டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2

டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2

”’மாயன்’ என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் இதிகாச, புராணங்களில் குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான். அவன் தேவச் சிற்பி என்றும் அழைக்கப்பட்டான். அவனைப் பற்றிய குறிப்புகள் தொன்மையான இராமாயணத்தில் வருகின்றன. பின்னால் வந்த மகாபாரதத்திலும் வருகின்றன. ’பஞ்ச பாண்டவர்கள்’ தங்குவதற்காக அழ்கிய மாளிகையைக் கட்டியவன் மயன் தான். மயன் முதலாம் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவன். கப்பல் கட்டுவது குறித்து மரக்கலச் செந்நூல், அணுவைப் பற்றிச் சொல்லும் அணுவியல், வானசாஸ்திரம் பற்றிச் சொல்லும் சூரிய சித்தாந்தம், பிரணவவேதம் போன்ற பல நூல்களை இயற்றியவன். சிலப்பதிகாரத்தில் கூட அவனைப் பற்றிய குறிப்பு உள்ளது.

நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின

– என்று அது குறிப்பிடுகிறது. மேலும் கோவலன் கண்ணகி சயனிப்பதற்கான கட்டிலைப் பற்றிய குறிப்பில் இளங்கோ, “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்று குறிப்பிட்டுள்ளார். ’மயன்’ பற்றி பண்டை மக்கள் அறிந்திருந்தார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மயன் இன மக்கள் இன்று உலகின் பல இடங்களில் வசித்து வருகிறார்கள். குமரிக் கண்டம் கடல் கோளினால் அழிந்து விட்டாலும், ஆஸ்திரேலியாவில், ஹவாயில், தென் அமெரிக்காவில் மெக்ஸிகோவில், பெருவில் உலகின் இன்னும் பல நாடுகளில் அந்த இனத்து மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுடைய கலாசாரத்திற்கும் நம்முடைய கலாசாரத்திற்கும் தொடர்பு உள்ளது. அந்த நாட்டு இலக்கியங்களுக்கும் நமது தொன்மையான இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. நான் நியூ மெக்சிகோவிற்குப் போய் Mayonic Culture குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அங்கு பல கோடி ’மயன்’ இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்”

– மேற்கண்ட கருத்தினைச் சொன்னவர் பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள். இவர் குமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலையை உருவாக்கிய பெருமையுடையவர். சென்னை வள்ளுவர் கோட்டம், பூம்புகார் மணிமண்டபம், காரைக்குடி தமிழ்த்தாய் கோயில், டெல்லி மலை மந்திர் சுவாமிநாத சுவாமி கோயில் உட்பட பல்வேறு கலைப்படைப்புகளைத் தந்தவர். இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, லண்டன், ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, பிஜி, ஹவாய், ஸ்ரீ லங்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்களை, கலைப்படைப்புகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்.  40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்பகலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷன் உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி
பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

ஸ்தபதியாரை நான் தென்றல் நேர்காணலுக்காக 2009ம் ஆண்டில் சந்தித்தேன் (அந்த நேர்காணலை “இங்கே”வாசிக்கலாம்) நேர்காணல் முடிந்ததும் பல விஷயங்களைப் பற்றி பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் மாயன் காலண்டர் பற்றி அவரிடம் கேட்டேன். மாயன் நாகரிகம் ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதாக ஸ்தபதி சொன்னார். அதோடு ‘மயன்’ பற்றிய பல விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

”மயன் பெரும் விஞ்ஞானி. தற்போது ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தி என்றும், தென்னவன், ஆலமர் செல்வன் என்றும் அழைக்கப்படும் அவன், பண்டைய நாளில் மயன் என்று அழைக்கப்பட்டான். அவனே அறிவின் முதல்வன். பிராகிருத மொழியைச் செம்மைப்படுத்தி தமிழாக்கித் தந்தவன். மயனின் ஆதிகாலப் பெயர் மயாசுரன் என்பது. ஆனால் அவன் அசுரன் அல்ல. அரசன். அரசனை அசுரன் ஆக்கி விட்டார்கள். ரட்சிப்பவனை ராட்சசன் ஆக்கி விட்டார்கள். ராட்சசன் என்றால் அரக்கன் அல்ல. மயாசுரன் என்பவன் பாதாளத்தில் வாழ்பவனாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். ’பாதாள உலகம்’ என்பது நமது பூமிக்கு நேர் கீழே இருப்பது. நாம் வசிக்கும் இடத்திற்கு நேர் கீழே 180 டிகிரியில் பார்த்தால் வரும் இடம் கிட்டத்தட்ட தென் அமெரிக்கா, பெரு மற்றும் அதையொட்டி உள்ள கடல் பகுதிகள். அங்கெல்லாம் மாயன் இன மக்கள் வாழ்ந்தார்கள். இன்னமும் வாழ்கிறார்கள். இதெல்லாம் கால வேறுபாட்டால் நிகழ்ந்த குழப்பங்கள். அவன் எழுதிய ஆதி சமஸ்கிருத நூலின் பெயர் ‘சூரிய சித்தாந்தம்’ பாஸ்கராச்சார்யா எழுதியதெல்லாம் பிற்காலத்தது.” என்றார்.

மயன்
மயன்

மேலும் அவர், “’ஐந்திறம்’ என்ற நூலை மயன் எழுதியிருக்கிறான். சப்த வேதம், காந்த வேதம், நாட்டிய வேதம், ஸ்தாபத்ய வேதம், பிரணவ வேதம் என்று ஐந்து வேதங்களாக, ஐந்தமிழ்களாக நமது கலைமரபு இருக்கிறது. இயல், இசை, நடம், சிற்பம், கட்டிடம் ஆகிய ஐந்து தமிழ்களுக்கு இலக்கணம் கூறும் நூல் தான் ஐந்திறம். அது நமது தொன்மையான நூல். தொல்காப்பியத்திற்கு பாயிரம் வழங்கிய பெரும்பரனார் ‘ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐந்திறம் காலத்தால் தொல்காப்பியத்திற்கு முந்தியது. மயனால் உருவாக்கப்பட்டது. அந்நூலைத் தேடி ஆய்ந்து நான் பதிப்பித்தேன். அதில் உள்ள விஞ்ஞான சூத்திரங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி நூலாக வெளியிட்டிருக்கிறேன். சிற்ப சாஸ்திரத்திற்கு அடிப்படை நூல் அது.” என்றார்.

பண்டைய தமிழ் ஓலைச்சுவடியில் மயன் பெயர்
பண்டைய தமிழ் ஓலைச்சுவடியில் மயன் பெயர்

அவர் பேசப் பேச எனக்கு ஆச்சரியம். அதே சமயம் பல விஷயங்களை நம்ப முடியவும் இல்லை.

நீங்கள் மயன் நாகரிகப் பகுதிகளுக்குச் சென்று செய்த ஆராய்ச்சிகள் பற்றிச் சொல்லுங்கள் என்றேன்.

மாயன் நாகரிகத்தினரின் மாயன் கடவுள்
மாயன்  கடவுள்

மயன் பகுதிகளில் மட்டுமல்ல; உலகின் பல பகுதிகளுக்குச் சென்று நான் பலவித ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறேன். பல புத்தகங்களை எழுதியிருக்கிறேன். எனது வாழ்க்கையே அதற்குத் தான் செலவிட்டுள்ளேன். நம்கலை மரபுகள் அனைத்தும் தாளக் கணக்கை அடிப்படையாகக் கொண்டவையாகும். கணக்கின் அடிப்படையில் தான் இந்தப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான கருவி ’தாளம்’ தான். சிற்பமும் கட்டிடடமும் பஞ்ச பூதங்களை, ஒலியை, ஒளியை, காலத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இடங்காலக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. சரி, அது எந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் அது தான் Cube. முச்சதுரம் என்று தமிழில் அதற்குப் பெயர். அதைப் பற்றி ’சதுரவியல்’ கூறுகிறது. அணுக்கள் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, பின் வட்டப்பாதையில் செல்கின்றன. இதற்கு spin theory என்று பெயர்.

இந்த உலகில் அனைத்தும் அழிந்து போனாலும் எஞ்சியிருப்பது empty space. space என்றால் energy என்று பொருள். அதவாது absolute energy எஞ்சியிருக்கும். இந்த absolute energyயைத் தான் நாம் சுவாசிக்கிறோம். காற்றை அல்ல. பிரம்மத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவிலிருந்து மற்ற பஞ்ச பூதங்கள் தோன்றின. பின்னர் உயிரினங்கள். இதைப் பற்றி எல்லாம் சித்தர்கள் இலக்கியத்தில் கூறியிருக்கிறார்கள். ’ஆதியில் ஐந்துமாகி, அநாதியில் நான்குமாகி, ஜோதியில் மூன்றுமாகி, அறுபத்துள் இரண்டுமாகி, மீதியில் ஒன்றாகி’ என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது அனைத்துமே வேதங்களிலும் இருக்கிறது. உள்ளம் என்பது தான் space. உள்ளமே மூலமாகி, உணர்வுறும் கோளமாகி, உள்ளமே ஊக்கமாகி, உள்ளமே உணர்வுமாகி, உள்ளமே வழியும் காட்டி என்றெல்லாம் நம் பழைய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. siddha literature is a vedic literature. ’ இது போன்ற சித்தர் பாடல்களையெல்லாம் மக்கள் படிக்க வேண்டும். ஆனால் இன்று எதை எதையோ பொழுது போக்கிற்காகக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தொன்மையானது, நமது கலாசாரத்தைக் குறிப்பது. ஆனால் இதிலெல்லாம் யாருக்கும் அக்கறையில்லை” என்றார்.

சரி, மாயன் காலண்டர் படி 2012ல் உலகம் அழிந்து விடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா என்று கேட்டேன். (அப்போது இப்போது உள்ளது போல உலக அழிவு பற்றி பரபரப்புகள் ஏதுமில்லை. இருந்தாலும் எனக்கிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் அவரிடம் அது பற்றிக் கேட்டேன்)

ஸ்தபதி சிரித்தார்.

”மாயன் காலண்டர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்.

”எனக்கு எதுவும் தெரியாது. 2012, டிசம்பர் மாதத்தில், ஒரு குறிப்பிட்ட தேதியில் மாயன் காலண்டர் முடிவடைகிறது. அதனால் அன்று உலகம் அழிந்து விடும் என்று சிலர் கருத்து சொல்கிறார்கள். அதைத் தான் உங்களிடம் கேட்கிறேன்” என்றேன்.

”முதலில் மாயன்கள் இடத்துக்குச் சென்று நான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு ’மச்சு பிச்சு’ தெரியுமா?”

நான் ‘அச்சு பிச்சு’ போல் விழித்தேன்.

(தொடர்கிறேன்)

அரவிந்த்

மாயன் நாகரிகம் பற்றிய மேல் விவரங்களுக்கு : http://viewzone2.com/ancientturksx.html

http://www.hiddenhistoryhumanity.com/8B%20Shamballa%20Mayans%20Brazil%206th%20RR%20II.htm

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/11/85-2.html

http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan

http://www.vastuved.com/mayan-memorial.html

http://www.vastuved.com/aimpon.html

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

http://aumscience.com/

http://arganesh3.wordpress.com/2012/05/20/mamuni-mayan-influence-around-the-world/

*******

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.