காசி பற்றி திரு. ஜக்கி வாசுதேவ்

காசி என்பது ஒரு ஊரல்ல. அது ஒரு வாய்ப்பு. முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்த ஊர் இது. 33 கோடி பேர்னு ஏன் சொன்னாங்கன்னா ஜனத்தொகை 33 கோடி இருக்கும் போது ஒவ்வொருத்தருக்கும் தனியொஒரு தேவதை வழிபாட்டுக்காக அப்படிச் சொன்னான். அது ஒரு தொழில்நுட்பம். அது மொத மொதல்ல ஆரம்பிச்சது இங்கே தான். அதுனால எல்லா கடவுளும் இங்கேர்ந்து வந்தாங்க அப்படின்னு ஒரு இது இருக்கு. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒரு பயிற்சி இருக்கு. ஆனா அது நாளாக நாளாக மூட நம்பிக்கையா ஆயிருச்சி. ஒவ்வொரு தலைமுறையிலையும் தெரிஞ்சவங்க, ஞானியா இருக்குறவங்க வளர்ந்திருந்தா இந்த மாதிரி ஆகியிருக்காது. ஆனா அப்படி ஞானியா யார் யாரெல்லாம் இருந்தாங்களோ அவங்களே வெளியிலேர்ந்து படையெடுத்து வந்தவங்க, ஆக்கிரமிப்பு செய்ய வந்தவங்க வெட்டிப் போட்டாங்க. நாலந்தாவுல புக் எல்லாம் எரிச்சிப் போட்டாங்க. 2000 பேருக்கு மேல ஆச்சார்யரை எல்லாம் வெட்டிப் போட்டாங்க. அதான் ஞானம் வளராம வெறும் நம்பிக்கையா மட்டும் போயிருச்சி.


பறந்து செல்லும் பறவை

சிவனை ஆதியோகின்னு யோக கலாசாரத்துல சொல்வாங்க. அந்த சிவன் மலை மேல தவம் செஞ்சிக்கிட்டிருந்தான். அவன் அப்போ துறவி. அதுனால ஒண்ணும் பிரச்சனை வரலை. ஆனா அப்புறம் அந்த இளவரசி பார்வதி தேவியை கல்யாணம் கட்டிக்கிட்டான். அதுனால அதுக்கப்புறம் அவனால அங்க இருக்க முடியலை. குளிர்காலத்துல காசிக்கு வர்றது, வெயில் காலத்துல இமயமலைக்குப் போறதுன்னு ஒரு அரேஞ்மெண்ட் பண்ணினாங்க.

IMG01964

காசி யந்த்ரத்துக்கு யந்திரம். சூப்பர் பவர். இது ஆதியோகி சிவனே உருவாக்கிய நகரம். ஆனா படையெடுத்து வந்தவங்க இந்த புனிதமானதை எல்லாம் உடைச்சு நாசப்படுத்திட்டாங்க. அதுனால கொஞ்சம் வீக் ஆக இருக்குது. ஆனா நாம அதை மீட்டெடுக்கலாம். முக்திக்கான ஒரு எந்திரம் இங்கே இருக்குது.

இங்கே சக்திக்காக 54 கோவில் சிவனுக்காக 54 கோவில் இருக்குது. மனித உடலில் 72,000 நாடிகள் இருப்பதைப் போல காசியிலும் அப்போ 72,000 கோயில்கள் இருந்தன. மொத்தமாக முன்பு 26000 கோயில் இருந்தது. படையெடுத்து வந்தவர்கள் அதைத்தான் முதலில் உடைத்துப் போட்டார்கள், நகை, பணம் எடுப்பதற்காக. தற்போது 3000 கோயில்கள் தான் இருக்குது.

IMG01956

இந்த நகரம் வெறுமனே வாழும் இடமாக இல்லாமல், ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து செல்ல வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்துள்ளது. மிகச் சிறிய இந்த பிண்டம், பரந்த அந்த அண்டத்துடன் தொடர்பில் இருக்க வகுக்கப்பட்ட தொழில்நுட்பமாக உள்ளது. இந்த முழு செயல்முறையுமே அகண்ட அண்டத்தின் உடலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரம்மாண்டமான மனித உடல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. இதனால் தான், “நீங்கள் காசிக்கு போனால் போதும், எல்லாம் முடிந்துவிட்டது,” என்னும் நம்பிக்கை உருவானது. நீங்கள் காசியை விட்டு வெளியே வரவே விருப்பப்பட மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அண்டத்தின் உயிராற்றலுடன் தொடர்பில் இருக்கும்போது, வேறெங்கு செல்ல விருப்பப்படுவீர்கள்?

****

மேலும் காசி பற்றி…

https://ramanans.wordpress.com/2012/01/30/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/

https://ramanans.wordpress.com/2012/01/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

https://ramanans.wordpress.com/2011/11/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/

*****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.