இரயில் பயணத்தில்…

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்

ஒரு முறை விவேகானந்தர் இரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். உடன் சில ஆங்கிலேயர்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர். விவேகானந்தரின் தோற்றம், உருவம், அவரது உடை என அனைத்துமே அவர்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. யாரோ ஒரு பரதேசி போல இருக்கிறது என நினைத்த அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசி விவேகானந்தரைக் கிண்டல் செய்தவாறே வந்தனர். விவேகானந்தருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என்பது அவர்கள் எண்ணம்.

விவேகானந்தர் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார். ஆனால் பதில் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

அடுத்து வண்டி ஒரு இரயில் நிலையத்தில் நின்றது. நிலைய அதிகாரியை அழைத்த விவேகானந்தர் குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும் என ஆங்கிலத்தில் வினவினார்.

விவேகானந்தர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதைக் கண்ட ஆங்கிலேயர்கள் திகைத்தனர். உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் போலிருக்கிறதே, நாங்கள் பேசியதற்கு நீங்கள் ஏன் பதிலாக மறுமொழி ஒன்றும் கூறவில்லை என்று கேட்டனர்.

அதற்கு விவேகானந்தர் புன்சிரிப்புடன், ” நான் முட்டாள்களைப் பார்ப்பது ஒன்றும் இது முதல் முறையல்லவே” என்று பதிலளித்தார்.

அதைக் கேட்ட ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த சினம் ஏற்பட்டுவிட்டது. தங்களை முட்டாள்கள் என்று சொன்னதற்காக விவேகானந்தரைத் தாக்குவதற்குத் தயாராகினர்.

அதைக் கண்ட விவேகானந்தருக்கும் அளவற்ற சினம் ஏற்பட்டது. ” தவறையெல்லாம் நீங்கள் செய்து விட்டு. என்னை தாக்க வேறு வருகின்றீர்களா, வாருங்கள், ஒரு கை பார்க்கலாம்!” என்று கூறியவாறே, எழுந்து நின்று கொண்டு தன் சட்டைக் கைகளை மேல் நோக்கிச் சுருட்டி, தனது உருண்டு திரண்ட புஜ அமைப்பைக் காட்டியவாறே சண்டைக்குத் தயாரானார்.

அவ்வளவு தான். விவேகானந்தரின் பேச்சையும், அவரது கம்பீரமான உடலமைப்பையும் கண்ட ஆங்கிலேயர்கள், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பயந்து போய் பேசாமல் அமர்ந்து விட்டனர்.

ஒருவன் அமைதியாக இருக்க வேண்டியது தான், அதே சமயம் தேவையில்லாமல் எவராவது நம் வம்பிற்கு வந்தால் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாகவே இருப்பது கோழைத்தனம். ஒருவன் தேவையில்லாமல் நம் ஒரு கன்னத்தில் அடிக்க முயன்றால், நாம் துணிச்சலுடன் அவனது இரு கன்னத்தையும் பதம் பார்க்க விழையவேண்டும் என்ற வீரக் கொள்கையைக் கொண்ட வீரத்துறவி விவேகானந்தர்.

****

Advertisements

2 thoughts on “இரயில் பயணத்தில்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s