சுகர் ஜீவநாடி

சுகர் ஜீவநாடி

suka brhamam

சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

இவரது காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி;

தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

 

மானுட குலம் உய்ய அவதரித்த இந்த மகான் இன்றும் மானுட சேவை செய்து வருகிறார் தமது ஜீவ நாடி மூலம். இந்நாடி மூலம் பலன்கள் கூறி வருகிறார் ஸ்ரீ குமார் குருஜி. இவரிடம் உள்ள நாடியின் பெயர் ”சுகர் மார்க்கண்டேய நாடி”  திரைப்பட மற்றும் நாடக நடிகர் எஸ்.வி. சேகர் உட்படப் பல புகழ் பெற்ற மனிதர்களுக்கு ஸ்ரீ சுக ப்ரம்ம மகரிஷிதான் குரு. ஆன்மீக வழிகாட்டி.

சுக முனிவர்

இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை மட்டுமல்லாது, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோர்களுக்கு உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும் ‘சுகர் மார்க்கண்டேயன் அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.

இங்கு மற்ற நாடிகளைப் போல விரல் ரேகை, பெயர் போன்ற விபரங்களைக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக இந்த இந்த இராசிக்குரியவர்கள், இன்னின்ன கிழமைகளில் வந்து சுவடி பார்க்கவேண்டும் என்று வரைமுறை உள்ளது. அம்முறைபடிச் சென்று நாடி பார்த்தால் அவரவர்களுக்குரிய பலா பலன்கள் தெரியவரும். பலன்களும் மிகத் துல்லியமாக இருப்பதாக நாடி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நாடி பார்க்கும் முறை

குறிப்பிட்ட கிழமையில் நாடி பார்க்க வருபவர்களிடம் முதலில் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. பின்னர் இறைவழிபாடு நடக்கிறது. அதன் பின்னர் ஸ்ரீ குமார் குருஜியால் நாடி வாசிக்கப்படுகின்றது. அது பாடல் வடிவில் அமைகின்றது. பின்னர் பலன்கள் கூறப்படுகின்றன. நாடி வருவோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை. என்ன தேவையோ, என்ன சிக்கலோ அது பற்றி நாடியில் விரிவாகவும் விளக்கமாகவும் வருகின்றது. அதற்கான பரிகார முறைகளும் கூறப்படுகின்றன. அனைத்தும் சரியாகவே இருக்கின்றன.

ஸ்ரீ குமார் குருஜி இதனை ஒரு இறைப்பணியாகத் தான் செய்து வருகின்றார். இவருக்கு இந்த ஓலைச்சுவடிகள் இவருடைய குருவான ஸ்ரீ ஜெயகாந்தி நாயுடு மூலம் கிடைத்துள்ளன. ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்ததான ‘தொட்டிப்பதி” என்னும் ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராமசாமி. இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும் கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி வந்தார். பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெயகாந்தி நாயுடு, அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச் சூட்டினார். நாயுடுவின் மறைவுக்குப் பின் ஸ்ரீ குமார் குருஜி தமது குரு வழியில் இப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார். தற்பொழுது தொட்டிப்பதி என்னும் சிற்றூரில் சுகர் மகரிஷி மற்றும் முருகனுக்குக் கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் ஆசிரமத்திற்குக் கிளை உள்ளது.

ஸ்ரீ தன்வந்த்ரி விழா, சுகப்பிரம்ம மகரிஷி மகா ஜெயந்தி விழா போன்றவை ஆண்டு தோறும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவர்களது ஆஸ்ரமம் தி.நகரில் அமைந்துள்ளது.

*****

Advertisements

41 thoughts on “சுகர் ஜீவநாடி

 1. I WOULD like to come with my wife who is suffering with body pain, chest pain for the past 03 years. Gone to several medical tests but gone in vein.. that is all good result. she is having sleelesness problem also.
  kindly help me to visit your ashram and give me an appointment to relieve from
  this unstoppable pain.
  thanks.

 2. I’m Ganeson from Malaysia, shall arrive in Chennai on 27th January 2017. I would like to make an appointment to meet Guruji on 30th January 2017. Appreciate your concern on my request. Kindly mail me the address and contact number along with procedures to visit Guruji for Sugar Joditham via .Hope to hear from Guruji soon. Shri Suka Brahma Maharishi Thunai.

 3. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

  கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு சந்திப்பு விவரம் பெற்றுக் கொள்ளுங்கள்.

  அமர்நாத் : MR.AMARNATH AT ASHRAM – 044 2834 2483

  1. பேரன்புடையீர்,

   ஸ்ரீ சுகர் நாடியைப் பற்றியும் ஸுக முனிவரை வழிபட இயற்றப்பட்ட நாமாவளி ஆகியவை அடங்கிய கட்டுரையை கண்டு ஆனந்தப்பட்டேன்.இந்த மின்மடலின் பிரதியை எனக்கும் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

   திருமாலின் ஆயிரம் திருநாமங்களை வர்ணிக்கும் “விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தின் துவக்கிலேயே –

   வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ர-மகல்மஷம்
   பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்
   வ்யாசாய விஷ்ணுருபாய வ்யாசருபாய விஷ்ணவே
   நமோ வை ப்ரம்ஹநிதயே வ்யாசிஷ்டாய நமோ நமஹா

   அதாவது ;

   வசிஷ்டரின் கொள்ளுப்பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புத்திரரும், சுகருடைய
   தகப்பனாரும், மாசற்ற குபோதனருமாகிய வியாசரை வணங்குகின்றேன்

   என்று பாராயணத்தின் முதல் பத்தியிலேயே ஸுக முனிவருக்கும் வணக்கத்தை அறிவித்து திருமாலின் பெருமைகளை விளக்கப்படுகிறது.

   நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நமது தீமைகள் அகன்றிடவும், தேக ஆரோக்கியங்கள் பெறவும்
   பல நன்மைகள் அடைந்திடவும் வேண்டி பல திருத்தலங்களையும், ஆலயங்களையும் சென்று தரிசித்து இறைவனிடம் கோரிக்கைகள் வைத்து வருகிறோம்.அந்த கோரிக்கைகள் ஏற்க்கப்படுமா? என்ற ஐயத்துடன் வாழ்ந்து வருகிறோம் அல்லவா ??

   இறைவன் நமது துன்பங்களுக்கு உடனடியாக தீர்வுகளை நமக்கு எடுத்துரைத்து நமக்கு நல்வழி காட்டுவது பொதுவாக நாம் திரைப்படங்களில் காண்பது மட்டும் தான் .

   கலியுகத்தினில், நாம் பொய் இன்றி மெய்யோடும் பூரண நம்பிக்கையுடன் சென்று வழிபட்டு, நமது
   துன்பங்களிலிருந்து விடுபட சரணாகதி அடைந்து பலனடைய ஒரே ஸ்தலம் ஸுக முனிவரின் ஆஸ்ரமம் ஒன்றே ஆகும்.அனைத்துமே வாழ்வின் விதிக்குட்பட்டே நடக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நமது ஸுகமகரிஷி , நாம் செய்ய வேண்டிய பரிகாரங்களை நமக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்து உரைத்து நமக்கு வர இருப்பதை உணர்த்தி வழிகாட்டுகிறார்.

   இந்த சரணாகதி தத்துவத்தை அனுபவரீதியாக முற்றிலுமாக உணர்ந்து எனது வாழ்க்கையில் பல நன்மைகளை அடைந்தவன் என்ற முறையில், சுகமுனிவரின் பரிபூரண கிருபையை அனைவரும் அடையும் பொருட்டு, சுகமஹரிஷியின் பாதாரவிந்தங்களை வணங்கி விடை பெறுகிறேன்.

   ஸ்ரீ சுகதேவாய நமஹா ….

   சுகதாசன்

   சுந்தரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s