சில நேரங்களில் சில சந்திப்புகள் – 1 (பகுதி- 2)

முதல் பகுதி இங்கே…

பேப்பரை வெளியே எடுத்து வைத்தேன்.

நான் பணிபுரியும் பத்திரிகையின் இதழ்களைக் காட்டினேன். அலட்சியமாக வாங்கி ஆவலுடன் புரட்டிப் பார்த்தார். புரட்டப் புரட்ட அவர் கண்கள் விரிந்தன. குறிப்பாக விளம்பரங்களைக் காணக் காண ஒரு வியப்பு தெரிந்தது.

“அடடா… இத்தனை ஹோட்டல்ஸ் அங்க இருக்கா… நான் போறப்போ அங்க ஒண்ணுமே கிடைக்கல. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம் எப்படியோ சமாளிச்சேன். இப்போ பாத்தா முனியாண்டிவிலாஸ் கூட இருக்குற மாதிரி தெரியுதே” என்றார் ஆச்சரியத்துடன்.

பின் பத்திரிகை பற்றி, அதன் சர்குலேஷன், பப்ளிஷர், எடிட்டர் குறித்தெல்லாம் விசாரித்தார்.

”சரி, உங்களுக்கு என்ன கேக்கணுமோ கேளுங்க” என்றார்.

நான் ரெகார்டரை எடுத்து ஆன் செய்து அவர் அருகே வைத்தேன்.

”இது என்ன?” என்றார்.

சொன்னேன்.

“அட புது மாடலா இருக்கே… எவ்வளவு” என்றார்.

சொன்னேன். உடனே வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த தன் மகனை அழைத்துக் காண்பித்தார். “இந்த மாதிரி சின்னதா இருந்தா ரொம்ப சௌர்யமா இருக்குமோல்யோ” என்றார்.

அவர் ஆமோதித்து விட்டு, Product Name, Price, Capacity, Operations பற்றி எல்லாம் விசாரித்து விட்டுப் போனார்.

” இண்டர்வியூன்னு ரிப்போர்டர்ஸ் வந்த நான் எப்போதும் எழுதியே கொடுத்துடறது. அதுதான் நல்லது. பாருங்கோ, ஒரு தடவை இப்படித்தான் இண்டர்வியூ பண்றேன்னுட்டு போன்லயே எதையோ பேசி எதையோ கேட்டுட்டு பின்னாடி பத்திரிகைல அது வேற மாதிரி வந்து… ஒரே பிரச்னை. அதனால நீங்க ரெகார்ட் பண்ணிண்டாலும் டெக்ஸ்டை எங்கிட்ட ஒரு தடவி காட்டிட்டே பப்ளிஷ் பண்ணுங்கோ” என்றார்.

“நிச்சயமா. அந்த மாதிரி காண்ட்ரவர்சி எல்லாம் வரக் கூடாதுன்னுட்டுதான் நாங்க ரெகார்ட் பண்றதே” என்றேன்.

அதன் பின் கேள்விகள் துவங்கின. தன் நெருங்கிய நண்பர் ஒருவரின் நினைவாக, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தன் புனைபெயரை வைத்துக் கொண்டதாகச் சொன்னார். தொடர்ந்த கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் சரமாரியான பதில்கள். கிண்டல், கேலி, நகைச்சுவை என்று பல ரசங்கள் அதில் தொனித்தன. சில பதில்களில் சோகமும் இருந்தது.

தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவர் எழுத்து பற்றிக் கேட்டதற்கு, “ செயற்கையாக நீங்கள் எழுதினால் அது எப்படியும் ஏதாவது ஒரு விதத்தில் தெரிந்து போய் விடும். மேலும் நான் எழுதும் போது, மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன். எனக்கு சில விஷயங்கள் தெரியலாம். உங்களுக்கு வேறு விதமான விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆக, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து நான் எழுதுவதில்லை” என்று அவர் கூறிய பதிலை மிகவும் ரசித்தேன்.

உங்களது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும் போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்ற வினாவிற்கு, “எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. வருத்தங்கள் வைத்துக் கொள்ளவும் கூடாது. நடந்தது நடந்து விட்டது. என்னால் எது சாத்தியமோ அதை என்னால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறேன். சில படைப்புகளைப் பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் சொன்னது மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது.

எல்லாம் முடியும்போது மதியம் 12 மணிக்கு மேல் ஆகி விட்டது.

அவரை வெளியே அழைத்துச் செல்லும் நண்பரும் அப்போதுதான் வந்து கொண்டிருப்பதாகப் போன் செய்தார்.

நண்பர் வருகைக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்.

பத்திரிக்கையில் போடுவதற்காக அவரையும், குடும்பத்தாரையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். பின் அடுத்த வாரம் எல்லாவற்றையும் டைப் செய்து எடுத்து வருவதாகக் கூறி விடை பெற்றேன்.

(தொடரும்)

இதை எழுதியவர் : அரவிந்த்

தொடர்புக்கு:

       மின்னஞ்சல் முகவரி : aravindsham at gmail dot com

       முகநூல் முகவரி : https://www.facebook.com/arvindswam

*****

Advertisements

3 thoughts on “சில நேரங்களில் சில சந்திப்புகள் – 1 (பகுதி- 2)

 1. இது என்ன பேட்டிக் கட்டுரையா இல்லை அனுபவமா ஒரே குழப்பமா இருக்கு
  மொக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இது மரண மொக்கையா இருக்கு
  இந்த அரவிந்த் என்பவர் முதலில் நன்கு எழுத பயிற்சி பெற வேண்டும் பின்னர் எழுத ஆரம்பிக்க வேண்டும்
  ஒரே வார்த்தை வரட்சியாய் இருக்கு
  சுவாரஸ்யமாய் எழுதுவதாய் நினைத்து அறுத்துத் தள்ளியிருக்கிறார்
  என்னால் படிக்கவே முடியவில்லை
  இதைப் படித்து விட்டு என் தோழி சிரிக்கிறாள் சின்ன பசங்க கிருக்கின மாதிரி இருக்குன்னு
  இவர் முதலில் நல்ல தமிழில் குறிப்பாக தனித் தமிழில் எழுதப் பயிற்சி பெற வேண்டும்
  இது என்னவோ பெரிய கட்டுரை மாதிரியும் இவரை என்னவோ பெரிய எழுத்தாளர் – பத்திரிகையாளர் மாதிரியும் பில்டப் கொடுப்பது நன்றாக இல்லை
  எப்படி எழுதுவது என்பதற்கு இவர் சிலிகான் செல்ப், ஜெயமோகன், நிழல்கள், பத்ரி, மௌலி, தமிழ் பேப்பர், கேபிள் சங்கர், லக்கிலுக் போன்ற தளங்களில் வெளியாகும் கட்டுரைகளை வாசிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
  வருங்காலத்தில் திருத்திக் கொள்ளுங்கள்
  நன்கு எழுத பழகிக் கொள்ளுங்கள்
  பின் இணையத்தில் எழுத வாருங்கள்
  அரை வேக்காட்டுத்தனமாய் எழுதி எங்களை வெறுப்பேற்றாதீர்கள்
  இதை வெளியிடுகிறோர்களா என்ற் பார்ப்பம்.

  1. திரு ஹரி பிரசன்னா

   வணக்கம். தங்களுடைய முகவரியை எனக்கு மெசேஜ் செய்யவும். நான் உங்கள் வீட்டிற்கு வந்து தமிழைக் கற்றுக் கொள்ளவும், இணையத்தில் எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக் கொள்ளவும் சித்தமாக இருக்கிறேன்.

   அப்படியே புல் ஸ்டாப் வைக்காமல் எப்படி எழுதுவது என்பதையும், பிழை இல்லாமல் எழுதுவது எப்படி என்பதையும் சொல்லித் தரவும்.

   தனித்தமிழில் எழுதுவது என்றால் எப்படி? இலட்டு, இலலிதா, இசுடாலின், குசுபு என்பது மாதிரி எழுதுவதா அல்லது விடயம், விதயம், ஆகத்து, பத்தி என்பது மாதிரி எழுதுவதா என்பதை அவசியம் விளக்கவும்.

   தங்களது பயிற்சிக்கு என்ன மாதக் கட்டணம் என்று தெரிவித்தால் அதை அளிக்க அடியேன் தயாராக இருக்கிறேன்.

   அதுபோல், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வலைமனைகள்/வலைப்பூக்கள் எல்லாமே தனித்தமிழ் கொண்டவையா என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

   நன்றி தங்களின் மேலான கருத்துக்கு. அவசியம் திருத்திக் கொள்கிறேன் ஐயா. மன்னிக்கவும் ”அய்யா”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s