நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 6

முந்தைய பகுதிகள்

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 5

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 4

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 3

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 2

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை?  பகுதி – 1

நாடி ஜோதிடம் உண்மையா- 4

நாடி ஜோதிடம் உண்மையா- 3

நாடி ஜோதிடம் உண்மையா- 2

நாடி ஜோதிடம் உண்மையா – 1

ஜோதிடக் கேள்வி – பதில்கள்

ஜோதிடம் சில கேள்விகள்

நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 5 என்ற இந்தப் பதிவிற்கு குறிப்பிட்டத்தக்க அளவில் எந்தப் பின்னூட்டமும் கேள்விக்கான பதிலும் வரவில்லை என்பதிலிருந்தே நண்பர்களுக்கு இந்த விவாதத்தில் இருக்கும் ஆர்வம் புரிகிறது.

நாடி ஜோதிடத்தில் உண்மையான நாடி ஜோதிடமும் உள்ளது. ஆனால் அது வெகு குறைவு. பெரும்பான்மை போலிகள்தான். அந்த போலிகள் வேறு ஏதாவது சுவடிகளை ‘நாடிச் சுவடிகள்” என்று கூறியும், பொய்யாக ஓலைச்சுவடிகளைத் தயாரித்து அதனை ”நாடி ஜோதிடச் சுவடிகள்” என்று சொல்லியும் படித்து ஏமாற்றி வருகின்றனர் என்பதை இதுவரைப் பார்த்தோம்.

அப்படிப்பட்ட சில சுவடிகளில் சில வார்த்தைகளை, எழுத்துக்களை, பெயர்களை, மாதங்களை வரிசையாக கூட்டெழுத்தாக எழுதி வைத்திருப்பர். அந்த எழுத்துக்கள் ஒன்றன் மீது ஒன்று கலந்து புரியாத வகையில் இருக்கும். அதற்கு “கூட்டெழுத்து” என்று பெயர். நாடி ஜோதிடர் ‘உங்கள் பெயர் இதோ இருக்கிறது பாருங்கள்’ என்று படித்துக் காண்பிக்கும்போது அந்தப் பெயர் இருப்பது போலவே தோன்றும். அதே சமயம் உற்று கவனித்தால் வேறு பெயர்களையும் நம்மால் கண்டறிய முடியும். இப்படித்தான் நாடி ஜோதிடர்கள் ஏமாற்றுகின்றனர். நாமும் ‘நம் பெயரையே முனிவர் குறிப்பிட்டிருக்கிறார்’ என்றெண்ணி ஏமாந்து விடுகிறோம்.

அது சரி, நம் பெயரைப் போன்று தோற்றமளிக்கும் ஓலைகளை எப்படி அவர்களால் முன்னாலேயே தயாரிக்க முடிந்திருக்கும் என்றால் ஒரு ஓலைச்சுவடியில் அந்த ஒருவர் பெயர் மட்டுமல்ல; கிட்டத்தட்ட 15, 20க்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கும். அந்தப் பெயர் வரிசையைக் கண்டுபிடிக்க வேண்டியதால்தான் ”உங்கள் பெயர் சகரத்தில் ஆரம்பிக்கிறதா?”, ”ககரத்தில் ஆரம்பிக்கிறதா”, ”இரண்டு சீர்கள் பெயரில் உண்டா?” என்றெல்லாம் கேட்கின்றனர். நாம் பதில் சொல்லச் சொல்ல அது போன்ற பொதுப் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கொண்டு வந்து படித்துக் காண்பிக்கின்றனர். அதில் எழுத்துக்கள்/வார்த்தைகள் கூட்டெழுத்தில் இருப்பதால் ஓரளவுக்கு நம்மாலும் எழுத்துக் கூட்டி அதைப் படிக்க முடியும். அப்படித்தான் ஓலைச்சுவடியில் நமது பெயர்கள் இடம் பெறுகின்றன. இது போலி நாடி ஜோதிடர்கள் பயன்படுத்தும் டெக்னிக். மேலும் ஓலைச்சுவடியைப் படித்துப் பார்த்தாலே பெரும்பாலும் தெரிந்து விடும் அது உண்மையான நாடி ஜோதிடச் சுவடியா? போலியா, மூல ஓலையா, படி ஓலையா என்பது.  (சில சமயங்களில் உண்மையான ஓலைச்சுவடிகள் கரையான் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது ஓலைச்சுவடிகள் படி எடுத்து வைக்கப்படுவது உண்டு. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்)

இப்போது நண்பருக்குக் கிடைத்த ஓலையை மீண்டும் கீழே தந்திருக்கிறேன். இதில் தான் எத்தனை பெயர்கள்…

ஓலைச்சுவடி

முதல் வரியிலிருந்து நம்மால் பொதுவாகப் படிக்க முடிந்த சில பெயர்களைப் பார்ப்போம்.

……… – கிருட்டினமூர்த்தி – சுப்பிரமணியன் – ரத்தினம்மாள் – இராணி – ………….

அருணாசலம் – மங்களா – ………………………..

இப்படி இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. நுணுக்கமாக ஆராய்ந்தால் சரோசா, கிருட்டிணவேணி, ஆதி நாராயணன், அவிட்டம், ஆனந்த் என்று இன்னும் நிறைய பெயர்கள் காணக் கிடைக்கின்றன.

அதுசரி. இந்த ஓலையைப் பெற்ற நண்பரின் பெயர் என்ன?

அது கடைசி வரியில் இருக்கிறது

காளிராசா – மணி – கனக மணி – இடை – குரோதன – …. மண முயற்சி

நண்பரின் பெயர் –  காளி ராஜ்

அவரது தந்தை பெயர் – மணி; தாயார் – கனக மணி

இடையில் பிறந்தவர். அதாவது மூத்தவர், இளையவர் என்று இருவர் இருக்க இவர் நடுவில் பிறந்தவர். மண முயற்சி – இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

”மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மை” என்கிறார் நண்பர்.

அப்படியானால் இது உண்மையான நாடி ஜோதிடச் சுவடிதானா?

அகத்திய முனிவரால் அவரது திருக்கரத்தால் எழுதப்பட்டது தானா?

நாடி ஜோதிடம் என்பது பெரும்பாலும் உண்மைதானா? அதிர்ஷ்டமில்லாதவருக்குத் தான் சுவடிகள் கிடைக்காமல் அல்லது பலன்கள் சரியாக பலிக்காமல் மாறிப் போகிறதா?

சரி.. இது நண்பரின் ஓலைச் சுவடி. அவருக்குரியது. அவர் வாழ்க்கையை மட்டுமே குறிப்பது என்றால் அதே சுவடியில் ஏன் கிருட்டினமூர்த்தி – சுப்பிரமணியன் – ரத்தினம்மாள் – இராணி – அருணாசலம் – சரோசா, கிருட்டிணவேணி, ஆதி நாராயணன், அவிட்டம், ஆனந்த் என்று பலப் பலப் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

நண்பரின் சுவடியில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் வரக் காரணம் என்ன?

அப்படி இல்லை. இது இது போன்ற பலரது விவரங்களைக் குறிக்கும் பொதுவான சுவடி என்றால் ஜோதிடர் ஏன் இந்த ஓலைச் சுவடியை நண்பரிடம் கொடுத்தார்?

பணத்தாசை தான் காரணமா?

ஒருவேளை இந்த ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிருட்டினமூர்த்தி, சுப்பிரமணியன், ஆனந்தன், அருணாசலம் போன்றவர்கள் நாடி ஜோதிடம் பார்க்க வந்தால் அவர்களுக்கு எப்படிப் பலன் சொல்லுவார்கள்?

கீழ்கண்ட சுவடிகள் நண்பரின் நண்பருடையது. இவற்றையும் பாருங்கள்.

நண்பரின் நாடி

இதிலும் அந்தோணி, மேரி, எழில், ஸ்ரீ பிரியா,  நிறைய பெயர்கள், குறிப்புகள் இருக்கின்றன. இவற்றை நண்பர்களிடம் கொடுத்து விட்டதால் இந்தப் பெயருக்குரியவர்கள் வந்தால் நாடி ஜோதிடர்கள் என்ன செய்வார்கள்?

”ஓலைச்சுவடி இல்லை” என்று திருப்பி அனுப்பி விடுவார்களா?

அல்லது வேறு ஓலை அல்லது பிரதி ஓலைகள் இருக்குமா?

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

(சிந்திப்போம் தொடர்வோம்)

Advertisements

11 thoughts on “நம்பலாமா, நாடி ஜோதிடத்தை? பகுதி – 6

 1. நாடி என்பது தமிழ் மொழி பற்றிய அறிவு இல்லாதவரிடம் செய்யும் ஏமாற்றும் வேலை எப்படி இறைவனுக்கு ஸமஸ்க்த்ருதம்
  தான் தொழும் மொழி என

 2. Hello sir..!! Naan oru muslim.. Nan oru hindu ponnum love panrom.. Nanum 2weeks munnadi en frnd sonnadhaala,”naadi jodhidam” paaka ponen.. En frnd oru ponna love panraan.. Avanuku “thiramana kaandam” paarthapo, avanuku vara koodiya wife pathi details sonnanga.. Apdi avanga sonna details-um, avan yaara love panrano, andha ponnoda details um accurate ah match aachu.. Nanum impress aagi enakum “thirumana kaandam” paathen.. Nanum oru ponnum sincere ah love panrom..avaru enna pathi “podhu kaanda” palangal paathu accurate ah sonnaru.. Family pathi ellame sonnaru.. Enaku avar solla solla “naadi jodhidam” mela nambikai vandhuchu.. Naan avaru sonna “thirumana kaanda” palangal ketu shock aagiten.. enaku 4yrs ku apram mrg aagum.. Ungaluku munnorgal itta saabathunaala “IRANDU DHAARA DHOSHAM”iriku.. 80% “ARRANGE MARRIAGE” dhan nadakkum apdinu sonnaru.. Nan “love mrg nadakaadha sir” nu avar kitta keten.. “peria problem aagum.. Edhirpu varum.. Adhayum meeri love mrg panna kooda 6months la pirinju poyiduvom” nu solraaru.. Nan romba bayandhuten sir.. Sariya saapidama thoongaama feel pannite irundhen.. wex kooda aagiten.. Naanga oruthar mela oruthar uyiraa irukom.. En lover kitta sonnadhuku “poda adhelam nambaadhe.. Nan enna aanalum unna dhan mrg pannipen.. Baya padadhe..” -nu confident ah solraa.. Nan enoda amma kitta kuda pesi enga mrg ku sammadham vaangiten.. 4yrs ku apram avalaye mrg panniko nu sollitaanga.. Irundhalum bayama iruku sir.. “Thirumana kaanda” palangal elarukume balikumaa..?? Pls sir enaku reply pannunga..

 3. என்னைப் பொருத்தவரை, அவற்றைத்தேடிச் சென்று பெற்று பார்க்கப்படும் பலன்களைவிட, நமக்கு தானாக ஓலைச்சுவடி மூலம் பார்க்கபடும் சந்தர்ப்பத்தால் சொல்லப்படும் பலன் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மேலும் இன்று ஏ.சி அறையில் இருந்து பார்க்கப்படும் நாடிகள், நாடிஜோதிடருக்கு தெய்வ கடாட்சம் இருந்தால் மட்டுமே உண்மையாக இருக்கலாம். அவர்களை கண்டறிய முட்படுவது மண்ணில் எள்ளைப்போட்டு தேடுவதுக்கு சமானம்.

  பொதுவாக வேலைக்கு சாப்பாடு மட்டுமே உண்டு நாடி வாசிப்பவர்கள் உண்டு, அவர்கள் எந்த வசதி வாய்ப்பையும் நம்பி இருக்க மாட்டார்கள். அவர்கள் தெய்வ அருள் பெறவர்களாகவே இருப்பார்கள். மிகச்சரியாக பலிக்கவும் செய்யும். ஆனால் அவர்களை சந்த்திக்கும் பாக்கியம் கிடைத்தால் மட்டுமே நாம் பாக்கிவான்கள்.

  நான் ஒரு நாடி ஜோதிடரை என் நண்பர் ஒருவர் உதவியுடன் சந்திதேன். அதுவும் என் நண்பரி வீட்டில். காரணம் அந்த ஜோதிடருக்கு வசதி வாய்ப்பில் விருப்பம் இருக்கவில்லை, அவர் ஒரு நாடோடி போல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார். யார் கூப்பிட்டலும் ஓடோடி சென்று பலன் சொல்வர். நான் அவரை பார்த்ததில்லை, அவரும்தான் என்னைப் பார்த்ததில்லை.

  ஒலைச்சுவடி வாசித்தார்…(நான் எற்கனவே ஒருவரிடம் நாடி பார்த்திருந்தேன், கடந்த காலம் சரியாக இருந்தது ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடைபெறவில்லை, அனைத்தும் பொய். இதை ஏற்கனவே என் வீட்டில் சொல்லியிருத்ததான் இந்த முறை வீட்டில் சொல்ல வேண்டாம் என்ற முடிவுடன் இருந்தேன்)….நாடியில் இரண்டு வரிதான் படித்தார், நாடிக்கட்டை அப்படியே வைத்துவிட்டார். என்னால் இதற்குமேல் வாசிக்க முடியாது. நாடியில் உங்கள் அம்மா முருகன் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டான் மட்டுமே தொடர முடியும் என்றுசொல்லிவிட்டார்.

  பிறகு வீட்டு போன் போட்டு வீட்டிலேயே தேங்காய் உடைத்து சாமி கும்பிடுமாறு சொல்லவேண்டியதாயிற்று. அதன்பின்பே வாசிக்க ஆரம்பித்தார். என் ஜாதகக்கட்டங்களை வரந்து கொடுத்தார் (பொதுவாக அவர் கட்டங்கள் கொடுப்பதில்லை என்னுடைய வேண்டுதலுக்கு இணங்கா கொடுத்தார்). அவர் நாடியை பாடல் வடிவத்தில் படிப்பார் அதுவிம் நாமே எழுதிக்கொள்ள வேண்டும், நானே மொபைலில் அவற்றைப்பதிவு செய்துகொண்டேன், நோட்டிலும் எழுதிக்கொண்டேன்.

  பின்னர் பலன்களை சொல்ல ஆரம்பித்தார். என் அண்ணன் வாழ்க்கையைப்பற்றியும் சொன்னார். கடந்த காலங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. என் அண்ணனின் மனைவிக்கு அபார்சம் மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று சொன்னார் (நாடி பார்த்த 2 வாரத்திற்கு அப்புரம் அண்ணன் மனைவிக்கு அபார்சன் ஆகிவிட்டது, அதுவும் நாடி பார்த்த இரு வாரத்திறு அப்புறம் ஒரு தேதி சொன்னார். அந்த தேதியில் இருந்து பரிகாரம் செய்ய ஆரம்பித்தால் இதை தவிர்க்கலாம் என்று சொல்லியொருந்தார்).

  28, 29, முப்பதாவது வயதிற்குள் திருமணம் நடைபெறும் என்று சில்லியிருக்கிறார். தற்போது முப்பதாவது வயது அக்டோபர் 21ல் முடிகிறது. வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், பார்ப்போம். என் மனைவி முற்பிறவியிலும் மனைவியாக இருந்தவராம் பார்வதி என்ர பெயரில். அவரை திருமணத்திற்கு பினு எளிதாக அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லியுள்ளார், பார்ப்போம்.

  1. ஆஹா. அற்புதம். அதே பெயரில் மனைவி அமைந்தபின் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். நாடியின் உண்மைத் தன்மைக்கு அது உறுதி சேர்க்கக் கூடும். 🙂

 4. தற்கால நாடி ஜோதிடம் நிச்சயமாக உண்மையல்ல, நானும் சென்னை மற்றும் பெங்களூரில் நாடி ஜோதிடம் பார்த்தேன், நிச்சயமாக இது பணம் சம்பாரிக்க ஒரு வழி அவ்வளவே, மற்றபடி ஒரு காலத்தில் உண்மையான நாடி ஜோதிடர்கள் இருந்திருக்கலாம், தங்கள் பதிவுகள் மிகவும் பயனாக உள்ளது, நிறையபேர் போலி நாடி ஜோதிடர்களை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் வீண் செய்கின்றனர், தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி. – பிரபு

  1. மிக்க நன்றி பிரபு ராஜா. இந்தக் கட்டுரை ஒரு சிலருக்காவது பயனளித்திருக்குமாயின் மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s