டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன?

டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன?

உலகம் அழியப்போகிறதா?

– இதுபற்றித் தான் உலகெங்கும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அழியப் போகிறது என ஒரு சாராரும், அழியவே அழியாது, இது ஒரு புரளி என மற்றொரு சாராரும் குறிப்பிடுகின்றனர்.

சரி, உலகம் அழியப் போகிறது என ஏன் சிலர் கூறுகின்றனர்? அதற்கு ஏதாவது காரணம் உள்ளதா? உள்ளது.

எல்லோரும் கூறும் மிக முக்கிய காரணம், மாயன் காலண்டர்.

மாயன் காலண்டர்

மாயன் என அழைக்கப்படும் நாகரிக வம்சத்தினர் ஒரு காலத்தில் மிகச் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக் கணிதம், வடிவ இயல், மாந்ரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரின் படியே, அதில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின்…… அதன் பின் ஒன்றுமில்லை. உலகம் அழிந்து விடும். இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த அவர்கள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா? அதனால் டிசம்பர் 21, 2012ல் உலகம் அழிந்து விடும். – இது மாயன் காலண்டரை நம்பும் சிலரது நம்பிக்கையாக இருக்கிறது.

mayan2

அதுசரி, இந்த மாயன்கள், யார்? அவர்களுக்கு மட்டும் எப்படி உலக அழிவை எல்லாம் கணித்துக் கூறும் அளவுக்கு ஆற்றலும், திறனும் வந்தது?

கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2,000, 3000 ஆண்டுகளுக்கு முன், ”மாயா” என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்தனர். அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம், சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்நதனர். இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதாவது அவர்களது நாள்காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. ஆரம்ப நாளான 0, 0, 0, 0, 0ல் ஆரம்பித்து, இறுதி நாளான 13, 0, 0, 0, 0 நாளை அடைவதற்கு அந்தக் காலண்டருக்கு 5125 வருடங்கள் ஆகின்றது. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி, கி.மு. 3114ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21ம் தேதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.

mayan3

ஏன், மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்?

”அன்றுதான் உலகத்தின் இறுதி நாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு தேதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது” – இதுதான் மாயன் காலண்டரை நம்பும் பலர் கூறுவது.

சரி, இது உண்மைதானா? உண்மையில் உலகம் அழிந்து விடுமா?

நாசா, “அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி” என்கிறது. ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், “உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப் பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம்.  இதைப் பற்றி மாயன்கள் தங்கள் ’சிலம்பலம்’ நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர். அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம்” என நம்புகின்றனர்.

Chilam_Balam

சிலம்பலம் – மாயன்களின் அரிய நூல்

ஆனால், இதுதான், இப்படித்தான் என யாராலும் ஐயம் திரிபற உறுதியாகக் கூற முடியவில்லை. பலரும் தற்போது மாயன் காலண்டர், உலக அழிவு பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் மாயன்களைப் பற்றி, அவர்களது நாகரிகம் பற்றி, அவர்கள் சாஸ்திரங்களைப் பற்றி ஆராய்ந்த ஒருவர் இதுபற்றிய கருத்துக்களைக் கூறினால்தான் அது சரியாக இருக்கும் இல்லையா? அப்படி ஆராய்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?

ஆம். மாயன் நாகரிகம் பற்றி அவர்கள் வாழ்விடமான தென் அமெரிக்கா உட்பட பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்தது மட்டுமல்லாமல் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் ஒருவர் எழுதியிருக்கிறார். பல உண்மைகளை உரத்துச் சொல்லியிருக்கிறார். அவர் ஒரு தமிழர்.

அவர் யார், அவர் சொன்னது என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடர்கிறேன்)

அரவிந்த்

****

Advertisements

4 thoughts on “டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன?

 1. வணக்கம்

  எது நடக்கப் போகிறோதோ அது நன்றாக நடக்கட்டும் உலகம் அழியப்போவது என்றால் நாம என்னதான் செய்ய முடியும் எல்லாம் இறைவன்தன் துணை,
  நல்ல அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. சரியான நேரத்தில் சரியான பதிவு.
  மாயன் காலன்டர் தொடர்பான வீடியோ பதிவுகள் எனது அலைபேசியிலும் உள்ளது.
  அடுத்த பதிவினை உடன் எதிர்பார்க்கின்றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s