அகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்

ஓலைச் சுவடி

ஜீவ நாடி என்றால் என்ன?

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.

“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். 

 

 ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.

 

இவருடைய முகவரி

Mr. J.Ganesan

Siddhar Arut Kudil

No. 33/56,2nd street

co-operative colony

opp. co-operative bus stop

Thanjavur-7

 தொடர்பு எண் : 9443421627

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்.

 

இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி :  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

 மற்றொரு வழி :  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.

முக்கியமான விஷயங்கள்:

 அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

 பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.

 சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சித்தர்கள் திருவடிக்கே சரணம்

 ***************

42 thoughts on “அகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்

 1. G S karthikeyan சொல்கிறார்:

  ஓம் சரவணா பவ
  அய்யா கணேசன் சந்திப்பதே ஒரு புண்ணியம்!!! என்னை பொறுத்தவரை நமக்கு பாக்கியம் இருந்தால்தான் அவர்களை சந்திக்க இயலும். இந்த மாதம் முதல் வாரத்தில் நான் சென்று இருந்தேன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் அகத்தியர் நாடி பார்க்க உத்தரவு கொடுத்துள்ளார். எனவே நண்பர்கள் அடுத்த வருடம் ஜனவரி இல் அய்யா கணேசன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

  நன்றி
  க ச கார்த்திகேயன்
  மதுக்கூர்

  • ramanans சொல்கிறார்:

   //இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.//

   // பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.

   சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்//

   இதை நீங்கள் படிக்கவில்லையோ? ஆன்மீக விஷயங்களில் மிகவும் பொறுமை தேவை. விதைத்தவுடன் அறுவடை செய்ய முடியாது. அததற்கான நேரமும் காலமும் வர வேண்டும்.

   தங்கள் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இக்கட்டுரையைப் படித்து அங்கு சென்று நாடி பார்த்த மற்றவர்களும் கருத்தினைப் பகிர்ந்தால் அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

   நன்றி.

 2. பிரவீன் குமார் சொல்கிறார்:

  திரு . கணேசன் அய்யாவை பார்த்து நானும் அகத்திய பெருமானின் அருள் பெற்றேன் … நன்றி …..

 3. சுரேஷ் சொல்கிறார்:

  ஜீவ அருள் வாக்கை நாடி வருபவர்கள் உயர்திரு கணேசன் அவர்களை 9443421627 என்ற எண்ணில் பிரதி திங்கள் கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புகொண்டு முன்னனுமதி பெற்று சித்தர்களின் சித்தர்களின் ஜீவ அருள் வாக்கை கேட்டு வாழ்வில் எல்லா நலனும் பெற்று உய்ய மகத்துவம் பொருந்திய அகத்திய பெருமானை வேண்டுகிறேன் .
  சுரேஷ்
  பட்டுக்கோட்டை

 4. s. venkatesan சொல்கிறார்:

  ayyah vanakkam, naan vayathanavan. vazhvin vilimbil erukkindran.ganam adaya alaihiran
  alayathe athu unakkul than erukkirathu endru solkirakal aanal enakku athu pidipadavillai
  vayathin karanamaha [pirarin thunai thavaipaduvathaal] naan angu varuvathu satru kadinamaha
  ullathu enakku uthva vendum agasthya mahan arivippathu enna? pl. help me in this regard
  vanakkam

 5. பா. முருகையன், வடலூர். சொல்கிறார்:

  அகத்திய ஜீவ நாடி பற்றியும். நாடி ஜோதிடர் திரு. கணேசன் அவர்களைப் பற்றியும், தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி!.
  கண்டிப்பாக மார்ச் ஏப்ரல் மாதத்தில் சென்று பார்க்க விரும்புகின்றேன். எல்லாம் இறைவன் செயல்.
  எனக்கு தெரிந்து திருச்சி திருவானைக்காவில் கணபதி நாடி என்னும் ஜீவநாடியை நாடி ஜோதிடர் திரு. செல்ல(செல்வ) முத்து வாசித்து பலன் கூறி வருகின்றார். இவரிடம் நான் ஜீவநாடி பார்த்ததுண்டு. பிற்பாடு இவரது முகவரியை தங்களுக்கு தருகின்றேன்.
  அன்புடன்,
  பா. முருகையன், வடலூர்.
  http://www.siddharkal.blogspot.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s