35வது சென்னை புத்தகக் காட்சி – 35th Chennai Book Fair

எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தக்காட்சி இந்த முறை மாத ஆரம்பத்தில் வந்தது குறித்து மகிழ்ச்சி. (போன முறை சங்கமம் நிகழ்ச்சிகாக மாதக் கடைசியில் வைத்திருந்தார்கள்)

நான் சென்ற அன்று விடுமுறை தினம் என்பதால் நிறையக் கூட்டம் இருந்தது. வாசலில் நிறைய போலீஸார் நின்று கொண்டிருந்தனர். நீண்ட பாதையில் மெல்ல மெல்ல நடந்து அரங்கை அடைந்தேன். வலப்புறம் உள்ள கடைகளில் ஜூஸ், பழங்கள், வேர்க்கடலை, முந்திரி எல்லாம் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தனர். விளம்பரத் தட்டிகளில் வைரங்களும் முத்துக்களுமாய் கவிஞர்களும், எழுத்தாளர்களும் இன்னபிறரும்(?) ஜொலித்துக் கொண்டிருந்தனர். சுஜாதாவும் கண்ணில் பட்டது மகிழ்வைத் தந்தது.

ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்.

”இப்படிப் போங்க” என்று வலப்பக்கத்தைக் காட்டினார் சீட்டைக் கிழித்துக் (?!) கொடுத்தவர்.

நான் மறுத்துத் தலையசைத்து இடப்புறமாகச் சென்றேன்.

கடைசியில் (?) முதல் வரிசையில் “நவீன வேளாண்மை” இருந்தது. அதிலும் நிறையக் கூட்டம் இருந்தது. தொடர்ந்து வரிசையாய் பல பதிப்பகங்கள். உள் நுழைந்து.. வெளி வந்து… கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஆகி விட்டது,  முதல் இரண்டு (வலம் + இடம்) வரிசையை முடிக்க. இப்படியே ஒவ்வொரு அரங்காக ஏறி இறங்கியதில் நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. கால் வலி, புத்தகச் சுமையால் தோள்வலி. மெல்ல நடந்து அரங்கிற்கு வெளியே வந்தபோது பேச்சரங்கு நடந்து கொண்டிருந்தது. உட்காரக் கூட நாற்காலி இல்லாமல் அனைத்தும் நிரம்பி இருந்ததால் கவனமற்று வெளியே வந்து. ஆட்டோ பிடித்தேன். வீட்டை அடைந்தேன்.

இந்தச் சந்தையில் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட் கீழே…

சென்ற முறை மாதிரி ”கன்னா.. பின்னா…” புத்தகங்கள் வாங்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. கடைசியில் ’பர்ஸ்’ பழுத்து விட்டதால் சில புத்தகங்களை வாங்க இயலவில்லை. மீண்டும் புத்தகச் சந்தைக்குப் போக முடிந்தால் இவற்றை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னிமாரா அருகே உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நியூ புக் லேண்டிஸிலோ வாங்க வேண்டியதுதான்.

2012 வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

பயணக் கதை – யுவன் சந்திரசேகர் – காலச்சுவடு

கலங்கிய நதி – பி.ஏ. கிருஷ்ணன் – காலச்சுவடு

நினைவுப் பாதை – நகுலன் – காலச்சுவடு

கானல் நதி – யுவன் சந்திரசேகர் – உயிர்மை

பல நேரங்களில் பல மனிதர்கள் – பாரதி மணி – உயிர்மை

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன் – கிழக்கு

கை – சுஜாதா – கிழக்கு

மேற்கே ஒரு குற்றம் – சுஜாதா – கிழக்கு

இன்னும் ஒரு பெண் – சுஜாதா – கிழக்கு

19 டி.எம். சாரோனிலிருந்து – பவா செல்லத்துரை – வம்சி

பெரிய புராணம் – பிரேமா பிரசுரம்

வாராணசி – எம்.டி. வாசுதேவன் நாயர் – கவிதா

கமலவல்லி – டி.பி. ராஜலட்சுமி – புலம்

நாடி சொல்லும் கதைகள் – ஹனுமத்தாஸன் – வானதி

புலி வளர்த்த பிள்ளை – வாண்டுமாமா – வானதி

மாயாவி இளவரசன் – வாண்டுமாமா – வானதி

மாஜிக் மாலனி  – வாண்டுமாமா – வானதி

தமிழகக் கோட்டைகள் – அம்ருதா

விட்டோபா – மலர்மன்னன் – திரிசக்தி

பாம்பன் சுவாமிகள் – திரிசக்தி

கதை கதையாம் காரணமாம் – சூரிய சந்திரன் – சந்தியா

இசையும் வாழ்க்கையும் – ஜெயந்தி சங்கர் – சந்தியா

ஜே.கிருஷ்ண மூர்த்தி – இரா.சத்தியமூர்த்தி – நியூசெஞ்சுரி

தெற்கே உதித்த சூரியன் – ராவ் – அந்திமழை

இன்னும் வாங்க வேண்டிய புத்தகங்கள்

அறம் – ஜெயமோகன்

இன்றைய காந்தி – ஜெயமோகன்

எனது இந்து மதம் – இந்திரா சௌந்தர்ராஜன்

மூங்கில் மூச்சு – சுகா

தாயார் சன்னதி – சுகா

பழனி சுப்ரமண்ய பிள்ளை – லலிதா ராம்

நினைவு அலைகள் – டி.எஸ்.எஸ். ராஜன்

பொக்கிஷம்  – விகடன்

வெள்ளை மொழி – ரேவதி

பசித்த பொழுது – மனுஷ்ய புத்திரன்


தொடர்புடைய பதிவுகள்:

புத்தகக் காட்சி 2011

புத்தகக் காட்சி 2010

****************************

Advertisements

7 thoughts on “35வது சென்னை புத்தகக் காட்சி – 35th Chennai Book Fair

 1. பழனி சுப்ரமண்ய பிள்ளை பற்றிய புத்தகத்தின் பெயர் துருவ நட்சத்திரம். தங்கள் வலிதளைதிற்கு இதுதான் முதல் தரம்.

  1. அறிவேன் அடியேன். அது அவசரத்தில் தட்டச்சிய பிழை. இரண்டாம் முறை சென்றும் அந்தப் புத்தகத்தை வாங்க மறந்து விட்டேன். ஆனால் அதற்கு பதிலாக ’எல்லார்வி’ பழனி சுப்ரமண்யப் பிள்ளையைப் பற்றி எழுதியிருந்த அரிய நூல் கிடைத்தது. வருகைக்கு நன்றி!

  1. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரை விடுமுறை நாட்கள் ஏதுமின்றி (தேசிய விடுமுறை தினங்கள் தவிர) இயங்கும் ஒரு புத்தகச் சந்தைதான் அது.

   அங்கு வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 10% கழிவு உண்டு.

   பல பிரபல பதிப்பகங்களின் நூல்கள் (ஆங்கிலம்/தமிழ் இரு மொழியிலும்) அங்கு கிடைக்கிறது.

   கூட்ட நெரிசல் இல்லாமல் நின்று நிதானமாக ஒவ்வொரு நூலாகப் படித்துப் பார்த்து வாங்கலாம்.

  1. சார் மறக்க முடியுமா அவரை. சின்ன வயதில் அவர் மூலமாகத் தானே சிறுவர் கதைகள் அறிமுகமாகின. அந்த ஆர்வத்தில் வாங்கினேன். மற்றுமொரு விஷயம் விலையும் மிகக் குறைவாக இருந்தது. வாண்டுமாமா இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். 125க்கு மேல் நூல்கள் எழுதியிருக்கிறாராம். பல இப்போதும் சுடச் சுட விற்று விடுகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s