ஸ்ரீ அன்னையின் வாழ்வில்…

 

இன்று ஸ்ரீ அன்னையின் 135வது பிறந்த நாள். இந்த நன்னாளில் அவர் பாதம் தொழுது புனிதம் பெறுவோம்.

ஓம்.

  mother darshan photo

ஸ்ரீ அன்னை

1878 ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 10-15க்கு ஸ்ரீ அன்னை பிறந்தார். பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா என்பது அவரது இயற் பெயர். பிற்காலத்தில் ஆன்மத் தேடலால் இந்தியா வந்தடைந்து, அரவிந்தரிடம் சரணடைந்து அனைவரும் போற்றும் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். நேர்மையுடனும், சத்தியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உண்மையைப் போற்றினார். சாதகர்கள் ஆன்ம உயர்வடைய உதவினார். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் மீதும், மரங்கள் போன்றவற்றின் மீது அன்னை கருணை மிக்கவராக விளங்கினார்.

அரவிந்தர் ஆசிரமத்து பங்களா ஒன்றில் வயதான பரந்த மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து விரவி, அருகிலுள்ள மற்ற மரம் செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அதை வெட்டி விட வேண்டுமென்றும் ஸ்ரீ அன்னையிடம் அதற்கான உத்தரவை மறுநாள் பெற வேண்டும் என்றும் ஆசிரமப் பாதுகாவலர் நினைத்தார்.

மறு நாள் ஸ்ரீ அன்னையிடம் சென்று இது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ அன்னை ‘இது பற்றித் தனக்கு முன்பே தெரியும்’ என்றும், ‘மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை, மரத்தை வெட்டிவிட வேண்டாமென்று நேற்று இரவு வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மரத்தை வெட்ட வேண்டாமென்றும்’ கூறி தடுத்து விட்டார்.

அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவராக ஸ்ரீ அன்னை திகழ்ந்தார்.

****

ஒருசமயம் ஆசிரமத்தில் திருடியதாக திருடன் ஒருவன் கையும் களவுமாகப் பிடிபட்டான். அந்தத் திருடனை ஸ்ரீ அன்னையின் முன் கொண்டு வந்தனர். அந்தத் திருடன் அன்னையைக் கண்டதும் கைகூப்பி வணங்கினான். ஸ்ரீ அன்னையும் அவனைப் பார்த்தத்தும், இதற்கு முன் அவனை பால்கனி தரிசனத்தின் போது பார்த்திருப்பதாகக் கூறினார்.

திருடனுக்கு தரிசனத்தில் என்ன அக்கறை என அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஸ்ரீ அன்னை அதற்கு, “அவன் தரிசனத்தின் போது, ஒரு வேளை, தன் தொழில் சிறப்பாய் நடத்தப் பிரார்த்திக் கொண்டிருக்கலாம். அது இந்த நேரம் வரை பலித்தும் உள்ளதே” என புன்சிரிப்புடன் கூறினார்.

இதன் மூலம் “ஸ்ரீ அன்னையின் தரிசனத்தின்போது வேண்டுதல்கள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நிறைவேறும்.” என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள இயலுகிறதல்லவா?

ஸ்ரீ அன்னை கருணைத் தாய்!!

வரம் தர வரும் ஸ்ரீ அன்னை

 

ஸ்ரீ அன்னை அருள் மொழிகள்

நீ எதைச் செய்தாலும் எப்போதும் இறைவனை நினைவில் கொள்

அச்சமுற்றுக் கலக்கமுடன் உன் வருங்காலத்தை எதிர் நோக்காதே.

நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

நீ பிறருடைய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாது இருப்பாயானால் அதுவே நீ உனக்குச் செய்து கொள்ளும் மிகப்பெரிய சேவையாகும்.

இறையுணர்வு நம்முடைய ஒரே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

****

அன்னை உள்ளமே

அது அன்பின் இல்லமே!

அடைக்கலம் தருபவர்

ஆசி வேண்டுவோம்

அன்னை போற்றி

அன்னை போற்றி

அன்னையே என்றும் போற்றி

 

மேலும் ஸ்ரீ அன்னை பற்றி அறிய…

 

ஸ்ரீ அன்னை அருள்

 

மகா சக்தி ஸ்ரீ அன்னை

 

ஸ்ரீ அன்னையும் மலர்களும்

 

வரம் தரும் அன்னை

 

 

ஸ்ரீ அன்னை திருவடிக்கே சரணம்

 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி

ஓம் ஸ்ரீ சைதன்ய மயி

ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

 

**********************

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s