாதாரணக் கனவு என்று நினைத்து ஆர்வம் காட்டாமல் தான் இருந்தேன். ஆனால் கனவில் தொடர்ந்து உங்கள் உருவம் வந்தது. நீங்கள் இருக்கும் இடமும் தெரிந்தது. உங்களுக்கு உணவளிப்பதற்கான கட்டளையும் ஸ்ரீ ராமபிரானிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தது. ஆகவே அதை உண்மை என்று உணர்ந்த நான், அந்தக் கட்டளைப்படியே இங்கு வந்தேன். தயவு செய்து இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.

விவேகானந்தரும், அன்புடன் அவன் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரயிலில் உடன் வந்த அந்த நபர், சுவாமிகளின் அருகே வந்து வணங்கி, ” சுவாமிஜி! என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் பெருமை அறியாமல் தவறாகப் பேசி விட்டேன். சந்நியாச தர்மத்தின் உயர்வையும், பெருமையையும் இன்று உணர்ந்து கொண்டேன்.” என்று கூறித் தொழுதார்.

சுவாமிகளும் அந்த நபரை மன்னித்தார்.

கடவுள் உள்ளம், கருணை இல்லம் என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டது.

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s