ரமண ஜெயந்தி

பகவான் ரமணர்

இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு 2013 நல் வாழ்த்துக்கள். இன்று பகவான் ஸ்ரீ ரமணரின் 133வது பிறந்த தினம். இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.

பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். ‘நான் யார்’ என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவம் செய்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால் ‘மௌன குரு’ என்றும், ‘பிராம்மண சுவாமி’ என்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் ‘ரமணாச்ரமம்’ ஆகிற்று.

பக்தர்களுடன் பகவான்

அருணாசல அக்ஷரமணமாலை, அருணாசல பஞ்சரத்னம், அருணாசலத் துதி உட்பட பல்வேறு பாமாலைகளை இவர் அருணாசலர் மீது இயற்றியுள்ளார். வெளிநாட்டு அன்பர்கள் பலர் இவரை நாடி வந்து, இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை உணர்ந்து கொண்டனர். பலர் இவருக்கே அடியவராகி, இந்தியாவிலேயே இறுதி வரை காலம் கழித்தனர். அருணாசலத்தின் பெருமையும், இந்தியாவின் ஆன்ம வளமையும் உலகெங்கும் உள்ள அன்பர்கள் அறிந்து கொள்ள பகவான் ரமணர்  மிக முக்கிய காரணமாய் அமைந்தார். இவர்தம் இறுதிக் காலத்தில், உயிர் பிரியும் தருவாயில், இவர் தம் ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று புறப்பட்டு, அருணாசல மலையில் சென்று கலந்தது ஒரு அதிசயமான நிகழ்வு.

ரமணபகவானின் 130வது ஜயந்திவிழா மார்கழி மாத புனர்பூச நட்சத்திரமாகிய இன்று 01-01-2010 கொண்டாடப்படுகிறது. ரமணரின் பாதம் பணிவோம். பாவம் களைவோம்.

ரமண பகவானின் உபதேசங்கள்:

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

*************

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

Advertisements

4 thoughts on “ரமண ஜெயந்தி

 1. En kanavar en pakkam irukka naan enna seivathu . En mamiyar en kanavarukku unavil marundu kalandu kodutirukkiraargal , avanga pakkam irukka Kattu Katti vitirukkiraargal. En kanavar ennidam veruppagadan pesuvaar ennai purindu Kolamal adippar .nangal ottrumaiyaga irukka evalavo vendi paarthen nadakkala .Vasiyam vaikkalam endru mudivu pannirukken ennakku Vera vazhi theriyala.
  Ennoda mail : sairinbaradi@yahoo.fr inda adress ungal badilai anuppavum .nandri

  1. அம்மா…

   இந்த மர்ம, மாந்தீரீக, கட்டு அவிழ்க்கும் விஷயங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் எல்லாவித மருந்துகளும், கட்டுக்களும் செயல் இழந்து போகும் இடம் ஒன்று உள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப் பாவா பள்ளிவாசல் என்ற இடம்தான் அது. அங்கே சென்று ஓரு சில நாட்கள் அல்லது ஓரிரவாவது தங்குங்கள். தங்கள் பிரச்னை நிச்சயம் தீரும். அங்கு தர்காவில் சமாதி ஆகி இருக்கும் சையது பாவா பக்ருதீன் அலி சாஹிப் மகத்தான சக்தி வாய்ந்தவர். தீராத வினைகளைத் தீர்ப்பவர். சென்று நலம் பெற்று வாருங்கள்.

   பாபா அருள்வார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s