சுஜாதா – சில நினைவுகள் – 2

bharati_mani_1சுஜாதாவை என்னால் மறக்கவே முடியாது. டெல்லியில் அவர் என் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்துகொண்டு NSD நாடங்களுக்கும் பிரேம் சந்தின் நாடகங்களுக்கும் வருவார். அவரது நகைச்சுவையை ரசித்தது, தொடையில் தட்டி நான் சிரித்தது என்று அந்த இனிய நாட்கள் மறக்க இயலாதவை. டெல்லியில், பெங்களூரில் வாழ்ந்த சுஜாதாவை, அவர் சென்னை வாசியானதும் நான் இழந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். I completely lost him. இதுபற்றி நான் என் நூலில் எழுதியிருக்கிறேன். அவர் மறைவு என மனதுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

 நடிகர், எழுத்தாளர் பாரதி மணி

 மேலும் வாசிக்க : http://tamilonline.com/thendral/Auth.aspx?id=141&cid=4&aid=8026&m=m&template=n

 

****

jayaraj

சுஜாதாவின் பாணியே தனி. அதுவரை வாசகர்கள் படித்திராத நடை; புதுமையான கரு; வித்தியாசமான கதைப்போக்கு. நவீனமானதுன்னு சொன்னாக்கூட சுஜாதாவைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்னும்படி நிறையத் தகவல்களை அறிந்து வைத்திருந்தார். தனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் வாசகனுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணமுங்கற ஆர்வம் அவருக்கு இருந்தது. நான் கிறங்கிப் போய் அவருடைய கதைகளைப் படிப்பதுண்டு. சுஜாதா கதைக்குப் படம் போடணும்னு சொன்னதும் எனக்குத் தலைகால் புரியல்லை. கணேஷ், வசந்த் இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த அவரிடம் சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், “இதைவிட பர்ஃபெக்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியஸான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி.க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், “வஸந்தை இண்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா?” என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.

ஓவியர் ஜெயராஜ்

மேலும் வாசிக்க : http://tamilonline.com/thendral/Auth.aspx?id=130&cid=4&aid=7365&m=m&template=n

****

ve_sa”இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா – தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டு விட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது.

பலபேரைக் கவர்வது வேறு, பலரைக் கவர்வது எது என்று தெரிந்துகொண்டு அதை மட்டுமே செய்வது வேறு. சுஜாதா தனது திறமை மூலம் படைப்பின் மிக உயரிய உச்சத்திற்குச் சென்றிருக்க வேண்டியவர். ஆனால் சமரசங்களின் காரணமாக அவர் அதைச் செய்யாதது நமக்குப் பேரிழப்பு.

எழுத்தாளர், கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்

மேலும் வாசிக்க : http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=111&cid=4&aid=6198

****  

maniam-selvanகல்லூரியில் படிக்கும்போது சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்’ தொடருக்கு ஓவியம் வரைந்தேன். ஒரு ஜனரஞ்சக இதழில், பிரபல எழுத்தாளரின் தொடருக்கு நான் முதன்முதலில் வரைந்த படம் என்றால் அது ‘பதினாலு நாட்கள்’தான்.

 ‘ரத்தம் ஒரே நிறம்’ குமுதத்தில் ஆரம்பத்தில் கறுப்பு-சிவப்பு-வெளுப்பு என்று மூன்று இதழ் மட்டும் தொடராக வெளி வந்தது. பின் நின்று விட்டது. நான் அப்போதுதான் என் கேரியரில் காலூன்றிக் கொண்டிருந்த நேரம். தொடர் நின்று போனதும் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அப்புறம் மீண்டும் சுஜாதா ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று அதை எழுதியபோது என்னையே ஓவியம் வரையச் சொன்னார். அந்தத் தொடருக்காக நான் வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகமிகப் பிடித்தமானவை. அதுவும் யானையால் தலை இடறப்பட்டு, ரத்தம் சிந்தும் காட்சியை மிகச் சிரமப்பட்டு வரைந்தேன். யானைப்பாகன், பாதிரியார், நீதிபதி, அந்தக் காட்சியைக் காண விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பெண்மணி என ஒவ்வொன்றையும் கேரக்டர் அனாலிஸிஸ் செய்து வரைந்தேன். சுஜாதா அதை வெகுவாகப் பாராட்டினார்….

 சுஜாதா ஒரு அற்புதமான மனிதர். என்னை ‘பாண்டவாஸ்’ 3D அனிமேஷன் படத்திற்காகக் கட்டாயப்படுத்தி, அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொண்டார். அவருடைய ‘பூக்குட்டி’ தொடருக்கு வாட்டர்கலரில் வரைந்தது மறக்க முடியாதது.

 – ஓவியர் மணியம் செல்வன்

 மேலும் வாசிக்க : http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=103&cid=4&aid=5663

 ****

asokamithranசுஜாதா மிக நல்ல மனிதர். ஆனால் தாட்சண்யம் அவரிடம் அதிகம். நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு அவர் பல காரியங்கள் செய்திருக்கிறார் என்பதுதான் என்னுடைய அனுமானம். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது

 – எழுத்தாளர் அசோகமித்திரன்

 தொடர்ந்து வாசிக்க : http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=99&cid=4&aid=5414

 ****

npசுஜாதா எங்கள் உறவினர் எங்களது கல்லூரியில் ஊடகக் கல்வி ஆரம்பித்த போது அதில் ஆர்வம் காட்டினார். அதுபற்றி அடிக்கடி விசாரிப்பார். பல ஆலோசனைகளைக் கூறுவார். மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பேசுவார். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். நிறைய ஆலோசனைகளைக் கூறுவார். குறிப்பாக ‘பாரதி’ திரைப்படம் வெளியானபோது எங்கள் கல்லூரியில் வந்து அந்தத் திரைப்படம் பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். எங்கள் கல்லூரியில் தமிழல்லாத பிற மொழி பேசும் மாணவிகளும் படித்து வருகின்றனர். ஆனால் அவரது பேச்சில் மயங்கிய மாணவிகள் அனைவருமே ஆர்வத்துடன் எங்கள் கல்லூரியில் திரையிடப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அந்த அளவுக்கு உரையாற்றல் மிக்கவர் அவர்.

கல்வியாளர், கல்லூரி முதல்வர், டாக்டர் நிர்மலா பிரசாத்

 முழுமையாக வாசிக்க : http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=96&cid=4&aid=5228

 
***

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s