வினையான விளையாட்டு

”விளையாட்டு வினையாகும்” என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது என்ன விளையாட்டு வினையாகும் ? எப்படி விளையாட்டு என்பது வினையாக மாறும்?

அதைப் பார்க்க கம்ப ராமாயணத்துக்குப் போவோம்.

இராமனும் சீதையும் வனத்தில் வசித்த காலம். பர்ண சாலைக்கு வெளியே இராமன் அமர்ந்திருக்கிறான். சீதை உள்ளே  வேலையாக இருக்கிறாள். அப்போது அங்கே வருகிறாள் சூர்ப்பணகை. இராமனைக் காண்கிறாள். காதல் கொள்கிறாள். இவன் யாரென விசாரிப்போம் என ஆவலுடனும், காதலுடனும், அளவில்லாத காமத்துடனும் இராமனை நோக்கி வருகிறாள்.

                               ” கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி

                                 மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்

                                தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்)

                               மானின் விழிபெற்று  மயில்வந்த தென வந்தாள்.”

கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்தாள் சூர்ப்பணகை.

இராமன்

வேறு கவனமாயிருந்த இராமன் காதில், சிலம்பு, மேகலை, முத்தாரம் முதலிய ஆபரணங்கள் திடீரென்று ஒலித்து ஒரு பெண்ணின் வருகையை அறிவிக்கின்றன. அவன் உடனே அந்த ஓசை வரும் இடத்தைப் பார்க்கிறான்.

                        ” விண் அருள வந்ததொரு மெல்லமுதம் என்ன”

வந்து தோன்றிய அவளது மோகன வடிவத்தைப் பார்த்து “இவர் யாரோ? இந்த அழகுக்கு எல்லையும் உண்டோ?” என்று பிரமிக்கிறான்.

சூர்ப்பணகை அருகில் வந்து இராமன் முகத்தை நோக்குகிறாள். உடனே நாணம் கொண்டு சற்று ஒதுங்கி நிற்கிறாள். அவளுடைய வேல் போன்ற கண்கள் அவன் அழகை விழுங்குகின்றன.

இப்போது இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? திடீரென்று மாயாவி போல் வந்த இவள் யார், எங்கிருந்து வந்தாள், எப்படி வந்தாள், இவளது நோக்கம் என்ன என சற்று சிந்தித்து எச்சரிகையாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் இராமன் அப்படிச் செய்யவில்லை. அவன் அவளுக்கு நல்வரவு கூறி உபசரித்து, ” உங்கள் ஊர் எது? உங்கள் பெயர் என்ன? உறவினர்கள் யாவர்?” என்று  வினவுகிறான்.

அதற்கு சூர்ப்பணகை, நான் பிரம்மதேவனுடைய பேரனுடைய மகள். சிவபெருமானின் தோழனாகிய குபேரனின் தங்கை என்கிறாள். தன் பெயரைக் கேட்டவுடன் இராமன் மயங்க வேண்டுமென எண்ணி ”காமவல்லி” என்ற ஒரு பொய்ப் பெயரைத் தனக்குத் தானே சூட்டிக் கொள்ளுகிறாள்.

இராமனின் கேள்விகளுக்கு பதில் சொன்னதுடன், தான் கணவனை இழந்தவள் என்பதை மறைத்து ”மணமாகாத கன்னிப் பெண்” என்றும் பொய் புகல்கிறாள். அதைக் கேட்டபிறகுதான் இராமனுக்குச் சந்தேகம் வருகிறது. ஆனாலும் “இன்னும் சிறிது விசாரிப்போம்” என்று நினைத்து, மேலும் அவளுடன் பலவாறாகப் பேசுகிறான்.  ” நீ ஒரு துணையுமில்லாமல் இங்கே தனியாக வந்தது ஏன்” என்று கேட்கிறான்.

உடனே சூர்ப்பணகை மிகவும் பவ்யமாக ”உங்களால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது” என்கிறாள். “காரியத்தைச் சொல்; இயலுமானால் செய்வேன்” என்று இராமன் சொன்னதும் அவள்,

                        ” தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்ப(து)

                         ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா

                         ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய்வேன் யாருமில்லேன்

                         காமன் என்றொருவன் செய்யும் வன்மையைக் காத்தி யென்றாள்.”

என்கிறாள்.

வெளிப்படையாக இராமன் மேல் உள்ள வேட்கையை சற்றே நாகரிகம் கலந்த வார்த்தைகள் கொண்டு பசப்பு மொழியில் தெரிவிக்கிறாள் சூர்ப்பனகை. 

அதைக் கேட்ட இராமன் துணுக்குற்று, “இவள் நாணம் இல்லாதவள்; நல்லவளும் அல்லள்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கிறான்.

உடனே மேலும் பலவாறாக அவனிடம் பேசுகிறாள் சூர்ப்பனகை.

அவளைப் பற்றிய உண்மையைக் கண்டறிய ஆவல் கொண்ட இராமன், ”நீ பிராமண குலம் ஆயிற்றே. உன்னை நான் மணந்து கொள்வது வருணாசிரம தர்மத்தை மீறுவதாகுமே” என்கிறான். (கவனிக்க: இராமன் ஒரு ஷத்திரிய அரசன். இராவணன் பிராமணன்)

 உடனே சூர்ப்பணகை. அதனால் என்ன, என் தாய் ராட்சஸ ராஜகுலத்தைச் சேர்ந்தவள் என்கிறாள். (கவனிக்க: பிராமணத் தந்தைக்கும் ராட்சஸத் தாய்க்கும் பிறந்தவர்கள் தான் இராவணன், சூர்ப்பனகை, விபீஷணன் போன்றோர். அந்தக் காலத்திலேயே இவ்வாறான கலப்பு மணங்கள் மிகுந்திருக்கின்றன)

அதைக் கேட்ட இராமன் புன்னகையுடன், ” நங்கையே! ராட்சஸ ஜாதியோடு மனுஷ ஜாதி கலப்பு மணம் செய்து கொள்வது வைதிக தர்மமாகுமா?” என்கிறான்.

அதற்கு சூர்ப்பணகை, கன்னிகாதானத்தைக் காட்டிலும் காந்தர்வ விவாகமென்ற காதல் மணமே சிறந்ததென்றும், அத்தகைய மணத்திற்கு வேதத்திலும் ஒப்புதல் உண்டென்றும் சொல்கிறாள்.

உடனே இராமன், “உன் சகோதரர்களின் ஒருவனோ, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான இராவணன்; மற்றொருவனோ அந்த மூன்று உலகங்களிலும் உயர்ந்த செல்வம் கொண்ட குபேரன். அவர்கள் கன்னிகாதானம் செய்து கொடுக்காமல், நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வது? அவர்கள் ஏதாவது என்னைச் செய்து விட மாட்டார்களா? அவர்களை நினைத்தாலே எனக்குப் பயமாய் இருக்கிறது” என்கிறான். (இந்தப் பேச்சு இராமனுக்குத் தேவையா? இதுதான் விளையாட்டு…)

சூர்ப்பபணகை ஏதோ ஒரு தீய நோக்கத்துடன் தான் வந்திருக்கிறாள் என்பதை இராமன் உணர்ந்து கொண்டான். ஆனாலும் வேண்டுமென்றே விளையாட்டாய் அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த விளையாட்டு வினை ஆனது.

இராமன் மணமானவன் என்பதும், பேரழகி சீதை அவன் மனைவி என்பதும் தெரிய வந்ததும் சூர்ப்பணகை உள்ளத்தில் பொறாமை தீ எரிகிறது.

கோபக்கார இலக்குவனால் மூக்கு(ம்) அறுபடுகிறது. சினம் பொங்க அவள் இலங்கைக்குப் புறப்பட்டாள். இராவணனிடம் முறையிட்டாள். இராமன் – சீதை பிரிவுக்கும், இராவண வதத்துக்கும் வழி வகுத்தாள்.

இப்படித்தான் இராமனின் ”விளையாட்டு” அவனுக்கே “வினை” ஆனது. 

– அரவிந்த்

******

Advertisements

6 thoughts on “வினையான விளையாட்டு

 1. இது ராமனின் விளையாட்டு அல்ல. ராமனிடமிருந்த காமனின் விளையாட்டு. திராவிடனை அரக்கனாய் சித்தரிக்கும் காவியங்களை, வணங்கத் தகுந்ததாய் ஆக்குவதே நமக்கு வழக்கம்!! வாழ்க தமிழன்!!

  1. என்னது திராவிடனா? சங்கத் தமிழர் வாழ்வையும் நாகரிகத்தையும் சிதைத்த ”வந்தேறி” களப்பிரர்கள் வழி வந்தவர்களே திராவிடர்கள். தமிழனை அழித்த சிங்களர்களே திராவிடர்கள். பழி ஆரியத்தின் மீது. அருமை. நன்றி, வருகைக்கும், கருத்திற்கும்.

 2. // வணக்கம்

  ஒரு இணைய தளத்தில் உங்களுடைய கட்டுரையைப் பார்த்தேன். அதன் மூலம் தேடி உங்கள் வலைப்பூவை வந்தடைந்தேன். விளக்கங்கள் பெற்றேன். அந்தத் தளத்திலும் பதில் அளித்தேன். இருந்தாலும் அந்தத் தளத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கீழ்கண்ட வினாக்களுக்கு உங்கள் விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  ”சோதி தோன்றிய நாள் கார்த்திகை தீபம்.அந்த சோதி லிங்கத்திலிருந்து பிரம்ம விஷ்ணுக்களுக்கு லிங்கோற்பவர் திருக்காட்சி தந்த இரவே சிவ ராத்திரி. நாத்திகப் போக்கில் அமைந்த படம் கட்டுரை இரண்டுமே சிவபிரானைப் பற்றி அணுவளவும் அறியாத அஞ்ஞானிக்கு உரியவையாக உள்ளன. கோபம் (சீற்றம்) ஆசை ஆகியவையெல்லாம் பிறப்பு இறப்பு உள்ள சீவராசிகளின் குற்றங்கள். எல்லாம் கடந்த பரம்பொருளான எல்லாம் வல்ல பரம சிவம் நிர்குண மூர்த்தி. தானே பரமம் என்று வாதிட்ட பிரம்ம விஷ்ணுக்கள் ஆதியந்தம் இல்லாத அருட்பெருஞ்சோதியின் அடிமுடி காண்பதில் தோல்வியுற்று சோதிலிங்கத்தைத் தொழுதுத் துதித்து வணங்கியபோது அவர்களுக்கு ஈசன் அடி முடி மறைந்துள்ள லிங்கோற்பவராகத் திருக்காட்சி தந்த நாளே மகா சிவராத்திரி. இது லிங்கோற்பவருக்குச் சிறந்த திருவிழா. ஈசன் பெயரால் பொய்யும் புளுகும் எழுதுவது தவறு. தமிழ் நாட்டுத் தமிழ்ப் பத்திரிகையாக இருந்தும் தென்னாட்டுச் சிவ வடிவம் -லிங்கோற்பவரின் படம் வெளியிடாமல் அதைப் பற்றிய கட்டுரை இல்லாமல் உண்மையை மூடி மறைப்பது ஆன்மீகம் அல்ல. நாத்திகமே. திருக்கோயிலுக்குச் செல்லுங்கள் . படம் பிடியுங்கள் .அதை வெளியிடுங்கள்.”

  பதிவுசெய்தவர் மௌனசிவம் 03/08/2013 12:36

  ”சிவராத்திரி என்றால் சிவனிரவு என்றுதான் பொருள். சிவனுக்கு உகந்த இரவு என்று உகத்தல் எங்கிருந்து வந்தது.? திருவிழாப் பெயருக்கே பொருள் தெரியாத போது திருவிழாக் காரணம் மட்டும் எப்படித் தெரியும் ? அதனால்தான் ,கடவுள் என்றால் என்ன எப்படிபட்டது என்று தெரியாமல் கடவுளுக்கும் பிறப்பு இறப்புள்ள மனிதர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் படத்திலும் கட்டுரையிலும் நாத்திக வாடை வீசுகிறது. ஆன்மீகம் என்ற பெயரில் நாத்திகத்தைப் பரப்புவது சரியல்ல…. பிரம்ம விஷ்ணுக்களுக்குப் பரம சிவம் மான் மழு தாங்கி அபய வரத நான்கு கரங்களுடன் அடி முடி மறைத்து லிங்கோற்பவராகத் திருக் காட்சி தந்த நாளே சிவராத்திரி என்று தென்னாடு உடைய சிவ பரம்பொருளின் மகிமை தெரியாதவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொளவதற்கும் தகுதி இல்லாதவர்களே.”

  பதிவுசெய்தவர் ஓங்காரேசுவரன் 03/08/2013 13:07

  உங்கள் விளக்கம் என்ன ரமணன் ஐயா? சொல்லுங்கள்//

  விரிவாக விளக்கம் அளிப்பதாக முன்பு சொல்லியிருந்தீர்கள். மீண்டும் நினைவு படுத்துகிறேன்

  குருமகேஷ்

  1. ஓ. ஏற்கனவே பதில் அளித்ததாக ஞாபகம். இல்லையென்றால் அடுத்த வாரம் தனிப் பதிவில் இதுபற்றி விளக்கம் அளிக்கிறேன். நினைவூட்டியதற்கு நன்றி குரு.

 3. ஆஹா
  ஓஹோ
  பேஷ் பேஷ்

  இன்னும் எத்தனை காலத்துக்குடா ராமன், கிருஷ்ணன், ராமசாமின்னு இதையே சொல்லிக்கிட்டிருப்பீங்க. எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா பாடுங்களா. பன்னாடை பரதேசி நாயுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.