நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 7

முந்தைய பகுதி இங்கே…

ஒருவர் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றால் பொதுவாக கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்படும்.

1)     தங்களுடைய தகப்பனார் அரசாங்கப் பணியாளரா?

2)    தங்கள் தாயாரின் பெயர் அம்பாளின் பெயரைக் குறிப்பதாக இருக்குமா?

3)    தங்கள் உடன் பிறந்தவர் நால்வருக்கு மேலா?

4)    தங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?

5)    நீங்கள் சட்டம் அல்லது மருத்துவம் பயில்பவரா?

6)    உங்களுக்குக் காதல் திருமணமா?

7)    முதல் குழந்தை பெண்தானா?

8)    தகப்பனாரின் பெயர் சிவனைக் குறிப்பதாக இருக்குமா?

9)    மனைவி/ கணவனின் பெயரில் மலரின் பெயர் வருமா?

10)   உங்களுடைய பெயர் முருகக்கடவுளோடு தொடர்புடையதா?

11)    உங்கள் பெயர் வல்லினத்தில் ஆரம்பிக்குமா?

12)   நீங்கள் வளர் பிறையில் பிறந்தவரா?

13)    உங்களுக்கு ஏதேனும் வாகன விபத்து போன்றவை ஏற்பட்டுள்ளதா?

14)   நீங்கள் உத்தராயணத்தில் பிறந்தவரா?

15)   உங்கள் சகோதரிக்கு திருமணம் ஆகி விட்டதா?

16)    உங்கள் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உண்டா?

17)    நீங்கள் சொந்தத் தொழில் புரிபவரா?

18)    நீங்கள் 1, 3, 5 என ஒற்றைப்படைத் தேதிகளில் பிறந்தவரா?

19)  நீங்கள் சர ராசியில் அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் இந்த  ராசிகளில் ஏதாவது ஒன்றில் பிறந்தவரா?

20)    நீங்கள் சொந்த வீட்டில் வசிப்பவரா?

இந்தக் கேள்விகள் சற்று மாறலாம். ஆனால் அடிப்படை ஒன்றாகத் தான் இருக்கும். அதாவது மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வதன் மூலம் உங்களைப் பற்றிய பெரும்பாலான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ள இயலும்.

இந்தக் கேள்விகளை வரிசைப் படி கேட்டால் நீங்கள் அது பற்றித் தெரிந்து கொண்டு விடுவீர்கள் என்பதால் மாறி மாறி கேள்விகள் கேட்கப்படும்.

அதாவது முதலில் உங்கள் பெயரைப் பற்றி கேள்வி வரும். நீங்கள் அதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வீர்கள். பின்னர் உங்கள் தந்தை பற்றியோ உங்கள் தொழில் பற்றியோ மனைவி, குழந்தைகள் பற்றியோ மாறி மாறி கேட்கப்படும். பின்னர் மீண்டும் உங்கள் பெயர் தொடர்பாக வல்லினம்/ மெல்லினமா – முருகன்/சிவன் பெயரா – பிறந்தது வளர் பிறை/ தேய்பிறையா – ராசி சரம்/ ஸ்திரம்/ உபயமா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படும்.

நீங்கள் இவற்றுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொன்னாலே போதும். உங்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக நீங்கள் பிறந்தது வளர்பிறையா என்ற கேள்விக்கு நீங்கள் ’ஆம்’ என்று சொன்னால் நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர் என்பது தெரிய வருகிறது. இல்லை என்றால் தேய்பிறை. இதில் ஏதேனும் ஒரு 15 நாட்களுக்குள் நீங்கள் பிறந்தவர் என்பதை அறிந்து கொண்டு விட முடிகிறது. பிறந்த தேதி ஒற்றைப்படையா, இரட்டைபடையா என்று கேட்பதன் மூலம் உங்கள் பிறந்த நாளை மிக எளிதில் நெருங்கி விடலாம். அது போல சர ராசியில் பிறந்தவரா என்ற கேள்விக்கு ஆம் என்றால் நீங்கள் மேஷம், கடகம், துலாம், மகரம் இவற்றில் ஏதோ ஒன்றில் பிறந்தவர். இல்லை என்றால் மீதி உள்ள எட்டு ராசிகளில் ஏதோ ஒன்றில் பிறந்தவர். அதையும் நுணுக்கமாகக் கேள்விகள் கேட்டு அறிந்து கொண்டு விட முடியும்.

உங்களுடைய தற்போதைய வயதை சரியாகக் கணித்து விட்டால் ஜாதகம் கணிப்பது மிக எளிது. அந்த வயதுக்கான வருடங்களை பின்னுக்குத் தள்ளி அப்போதுள்ள கிரகங்கள் எந்தெந்த வீட்டில் இருக்கும் என்பதை கணக்கிட்டோ அல்லது பஞ்சாங்கத்தை ரகசியமாகப் பார்த்தோ அறிவது மிக எளிது.

இப்படித்தான் நாடி ஜோதிடம் கணிக்கப்படுகிறது.

மற்ற நுணுக்கமான விவரங்களை கர்ண பிசாக்ஷி (அ) கர்ண யக்ஷிணி என்னும் தேவதை உபாசனை மூலம் சொல்ல முடியும். (வெளிநாடுகளைச் சேர்ந்த பலருக்கும் இப்படிப் பலன்கள் சொல்லப்படுகின்றன)

இப்படி சில நாடி ஜோதிடர்கள் செயல்படுகின்றனர். அதே சமயம் குரு பலத்தால், பரம்பரை ஞானத்தால், சித்தர்களின் அருளாசியால், உண்மையான சேவை நோக்கோடு செயல்படும் நாடி ஜோதிடர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் மிக மிகக் குறைவு. அவர்களைக் கண்டுபிடிப்பதும் மிக அரிதாக உள்ளது.

ஆக, நாடி ஜோதிடத்தை நம்பலாமா என்று கேட்டால் நிச்சயம் நம்பலாம். ஆனால் நாடி ஜோதிடர்களில் பலர் அப்படி நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை என்பதே உண்மை. இதற்கு நாடி ஜோதிடர்கள் அனைவருமே போலிகள் என்பது  பொருளல்ல. போலிகள் மிகுந்திருக்கிறார்கள் என்பதே நாம் சொல்ல வருவது. இதை நாம் சந்தித்த நாடி ஜோதிடர்களும்  ஒப்புக் கொண்டனர். ஒப்புக் கொள்கின்றனர். ஒப்புக் கொள்வர். ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.  இந்த நிலை மாற வேண்டும். மாறினால் அது பாரம்பரியமான இந்த தெய்வீகக் கலைக்கும் ஏன் எல்லோருக்குமே நல்லதாக அமையும். 

நாடி ஜோதிடத்தின் படி பரிகாரங்கள் செய்து தொழிலில் சிறந்தவர், குழந்தை பாக்கியம் பெற்றவர், குடும்பப் பிரச்சனை நீங்கியவர், இறைக்காட்சி பெற்றவர், பரம்பரை குடும்ப சாபம் நீங்கியவர் என பல விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியவை இன்னும் நிறைய இருந்தாலும், படிப்பவர்களை உண்மையைப் பற்றிச் சிந்திக்க வைப்பது மட்டுமே எமது நோக்கம் என்பதால் இதோடு இந்தத் தொடர் பதிவுகளை நிறைவு செய்கிறோம். இது வரை இந்தத் தொடரைப் படித்து வந்த அனைவருக்கும் எங்களது நன்றிகள்!

ஸ்ரீ அகத்தியர்

ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

 ————-/\ —————- ||  ————-/\ —————- ||  ————-/\ —————- ||  ————-/\

தொடர்புடைய பிற பதிவுகள்:

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 5

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 4

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 3

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 2

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 1

நாடி ஜோதிடம் உண்மையா- 4

நாடி ஜோதிடம் உண்மையா- 3

நாடி ஜோதிடம் உண்மையா- 2

நாடி ஜோதிடம் உண்மையா – 1

ஜோதிடக் கேள்வி – பதில்கள்

ஜோதிடம் சில கேள்விகள்

********************

Advertisements

16 thoughts on “நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 7

 1. ஐயா, வணக்கம்.
  நான் சுரேஷ் குமார், விருதுநகரிலிருந்து எழுதுகிறேன்.தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இப்படி தயங்கக் கூடும் என்பதால் தான் என் MAIL ID யும் அனுப்பியிருந்தேன். பரவாயில்லை ஐயா.
  ஆனால் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் எனக்குப் புரியவில்லை. அப்படி யாருமே இல்லை என்று எடுத்துக் கொள்வதா, அல்லது உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை என்று எடுத்துக் கொள்வதா, அல்லது எதற்கு MISGUIDE செய்வானேன் என்று நினைக்கிறீர்களா?
  “நான் ஒரு எழுத்தாளன் போலத்தான், எழுதுவதும் அலசி ஆராய்வதும் மட்டுமே என் வேலை”- என்றும், நடுநிலையானவனாகவே இருந்து விட்டுப் போகலாம் என்றும் தான் மவுனம் சாதிக்கிறீர்கள் போலும்.

  1. வணக்கம்

   //இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் எனக்குப் புரியவில்லை. அப்படி யாருமே இல்லை என்று எடுத்துக் கொள்வதா, அல்லது உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை என்று எடுத்துக் கொள்வதா, அல்லது எதற்கு MISGUIDE செய்வானேன் என்று நினைக்கிறீர்களா?//

   எல்லாமே தான். ஐந்து பேருக்கு வழி சொன்னால் 3 பேருக்கு சரியாக உள்ளது. இரண்டு பேருக்கு சரியாக இல்லை.

   ஸ்கந்தர் ஜீவ நாடி மற்றும் கல்லாறில் அகத்திய ஜீவநாடி இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு நேரில் சென்ற அனுபவமில்லை என்பதால் பரிந்துரைக்க இயலவில்லை.

   புதிதாக, உண்மையானதாக, நம்பகமானதாக ஏதேனும் எனக்குத் தெரியவரும்போது நிச்சயம் சொல்கிறேன். நன்றி.

   மற்ற

   1. வணக்கம் ஐயா,
    இப்படி ஓர் வெளிப்படையான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
    பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
    அகத்தியப் பெருமான் அருளால் யாரானேனும் ஒரு நல்ல ஜீவநாடி ஜோதிடரிடம் வாக்கு கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்.

    1. நன்றி சுரேஷ் அவர்களே! உங்கள் தேடலுக்கு விரைவில் தக்க பலன் கிடைக்கட்டும். கணேசன் ஐயா அவர்களை மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். நன்றி.

 2. ஐயா, வணக்கம். என் பெயர் சுரேஷ் குமார். நான் தற்பொழுது விருதுநகரில் வசிக்கிறேன். .தங்கள் பதிவுகளைப் படித்த பின்னர்தான் நான் நாடி ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்தேன்.ஹனுமத்தாசன் ஐயா அவர்களையும் கணேசன் ஐயாஅவர்களையும் பார்த்து சுவடி படிக்கும் பாக்கியம் கிடைத்தன.
  தற்பொழுது கணேசன் ஐயாவும் சுவடி படிப்பதில்லை என்பதால் ஒரு நல்ல ஜீவநாடி ஜோதிடரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மிகுந்த மன உளைச்சள்களாலும் பிரச்னைகளாலும் என் வாழ்க்கையை முடித்துக்
  கொள்ளலாமா என்று கூட அவ்வப்பொழுது தோன்றுகிறது.
  தங்களுக்கு தெரிந்து தற்பொழுது யாராவது அவர்கள் அளவுக்கு உண்மையானர்வளாக இருக்கிறார்களா ஐயா? அப்படி யாராவது இருந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.
  My mail ID is sureshmdu.s@gmail.com
  இந்த உதவியை கண்டிப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன்.
  மிக்க நன்றி ஐயா.

 3. Vanakkam sir..!! Naan oru muslim.. Age 22.. Nanum oru hindu ponnum love panrom.. Avaluku ipo dhan 18yrs aagudhu.. Naanga rendu perume 4years ku apram, “ava college mudichu, jobku ponadhum register marriage pannikalam” nu mudivu panni irukom.. Nan 2weeks munnadi, en friend koopitadhaala, avan kooda “naadi jodhidam” paaka ponen.. En frnd oru ponna love panraan.. Avanuku “thiramana kaandam” paarthapo, avanuku vara koodiya wife pathi details sonnanga.. Apdi avanga sonna details-um, avan yaara love panrano, andha ponnoda details um accurate ah match aachu.. Nanum impress aagi enakum “thirumana kaandam” paathen.. Nanum oru ponnum sincere ah love panrom.. avaru enna pathi “podhu kaandam” paathaaru.. palangal accurate ah sonnaru.. Family, work, education pathi ellame correct ah sonnaru.. Enaku avar solla solla “naadi jodhidam” mela nambikai vandhuchu.. Naan avaru sonna “thirumana kaanda” palangal ketu shock aagiten.. “unganaku 4yrs ku apram marriage aagum.. Ungaluku munnorgal itta saabam iruku.. Adhanaala “IRANDU DHAARA DHOSHAM”iruku.. 80% “ARRANGE MARRIAGE” dhan nadakkum.. Adhuvam pala pengal paathu romba poraatam ku piragu mrg nadakkum..” apdinu sonnaru.. Nan “love mrg nadakaadha sir” nu avar kitta keten.. “peria problem aagum.. Edhirpu varum.. vaaipugal miga kuraivu.. “Arranged mrg” dhan ungaluku nalla irukum.. Adhayum meeri “love mrg” pannalum, andha ponnu moolamaaga mana kastam , problem erpadum.. 6 months la pirinjudu veenga.. “Mrg”-ku munnadiye kooda, unga lover ungala vittu pirinju poyiduvaanga.. ” nu solraaru.. Idha ketu Nan romba bayandhuten sir.. Sariya saapidama, thoongaama feel pannite irundhen.. wex aagiten.. ava family lower middle class dhan.. Ava ipo dhan 1st year college padikiraa.. Avanga parents eduthu sonna purinjukara type.. Adha vida, Naanga oruthar mela oruthar uyiraa irukom.. Pinna epdi enga mrg nadakaama pogum.. En lover kitta sonnadhuku “poda adhelam nambaadhe.. Nan enna aanalum unna dhan mrg pannipen.. Baya padadhe..” -nu confident ah solraa.. Nan enoda amma kitta kuda pesi enga mrg ku sammadham vaangiten.. 4yrs ku apram avalaye mrg panniko nu strong ah sollitaanga.. Irundhalum bayama iruku sir.. “Thirumana kaanda” palangal elarukume balikumaa..?? Pls sir enaku reply pannunga..

  1. நான் என்ன சொல்ல?…

   சூழலைப் பொறுத்தே முடிவுகள் அமையும். அந்தச் சூழல்களை நாடியால் முன் கூட்டியே கணிக்க முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் அது 100% சரியாக நடக்கும் என்றும் சொல்ல முடியாது. எல்லாம் மன உறுதியைப் பொறுத்தே அமைகிறது. நீங்கள் மன உறுதியோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். உங்கள் அன்பும் காதலும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் வல்ல இறைவனே உங்களை இணைத்து வைப்பார். குழப்பம் நீங்கி, நம்பிக்கையோடு இருங்கள். இன்ஷா அல்லாஹ்!

  1. நன்றி தாயுமானவன், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். அவசியம் வெளியிடுங்கள்.

   யார் சரியாக ”ஜீவநாடி” படிக்கின்றார்கள் என்ற உண்மையையும் சொன்னால் அது வாசகர்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி.

   1. மேட்டுப்பாளையம் அருகில் ‘கல்லாறு’ என்னும் ஊரில் ‘அகத்தியர் ஞான பீடம்’அமைந்துள்ளது. இங்கு ஜீவ நாடி பார்க்கவிருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு பயன் அடையுங்கள்.

 4. சார், வணக்கம்.

  எளிதான முறையில் எழுதின இந்த கட்டுரை படித்துவிட்டு மனதில் ஒரு குதூகலம் எழுந்தது. மேற்கண்ட கேள்விகளில் இதுபோன்ற இன்னும் சில கேள்விகள் add பண்ணி நாங்கள் ஒரு பிரயோகமே செய்தோம். அதில், நீங்கள் சொன்னது போல் கேள்விகள் மூலமாகவே ஒருவரைப் பற்றிய தகவல்கள் அல்லது விவரங்கள் தெரிந்து கொள்ள இயலுமா என்று தேடிப் பார்க்க முயன்றினோம்.

  உண்மையாக சொல்லப்போனால், நமக்கு இந்த காரியம் சாத்தியமே ஆகவில்லை. வெவ்வேறு விதமாக பண்ணிப் பார்த்தாலும் கையில் ஒன்றும் படவில்லை. இருந்தாலும் நீங்கள் எழுதினதில் தத்தியம் இருக்கிறதென்றே தோன்றும்.

  நீங்கள் விவரித்த இந்த பிரயோகத்தை; நாடி வாசிப்போரை விட வேறு யாராவது வெற்றிகரமாக செய்து விட்டிருப்பார்களா?

  என் தாய்மொழி தமிழல்ல. என் தமிழில் எங்கு பிழைகள் கண்டால் தயவு செய்து காட்டிவிடவும். திருத்துக்கொள்கிறேன்.

  நன்றி.

  1. ஐயா..

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நாடி ஜோதிடம் பற்றி நீங்கள் செய்திருக்கும் ஆராய்ச்சிகளை நான் முன்னரே அறிவேன். நீங்கள் அகத்தியர், காகபுஜண்ட மகரிஷிகளின் அருள் பெற்றவர் என்பதும் எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை “நாடிஜோதிடம்” என்பது உண்மையான, தொன்மையான ஒரு கலைதான். ஆனால் தற்போது நாடிஜோதிடர்களில் பலர் அந்த தொன்மையான கலையை பாதுகாப்பதை விட்டு விட்டு பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்டு பிழைப்பதில் அக்கறை காட்டுகின்றனர். பல போலிகள் இத்துறையில் ஊடுருவி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

   நான் என்னுடைய 19 வயதிலிருந்து இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஆராய்ந்து வருகிறேன். கே.பி. ஜோதிடத்திற்கும் நாடி ஜோதிடத்திற்கும் ஏதோ ஒரு வகையில் நுணுக்கமான தொடர்பு இருக்கிறது. அதுபோல பிருஹத் ஜாதக பலன்களோடு நாடி ஜோதிடப் பலன்கள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.

   எல்லாம் காலத்தை வகுத்து, பகுத்து, தொகுத்துக் கூறுவதன் சூட்சுமம் தான். ஓரளவுக்கு மேல் சாதாரண மானுடர்களால் அதன் உண்மையை உணர்ந்து கொள்ள இயலாது. முடியவும் முடியாது. முனிவர்கள், சித்தர்கள், இறையருளின்றி இதன் உண்மையை முழுமையான உணருதல் முடியாது.

   ஸர்வம் சக்தி மயம்!! நன்றி

 5. நீ ஒரு நாடி ஜோதிடனாக இருந்திருக்கிஆய். ஏதோ காரணத்தால் உன்னைத் துரத்தி விட்டனர். அந்தப் பொறாமையில் வயிற்றெஸ்ரீச்சலில் இப்படி எழுதிருக்கிஆய். நீ ஒரு திருடன். நன்றாக இருக்க மாட்டாய். குரு துரோகி. தொஇழ்ல் ரகசியங்களஒ வெலியே சொன்ன பாவி. உன்னை நாங்கள் என்னசெய்யப் போகிறோம் என்று பொருத்திருந்து பார்.

  1. ஐயா…

   உங்களது அறிவின் திறன் கண்டு வியக்கிறேன். எப்படி இந்த ‘உண்மை’யைக் கண்டு பிடித்தீர்களோ தெரியவில்லை!. அமரர் சுஜாதா சொல்வது போல ஏதாவது ‘இக்ஷிணி’ வேலையா? அல்லது தங்களிருக்கிருக்கும் தெய்வீக அருளாற்றலால் கண்டு பிடித்தீர்களா என்பது தெரியவில்லை, சுவாமி! தேவரீரின் திருக் கமலப் பாதங்களை … அடியேன்…. சரி விடுங்கள். தங்களது ஆசிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி! நீங்கள் செய்யப் போவதை சற்று விரைவாக செய்தால் நல்லது. ஏனென்றால் என்னால் ரொம்பப் பொறுமையாக எல்லாம் இருக்க முடியாது. வயதாகி விட்டது 😉

   //தொஇழ்ல் ரகசியங்களஒ வெலியே சொன்ன பாவி.//

   அப்படியானால் இதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். சபாஷ்.

   சரி. உங்கள் தமிழாசான் யார் என்று அடியேன் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இதிலேயே இவ்வளவு தவறுகள் வருகின்றனவே, நாடி ஜோதிடப் பாடல்களை நோட்-புக்கில் எழுதும் போது எவ்வளவு தவறுகள் வருமோ? 😦

   வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.