சுஜாதா – சில நினைவுகள் – 1

”இன்றைக்கு நான் யாராக இருக்கின்றேனோ அதில் பெரும்பாலானது சுஜாதாவால் உருவானது. ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, பதிப்பாளனாக இன்றைக்கு ஓரளவு நான் அறியப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு சுஜாதாதான் பெரும் காரணம். கிட்டத்தட்ட 1992ல் இருந்து, நான் யாரென்றே பலருக்கும் தெரியாத காலகட்டத்தில், என்னுடைய ஒரு கவிதையைப் படித்துவிட்டு, தொடர்ந்து என்னுடைய கவிதைகளை தேடித்தேடிப் படித்து, அதை ஒவ்வொரு பத்திரிகையிலும், ஊடகத்திலும் அறிமுகப்படுத்தி, அதைப்பற்றிப் பேசி, விவாதித்து, இப்படி ஒரு இளம் கவிஞன் இருக்கின்றான் என்று என்னை அடையாளப்படுத்தியது அவர்தான். ஒரு புகழ்வாய்ந்த எழுத்தாளர் அவ்வாறு செய்தது தமிழில் அதுவரை நடந்திராத செயல். அதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் எனக்கென்று ஓர் இடம் உருவானது. ‘இந்தக் கவிதையை நீங்கள் வாசித்துத்தான் ஆக வேண்டும்’ என்று சொல்லும் இடமாக அது இருந்தது. இது முதல் கட்டம்.

manushyaputhiran_photo_1பின்னர் நான் சென்னைக்கு வந்தபின் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்தபோது ஒரு மனிதராக, ஆத்ம நண்பராக, வழிகாட்டியாக, எனக்கு மிகப்பெரிய ஆதார சக்தியாக இருந்தார். நான் வேலை பார்த்து வந்த ஓர் இதழிலிருந்து வெளியே வந்தபோது, அவர் தன்னுடைய புத்தகங்களைக் கொடுத்து ‘இதை நீ பதிப்பிக்கலாமே’ என்று சொல்லி ஊக்குவித்தார். அப்படி ஆரம்பித்ததுதான் உயிர்மை பதிப்பகம். அதனால் ஒரு பெரிய வெற்றியை நான் உடனடியாகப் பெற முடிந்தது. தொடர்ந்து நான் எழுதுவதற்கும் அவர் பெரிய உத்வேகமாக இருந்திருக்கிறார்.

 இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வாசகனாக சுஜாதாவின் மீது எல்லையற்ற பிரமிப்பை நான் கொண்டிருக்கிறேன். தமிழை அவர் நவீனப்படுத்தியது போல யாரும் செய்ததில்லை. தமிழை சுஜாதாவிற்கு முந்தைய தமிழாகவும், சுஜாதாவிற்குப் பிந்தைய தமிழாகவும் நாம் பிரிக்க முடியும். உரைநடையில் ஒரு மகத்தான மாற்றத்தை அவர் கொண்டு வந்தார். தமிழை லகுவாகவும், பாய்ச்சலுடனும், வீரியத்துடனும் பயன்படுத்த முடியும் என்பதற்கு சுஜாதா உருவாக்கிய உரைநடை பெரிதும் காரணமாக இருந்தது. அவருக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என எல்லோரிடமும் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தியது. கலை, இலக்கியம், ஓவியம், இசை, தத்துவம் என்று பலவற்றை ரசிப்பவராக அவர் இருந்தார். கவிதையின் மீது எல்லையற்ற காதல் கொண்டவராக – அது நாட்டுப்புறக் கவிதையாகவோ, நவீன கவிதையாகவோ, சங்க இலக்கியமோ எதுவாக இருந்தாலும் – அதனை நேசிப்பவராக இருந்தார். எங்கெல்லாம் கவித்துவத்தின் வாசனை முகிழ்க்கிறதோ அங்கெல்லாம் சுஜாதாவின் கால் தடம் படாமல் இருந்ததில்லை. அவருடைய இழப்பு என்பது என் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.

 சுஜாதா இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை நாமும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ‘சுஜாதா விருதுகள்’ என்பதை நிறுவினோம். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சுஜாதாவை அறிமுகம் செய்வதும் இதனால் சாத்தியமாகிறது.

 கவிஞர், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்

 முழுமையாகப் படிக்க : http://tamilonline.com/thendral/Auth.aspx?id=142&cid=4&aid=8083&m=m&template=n

 

Advertisements

8 thoughts on “சுஜாதா – சில நினைவுகள் – 1

  1. நல்லது. படியுங்கள். சுஜாதாவின் நல்ல சிறுகதை/நாவலைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். கட்டுரைகள் மிகவும் சுவையானவை ஆக இருக்கும்.

 1. சுஜாதா அவர்களை உள்வாங்கிக் கொண்டு எழுதுபவர்கள் அநேகம். பலமுகங்கள் கொண்ட அந்த அறிஞருக்கு சாகித்திய அகாடமி விருதுக்கான தகுதி ஏன் இல்லாமல் போனது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

  1. சாகித்ய அகாதமி என்ன அதற்கு மேலான விருதுகள் பெறவும் அவருக்கு உண்டு. ஆனால் சிலர் செய்த லாபியால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அவர்கள் ”தங்களை”ச் சேர்ந்தவர்களுக்கே விருதளித்து மகிழ்கின்றனர், இன்றளவும். வாசகர்கள் மனதில் இடம் பெற்றவர்களை அல்ல.

   வாசகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர் சுஜாதா. அவர் விருதுக்கு அப்பாற்பட்டவர்.

   அசோகமித்திரன் சொல்வது போல அவர் நட்புகளுக்காக நிறைய அனுசரித்துச் சென்று வணிக எழுத்துக்களை நிறைய எழுதியதால், செல்வாக்கு பெற்றதால், இலக்கியவாதி அல்ல என்று ஒதுக்கப்பட்டார்.

   புதுமைப்பித்தனுக்குப் பிறகு எழுத்தில், உரைநடையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் சுஜாதா. அவருக்குப் பின்னான இடம் இன்றளவும் வெற்றிடமாக இருப்பதே அவர் திறமைக்குச் சான்று.

  1. ஆமாம். சந்தேகமே இல்லாமல். அந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தினார். பின் சுஜாதா தான். அவருக்குப் பிறகு……. அந்த இடம் வெற்றிடமாகத் தான் உள்ளது.

 2. சுஜாதாவைப் பற்றி இவ்வளவு பேரும் சொன்ன பிறகு வேறு என்ன சொல்ல? சுஜாதா என்றால் கிரேட் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  1. இந்த நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் சுஜாதாவும் ஒருவர் (ஆனால் நிறைய குப்பைகளும் எழுதியிருக்கிறார். அது அவருக்கே தெரியும்) 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.